- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இந்த செட்டிநாடு கார சீயத்தை ஒரு முறை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் போதும். மீண்டும் அடுத்த...

இந்த செட்டிநாடு கார சீயத்தை ஒரு முறை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் போதும். மீண்டும் அடுத்த முறை எப்பொழுது செய்வீர்கள் என்று உங்களைத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு அருமையான சுவையில் இருக்கும்

- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் ஒவ்வொரு விதமாக இருக்கின்றனர். ஒரு சில குழந்தைகள் அடம் பிடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஒரு சில குழந்தைகள் நாம் சொல்வதை புரிந்துகொண்டு நடந்து கொள்வார்கள். ஆனால் குழந்தைகள் என்றாலே அவர்களிடம் சில பிடிவாதங்கள் இருக்கதான் செய்யும். அவ்வாறு குழந்தைகள் ஒரு சிலவற்றை கேட்டு விட்டால் போதும் தாய்மார்களுக்கு உடனே அதனை எப்படியாவது செய்ய வேண்டுமென்று தோன்றி விடும்.

அவ்வாறு குழந்தைகள் சாப்பிட ஏதாவது வேண்டும் என்று கேட்டு விட்டால் போதும். உடனே சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து அவர்களுக்கு விருப்பமான வகையில் சமைத்துக் கொடுக்கும் அம்மாக்கள் பலர் இருக்கின்றனர். அவ்வாறு உங்கள் குழந்தைகள் விருப்பமாக சாப்பிட இந்த சுவையான கார சீயத்தையும் ஒரு முறை செய்து கொடுங்கள். இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி – ஒரு கப், உளுத்தம்பருப்பு – ஒரு கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, கடுகு – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 200 கிராம், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி.

செய்முறை:
முதலில் ஒரு கப் பச்சை அரிசி மற்றும் ஒரு கப் உளுத்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி, இரண்டு அல்லது மூன்று முறை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றில் 3 கப் தண்ணீர் ஊற்றி, 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

இவை நன்றாக ஊறியதும் தண்ணீரை வடிகட்டி, இவற்றை மிக்ஸியில் சேர்த்து, இட்லிமாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு கைப்பிடி கொத்தமல்லியையும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின்னர் இந்த கலவையை அரைத்து வைத்துள்ள அரிசி மாவில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பிறகு இவற்றுடன் உப்பு சேர்த்து கலந்துவிட்டு, அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் இந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு நன்றாகப் பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாட்டு காரசீயம் தயாராகிவிட்டது

சற்று முன்