- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்செட்டிநாடு இட்லி சாம்பார் மணக்க மணக்க இருப்பதற்கு இதுதான் காரணமா. இப்படி சாம்பார் வைத்தால் பத்து...

செட்டிநாடு இட்லி சாம்பார் மணக்க மணக்க இருப்பதற்கு இதுதான் காரணமா. இப்படி சாம்பார் வைத்தால் பத்து இட்லி கூட பத்தாது.

- Advertisement -

சாம்பார் செய்வது எப்படி

நம் நாட்டு பாரம்பரிய சமையலில் எப்போதுமே செட்டிநாடு சமையலுக்கு ருசி அதிகம். செட்டிநாடு முறைப்படி சூப்பரான ஒரு டிபன் சாம்பார் எப்படி வைப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். தோசை, இட்லி, பொங்கல், வடை, பணியாரம், இவைகளுக்கு தொட்டு சாப்பிட இது சூப்பரான சைடிஷ் ஆக இருக்கும். வாங்க அந்த அருமையான ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

சாம்பார் பொடி அரைக்கும் முறை:

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் வரமிளகாய் – 4, கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், வெந்தயம் – 3/4 ஸ்பூன், இந்த 4 பொருட்களையும் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு மொத்தமாக போட்டால் கருகிவிடும் என்றால் ஒவ்வொரு பொருளாக போட்டு எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நான்கு பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு 90 சதவிகிதம் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சாம்பார் பொடி அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

சாம்பார் செய்முறை:

அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, துவரம்பருப்பு – 1/4 கப், பாசிப்பருப்பு – 1/4 கப், சின்ன வெங்காயம் தோல் உரித்து இரண்டாக நறுக்கியது – 10, பச்சை மிளகாய் – 5, நறுக்கிய தக்காளி பழங்கள் – 2, நறுக்கிய கத்திரிக்காய் – 2, நறுக்கிய முருங்கைக்காய் – 1, தோல் சீவி நறுக்கிய சின்ன உருளைக்கிழங்கு – 1, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, 5 விசில் விட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் பருப்பு எல்லாம் மசிய வேகட்டும்.

விசில் வெந்து பிரஷர் அடங்கியதும், குக்கரை திறந்து முருங்கை காய்களை மட்டும் தனியாக எடுத்து விடுங்கள். மீதம் இருக்கக்கூடிய கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பருப்பு எல்லாவற்றையும் மத்தைக் கொண்டு நன்றாக மசித்து விடுங்கள். முருங்கைக்காயை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் இருக்கும் சக்கையை மட்டும் பிழிந்து தனியாக எடுத்து விட வேண்டும்.

- Advertisement -

வேகவைத்து சதைகளை மட்டும் தனியாக எடுத்த இந்த முருங்கைக்காய் சாரை சாம்பாரிலேயே ஊற்றி விடுங்கள். இப்போது குக்கரில் இருக்கும் வேகவைத்த பருப்பில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். தாராளமாக தண்ணீரை ஊற்றலாம். இந்த குக்கரை அப்படியே மீண்டும் அடுப்பில் வைத்து, சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு போட்டு, அரைத்து வைத்திருக்கும் சாம்பார் பொடி, தேவையான அளவு போட்டு, கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து விட வேண்டும். சாம்பார் ஒரு பக்கம் அப்படியே நன்றாக கொதிக்கட்டும். மூன்று நிமிடம் கொதித்தாலே போதும்.

இன்னொரு அடுப்பில் தாளிப்பு கரண்டியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், கிள்ளிய வரமிளகாய்கள் – 4, கருவாப்பிலை – 2 கொத்து, போட்டு தாளித்து அதை அப்படியே சாம்பாரில் ஊற்றி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி, இறக்கினால் சூப்பரான டிபன் சாம்பார் தயார்.

இதையும் படிக்கலாமே: பொட்டுக்கடலையோடு, கொத்துமல்லி சேர்த்து ஒருமுறை இப்படி சட்னி அரைச்சி, சுட சுட இட்லியோட வைச்சி சாப்பிட்டு பாருங்க, ஒரு பானை இட்லி கூட, ஒரு நிமிசத்துல காலி ஆயிடும்.

பின்குறிப்பு: இதில் புளி சேர்க்கவில்லை. புளி சேர்க்காமல் செய்தாலே டிபன் சாம்பார் நன்றாக இருக்கும். அதேபோல இதில் வர மல்லியும் சேர்க்கவில்லை. தேவைப்பட்டால் நீங்கள் புளி சேர்த்துக் கொள்ளலாம். செட்டிநாடு ஸ்டைல் சாம்பார் செய்யும் போது அதில் கட்டாயமாக சோம்பு சேர்ப்பார்கள். சில பேருக்கு சாம்பாரில் சோம்பு சேர்க்க மாட்டோமே என்ற சந்தேகம் எழும். ஆனால் சோம்பு சேர்த்து செய்வதால் தான் இது செட்டிநாடு சாம்பார். சுட சுட இட்லிக்கு மேல் வார்த்து சாப்பிட்டால் அத்தனை ருசியாக இருக்கும். குறிப்பாக சின்ன சின்னதாக நெய் இட்லி வார்த்து அதற்கு மேலே இந்த சாம்பாரை ஊற்றி சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட்.

சற்று முன்