செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் இதை மட்டும் செய்தாலே போதும். முப்பெரும் தேவியரின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும். வீட்டில் சந்தோஷம் நிறைந்திருக்கும்.

amman
- Advertisement -

செவ்வாய்க்கிழமையை மங்களவாரம் என்றும் சொல்லுவார்கள். ஆனால் ஏனோ தெரியவில்லை மங்களகரமான காரியங்களை செவ்வாய்க்கிழமை அன்று சாஸ்திரப்படி செய்யக்கூடாது என்றும் சொல்லுவார்கள். இது எதற்காக என்று நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கும் விஷயங்களில் நிச்சயமாக ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கும். புதியதாக எந்த செயலையும் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கக்கூடாது என்றும் சொல்லுவார்கள். அதற்காக இந்த நாளை நாம் ஒதுக்கி வைக்கக் கூடாது. செவ்வாய்க்கிழமை அன்று நம்முடைய வீட்டில் எந்த வழிபாட்டை மேற்கொண்டால் நன்மைகள் நடக்கும் என்பதைப் பற்றிய ஆன்மீக ரீதியான சில விஷயங்களைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே செவ்வாய்க்கிழமை என்பது தோஷ பரிகாரங்கள் செய்வதற்கு உகந்த நாள் என்று சொல்வார்கள். தெய்வ வழிபாட்டை மேற்கொள்வதற்கு உகந்த நாள் என்று சொல்லுவார்கள். இதனால்கூட நமக்காக நம் நேரத்தை செலவழிக்காமல், இறைவனுக்காக நேரத்தை செலவழிக்க வேண்டும் என்பதற்காகக் கூட, செவ்வாய்க்கிழமையில் நமக்கான நல்ல காரியங்களை செய்யாமல் தள்ளிப் போட்டு இருக்கலாம். சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று உங்களுடைய வீட்டில் உளுந்து சாதத்தை நிவேதனமாக செய்து பூஜை அறையில் முப்பெரும் தேவியரையும் நினைத்து, தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் உங்களுடைய வீட்டில் ஏழேழு தலைமுறைக்கும் தன தானியத்திற்கு பஞ்சம் வராது என்று சொல்லப்பட்டுள்ளது. இது குடும்பத்தலைவிகள் பின்பற்ற வேண்டிய வழிபாட்டு முறை. உங்கள் குடும்ப சுபிட்சத்துக்கான இதை செய்து பாருங்கள்.

அடுத்தபடியாக படிக்கின்ற மாணவ மாணவியர்களுக்கு, வேலைக்கு செல்லக்கூடிய வர்களுக்கு ஒரு சிறப்பு மிக்க பரிகாரமும் செவ்வாய்க்கிழமையில் சொல்லப்பட்டுள்ளது. படிக்கும் குழந்தைகளுக்கு படிப்பு வரவில்லை என்றால், அந்தப் பாடத்தை செவ்வாய்க்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் படிக்க வையுங்கள். (சில பேருக்கு கணக்கு பாடம் சுலபமாக புரியாது. சிலபேருக்கு அறிவியல் பாடம் சுலபமாக புரியாது. இப்படிப்பட்ட கஷ்டமான பாடங்களை செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் படிப்பது நல்லது.) கஷ்டமான விஷயங்களை கூட செவ்வாய்க்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் முயற்சி செய்தால், சுலபமாக கற்றுக்கொள்ள முடியும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது உங்களுடைய அறிவு திறன் ஞானம் புத்தி கூர்மை அதிகரிக்கும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை என்பது துர்க்கை அம்மனுக்கு உகந்த நாள். பெரும்பாலும் இது நம் எல்லோருக்கும் தெரியும். துர்க்கை அம்மனை நினைத்து நீங்கள் ராகு கால நேரத்தில் தீபம் ஏற்றும் வழக்கம் இருந்தால், அதை அப்படியே பின்பற்றுங்கள். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால் தீபமேற்றி முடித்துவிட்டு ராகு காலம் முடிந்த பின்பு உங்களால் முடிந்த தானத்தை வாயில்லா ஜீவன்களுக்கு கொடுப்பது மிக மிக நல்லது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இறுதியாக இதுவரைக்கும் நீங்கள் அறிந்திராத ஒரு விஷயம். செவ்வாய்க்கிழமை அம்பாளுக்கு தானே உகந்த தினம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். செவ்வாய்க்கிழமை அன்று அனுமனை வழிபாடு செய்தால், வேண்டிய வரங்களை மனதார கேட்டால், நீங்கள் கேட்கும் வரங்களை அனுமனிடம் இருந்து சுலபமாக பெற்றுவிட முடியும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய வழக்கத்தில் சனிக்கிழமைதான் ஹனுமன் வழிபாடு செய்வோம். ஆனால் கூடவே சேர்த்து செவ்வாய்க்கிழமை அனுமன் வழிபாட்டை செய்து பாருங்கள். வேண்டிய வரங்களை சுலபமாகப் பெற முடியும்.

வடமாநிலத்தவர்கள் அனுமனை செவ்வாய்க்கிழமை அன்று வழிபாடு செய்து வரங்களைப் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கை உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று மேல் சொன்ன சின்ன சின்ன விஷயங்களில் ஏதாவது ஒன்றை பின்பற்றினால் கூட நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவு நல்ல பலனை பெற முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -