பிறரை எடை போடுவதில் கில்லாடிகளாக இருக்கும் மே மாதத்தில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களாக தான் இருப்பார்கள்.

may-born

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் சில தனிப்பட்ட குணாதிசயங்கள் இருக்கும். பிறந்த மாதத்தை வைத்து ஒருவரின் குணநலன்களை ஓரளவு சரியாக கணித்து விட முடியும். இவ்வகையில் மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரியான குணாதிசயங்கள் இருக்கும்? அவர்களிடம் உள்ள கெட்ட குணங்கள் என்ன? நல்ல குணங்கள் என்ன? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? என்பதைப் பற்றிய சுவாரஸ்சியமான தகவல்களை இப்பதிவில் நாம் காணலாம் வாருங்கள்.

may

மற்ற மாதங்களை விட மே மாதத்திற்கு சில சிறப்பான விஷயங்கள் உள்ளன. நீங்கள் மே மாதத்தில் பிறந்தவராக இருந்தால், உங்களுடன் பழகுபவர்களுக்கு நிறைய நன்மைகள் உண்டாகும் என்றே கூறலாம். நீங்கள் தனித்துவமானவர்கள். வித்தியாசமானவர்கள். பரந்த மனப்பான்மை படைத்தவர்கள். அதிக கோபம் உங்களுடைய பலவீனமாக இருக்கும். கோபம் வந்தால் சுற்றி இருக்கும் யாரை பற்றியும் நீங்கள் கவலை கவலைப்படுவதே இல்லை. கோபம் தணிந்த பின்பு கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாமோ! என்ற எண்ணம் உங்களிடம் மேலோங்கும்.

எந்த ஒரு சூழ்நிலையிலும், எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அதனை எதிர் கொள்வதில் நீங்கள் அடுத்தவரின் உதவியைத் தேடி போக மாட்டீர்கள். உங்களை நீங்கள் முதலில் நம்புவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும். உங்களால் முடியாதது எதுவும் இல்லை என்ற மனப்பக்குவம் உங்களிடம் அதிகம் காணப்படும். யாராவது ஏதாவது ஒரு செயலை ஒப்படைக்கும் பொழுது, உங்களுக்கு அது தெரியாத விஷயமாக இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்பீர்கள். தெரியாது என்று ஒதுக்கிவிட உங்களுக்கு தெரியாது.:

happy-friends

நீங்கள் எல்லா சமயங்களிலும் கலகலப்பாக இருப்பதில்லை. சில இடங்களில் நீங்கள் கலகலப்பாக இருக்கும் பொழுது அனைவராலும் ஈர்க்கபடுவீர்கள். அப்படி மற்றவர்களுக்கு பிடித்தமானவர்களாக நீங்கள் இருப்பதை, மனதிற்குள்ளேயே ரசிப்பீர்கள். நீங்கள் தனிமையை விரும்பும் பொழுது, யாருக்கும் முன்னுரிமை கொடுப்பதில்லை. உங்களின் இலட்சியங்களும், கனவுகளும் மிகவும் எதார்த்தமானதாக இருக்கும். உங்களால் என்ன முடியுமோ? அதை நோக்கிய பயணத்தில் முன்னேறி சென்று கொண்டே இருப்பீர்கள். பகல் கனவு காண்பதை நீங்கள் விரும்பவதில்லை. நடக்காத ஒரு விஷயத்தைப் பற்றி மனக்கோட்டை கட்டி காலத்தை வீணாக்குபவர்களை உங்களுக்கு பிடிப்பதில்லை. நேர்மறையான சிந்தனை உங்களின் பலமாக இருக்கும்.

- Advertisement -

பணத்தைப் பற்றி உங்களுடைய வியூகம் வித்தியாசமானதாக இருக்கும். பணத்தை ஈட்டுவதில் உங்களுக்கு திறமைகள் இருந்தாலும், பணம் மட்டுமே உங்களுடைய குறிக்கோளாக இருப்பதில்லை. அதிகம் செலவழிக்கும் நபராக இருப்பீர்கள். எனினும் செலவை கட்டுக்குள் வைக்கும் கலையையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். மனதுக்குப் பிடித்த விஷயங்களை உடனுக்குடன் செய்து விடுவீர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம், என்ற சோம்பேறித்தனம் உங்களிடம் குறைவாக தான் இருக்கும். உங்களின் நட்பு வட்டம் குறுகியதாக இருப்பினும் மிகவும் உறுதியானதாக இருக்கும். உங்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் கடைசி வரை அவர்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பீர்கள்.

mutton 2

பொழுதுபோக்கு, விளையாட்டுகள், செய்திகள் பற்றிய விழிப்புணர்வு, புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது போன்ற விஷயங்களில் உங்களுக்கு ஈடுபாடு அதிகமாக இருக்கும். நீங்கள் ஆணாக இருந்தால், பெண்களுக்கு மிகுந்த மரியாதை தருபவர்களாக இருப்பீர்கள். நேர்த்தியான உடை அணியும் பெண்களை உங்களுக்கு மிகவும் பிடிக்கும். உடை மீது அதிக கவனம் செலுத்துவீர்கள். அசைவ உணவு பிரியர்களாகவும் இருப்பீர்கள். சில நேரங்களில் மூர்க்கத்தனமாகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வீர்கள். அந்த சமயத்தில் உங்களை கட்டுப்படுத்த யாராலும் முடியாது. நீங்களே சமாதானம் அடையும்வரை மற்றவர்களால் எதுவும் செய்ய இயலாது. மிகுந்த பிடிவாத குணம் படைத்தவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு பிடித்தவர்களை யாருக்காகவும் எதற்காகவும் நீங்கள் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். நீங்கள் மிகவும் தைரியசாலிகள். உங்களுக்கு அழுவது என்பது பிடிக்காத செயலாக இருக்கும்.

நீங்கள் மற்றவர்களை கணிப்பதில் கெட்டிக்காரர்களாக இருப்பீர்கள். பார்த்தவுடன் சிலரை இவர்கள் இப்படி தான் என்று கணித்து விடுவீர்கள். அதில் 90 சதவீதம் சரியாக இருந்து விடும். மற்றவர்களிடம் குறை காண்பதில் முதலிடம் வகிப்பீர்கள். உங்களைப் போன்றே மற்றவர்களும் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் இருப்பீர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான குணங்களைக் கொண்டுள்ளார்கள் என்பதை நீங்கள் உணர்வதில்லை. காதல் விஷயத்தில் கண்ணியமானவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு நிகரான நபரை தேர்ந்தெடுப்பதில் அதிக காலம் எடுத்துக் கொள்வீர்கள்.

may1

முதல்தடவையாக ஒருவரிடம் பழகும் பொழுது நீங்கள் அவர்களுடன் உடனே ஐக்கியமாகி விட மாட்டீர்கள். அவர்களை நன்கு ஆராய்ந்து புரிந்து கொண்ட பின்னரே அவர்களை ஏற்றுக் கொள்வீர்கள். உங்களின் அதீத அன்பு, சிலருக்கு கசப்பை உண்டாக்கும். உங்களைப் புரிந்து கொள்வது சிரமமாக இருந்தாலும், ஒருமுறை உங்களை புரிந்து கொண்டு விட்டால் அதன் பின் உங்களை எதற்காகவும் விட்டுக் கொடுக்க விரும்பமாட்டார்கள். அதிகம் உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும் இருப்பீர்கள். உங்களால் எந்த ஒரு சின்ன ஏமாற்றத்தையும் தாங்க முடியாது, உடைந்து போய்விடுவீர்கள். பெரிய பெரிய விஷயங்களில் எல்லாம் விட்டுக் கொடுத்து விட்டு, சிறிய சிறிய விஷயங்களுக்காக அழிச்சாட்டியம் செய்து கொண்டிருப்பீர்கள்.

யாரையும் எளிதாக நம்பிவிட மாட்டீர்கள். அப்படி நம்பி விட்டால், கண்மூடித்தனமாக நம்பி விடுவீர்கள். இதனால் சில மன சங்கடங்களுக்கு ஆளாக நேரிடலாம். நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படாமல், கோபத்தை குறைத்துக் கொண்டு அல்லது கட்டுப்படுத்திக் கொண்டு, கோபம் வரும் பொழுது உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிதானம் அடைந்தபின் செயலாற்றினால் கட்டாயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள், வாழ்த்துக்கள்.

ஏப்ரலில் பிறந்தவர்கள் குணாதிசயங்கள்:
ஏப்ரலில் பிறந்தவர்கள் இப்படி பட்டவர்களா? இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமோ!!

இதையும் படிக்கலாமே
விருச்சிக ராசிக்காரர்கள் எவற்றையெல்லாம் கடைபிடித்தால் அதிர்ஷ்டம் வரும் தெரியுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have May month born characteristics. May birthday personality. Characteristics of may born child. May born person. May born personality.