விருச்சிக ராசிக்காரர்கள் எவற்றையெல்லாம் கடைபிடித்தால் அதிர்ஷ்டம் வரும் தெரியுமா?

viruchigam

‘லால் கிதாப்’ என்னும் மிகவும் பழமையான நூல் ஒன்று வட மாநில மக்களின் ஜோதிட நம்பிக்கைக்கு சான்றாக இருந்து வருகிறது. லால் கிதாப் என்பது இந்துக்களின் ஜோதிட மற்றும் கைரேகை சாஸ்திரம் சார்ந்த ஒரு அற்புத நூல் என்றே கூறலாம். ‘லால் கிதாப்’ என்கிற இந்த வார்த்தை உருது மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். ‘சிகப்பு புத்தகம்’ என்பது இதன் பொருளாகும். வட இந்திய மக்களால் பெரிதாக பின்பற்றி வரும் பரிகாரங்களில் ஒன்றாக ‘லால் கிதாப் பரிகாரங்கள்’ உள்ளது. ஒவ்வொரு ஜனனத்தின் போதும் நிலவும் கிரக நிலைகளின் அடிப்படையில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து எளிய முறையில் தீர்வு சொல்கிறது இந்த புத்தகம். இந்த நூல் பாரசீகத்தின் சாயலை கொண்டது என்கிறது ஒரு ஆய்வு. இந்திய மக்கள் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளில் அதிகம் வாழும் இந்தியர்களாலும் இந்த பரிகார முறைகள் பின்பற்றப்பட்டு பலன் காணப்படுவதாக கூறப்படுகிறது.

Lal-kitab-book

1930 ஆம் ஆண்டு ஒரு இராணுவ அதிகாரியால் இந்த புத்தகம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. மத கோட்பாடுகளுக்கு கட்டுபடாத இராவணனால் மக்களின் துயர் தீர்க்க எழுதப்பட்டதாக இருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இந்த அற்புத புத்தகத்தை பற்றிய சரியான தகவல்கள் கிடைக்காவிட்டாலும் இதில் இருக்கும் பரிகார முறைகளை மேற்கொள்பவர்களுக்கு 45 நாட்களுக்குள் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக நம்பப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களாலும் பாகுபாடின்றி தங்களின் ராசிக்குரிய பரிகாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வகையில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த புத்தகம் அப்படி என்னென்ன பரிகாரங்கள் கூறியுள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

விருச்சிக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்:-

Viruchigam Rasi

விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வீட்டில் எப்போதும் மண் பாத்திரத்தில் சுத்தமான தேன் அல்லது குங்குமம் வைத்திருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்கிறது லால் கிதாப்.

- Advertisement -

விருச்சிக ராசிக்காரர்களாகிய நீங்கள், தினமும் காலையில் எழுந்து பல் துலக்கியதும் சிறிதளவு தேன் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் பெறுவீர்கள்.

arasa-ilai

விருச்சிக ராசிக்காரர்கள் அரச மரத்தை வெட்டக்கூடாது. அதேபோல் முட்செடிகளையும் அகற்றுவது கூடாது. இது உங்களுக்கு தோஷத்தை ஏற்படுத்தும்.

விருச்சிக ராசிக்காரர்கள் மற்ற கிழமைகளை விட செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருப்பது நல்ல பலன் தருமாம்.

விருச்சக ராசிக்காரர்கள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைய சிவப்பு நிற கைகுட்டையை பயன்படுத்துவதும், சிவப்பு நிறத்தில் டை அணிவதும் வெற்றியை நோக்கி செல்ல துணை புரியுமாம்.

red-kerchief

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் அடுப்பில் பால் காய்ச்சி கொண்டிருக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். காய்ச்சிய பாலை பொங்கி வடியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது இந்த சிகப்பு புத்தகம்.

உங்களுக்கு தெரிந்த சன்னியாசிகள், முனிவர்கள் போன்ற மகான்களுக்கு இனிப்பு ரொட்டி தயார் செய்து கொண்டு போய்க் கொடுத்து வரலாம். இதனால் உங்களுக்கு நன்மைகள் நடைபெறுமாம்.

விருச்சிக ராசிக்காரர்கள் எந்த பொருட்களையும் எவரிடமும் காசு கொடுக்காமல் இலவசமாக பெற்றுக் கொள்ளக் கூடாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பணத்திற்கு பதிலாக ஏதாவது ஒரு பொருளை அவர்களிடம் கொடுத்து விடவும்.

thanam

விருச்சிக ராசிக்காரர்கள் துரதிர்ஷ்டத்தை துரத்தியடிக்க செய்ய வேண்டிய பரிகாரமாக லால் கிதாப் என்ன கூறுகிறது தெரியுமா? தேன், குங்குமம், சிவப்பு ரோஜா இவைகளை செவ்வாய்க்கிழமை அன்று கடலிலோ அல்லது ஓடும் நீர் நிலைகளில் விட்டுவிட்டால் உங்களுக்கு இருக்கும் துரதிர்ஷ்டங்கள் அனைத்தும் அதிர்ஷ்டமாக மாறுமாம்.

விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்வில் வளம் பெற, செவ்வாய்கிழமைகளில் உங்களுக்கு பிடித்தமான இஷ்ட தெய்வத்திற்கு சிகப்பு நிற பூந்தி தயார் செய்து படைத்து வழிபட்டு வருவதனால் யோகம் பெறலாம்.

red-boondi

விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் உடன்பிறந்தவர்களின் மனைவிகளுடன் மனஸ்தாபம் கொள்ளாமல் இருப்பதே நல்லதாம். சண்டை, சச்சரவுகள் இல்லாமல் சகோதரர்களுடன் இணக்கமாக இருப்பது நல்லது என்று இந்நூல் கூறுகிறது. அதிலும் குறிப்பாக உங்களின் மூத்த சகோதரரிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வது நல்லதாம்.

விருச்சிக ராசிக்காரர்களின் கடன்கள், நோய்கள், வறுமை நீங்குவதற்காக கூறப்பட்டுள்ள பரிகாரம் என்னவென்றால், செவ்வாய்க்கிழமை தோறும் ஹனுமனுக்கு வஸ்திரம் சாற்றி, செந்தூரம் படைப்பது நல்ல வாழ்விற்கான வழியாக லால் கிதாப் கூறுகிறது.

hanuman

இந்த பரிகாரங்கள் அனைத்தும் வட மாநில மக்கள் பின்பற்றி அனுபவத்தில் சிறப்பான பலன்களை கண்டுள்ளதாக கூறியுள்ளனர். இவற்றை பின்பற்றுவதால் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை. நம்பிக்கையுடன் செய்து பார்க்கலாமே!! நன்மைகள் நடந்தால் நல்லது தான்.

இதையும் படிக்கலாமே
பகலில் பிறந்தவர்களை விட இரவில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகளா? எந்த நேரத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிஞ்சிக்கணுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Lal kitab pariharam viruchigam in Tamil. Lal kitab remedies in Tamil Lal kitab Tamil. Lal kitab astrology in Tamil. Lal kitab tips.