இன்று(14/4/2021) பெயர்ச்சியாகிய செவ்வாய், சூரியன் கிரகங்கள்! அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

chevvai-suryan-astro

பிலவ வருடத்தின் முதல் நாளான இன்று புதன்கிழமை அதிகாலை 1:41 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு செவ்வாய் பகவான் பெயர்ச்சி ஆகிறார். அதே சமயத்தில் 2:49 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகிறார். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இப்பெயர்ச்சியானது ஒவ்வொரு விதமான பலன்களை ஜாதகருக்கு கொடுக்கும். அவ்வகையில் இன்று பெயர்ச்சியாகி இருக்கும் செவ்வாய் மற்றும் சூரிய பகவான் 12 ராசிக்காரர்களுக்கும் எம்மாதிரியான பலன்களைக் கொடுக்க இருக்கிறார்கள்? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் செவ்வாய் பகவானால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வருமானம் அதிகரிக்கும். வாய்ப்புகள் வீடு தேடி வரும். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் காணலாம். வலிமை, ஆற்றல், வாழ்க்கை ஆகியவற்றின் காரகத்துவம் பெற்ற சூரியன் உங்கள் ராசியில் வந்து அமர்ந்து இருப்பதால் அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும். குடும்ப உறவுகளுக்கு இடையில் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கும் நேரம் இது. எதிலும் சர்வாதிகாரம் செலுத்தாமல் சற்று பணிவையும் ஏற்றுக் கொண்டால் வெற்றி நிச்சயம்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய், சூரியன் பெயர்சியானது ஏற்ற இறக்கமான பலன்களை கொடுக்கும். வருகின்ற விரயங்களை சுப விரயமாக மாற்றிக் கொள்வது உங்களுடைய சாதுரியம். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு கொடுத்து செல்வது உத்தமம். சூரியனின் நிலை உங்களுடைய வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களின் பொறுமையை சோதித்து பார்ப்பதற்கான காலம் இது. கூடுமானவரை நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்ககளின் எதிரிகளை எளிதாக வென்று விடுவீர்கள்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கிரகங்களின் பெயர்ச்சியானது லாபத்தை அதிகரிக்க செய்யும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறி சீராகி வரும். சுபகாரியங்கள் கைகூடி வரும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கும் வளர்ச்சி பாதை உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். இதுவரை நிலுவையில் இருந்து வந்த உங்களுடைய முயற்சிகள் அறிமுகத்திற்கு வரும். சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை வலுவாகும். உங்களுடைய பிடிவாத குணத்தை மாற்றிக் கொண்டால் வெற்றி காணலாம்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் பெயர்ச்சி ஆவதால் நன்மை, தீமை இரண்டும் கலந்த பலன்கள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு போன்றவை சாதக பலன்களை கொடுக்கும். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிதாக எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் பிரச்சனைகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு. வெற்றி உங்கள் பக்கம் திரும்ப பூமி காரகனான செவ்வாயை வணங்குங்கள். சூரிய பெயர்ச்சியானது உங்களுக்கு மற்றவர்களின் பாராட்டுகளை பெற்று தரும். எல்லா முடிவுகளையும் தைரியமாக எடுக்கும் காலமாக இருப்பதால் தயக்கம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி ஆனது உடல்நல கோளாறுகளை நீக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனதில் புதுவிதமான உற்சாகம் பிறக்கும். சூரிய பெயர்ச்சி உங்கள் ராசிக்கு புதிய திட்டங்களை நிறைவேற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடங்களில் சிறப்பான வரவேற்பை பெறுவீர்கள். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நம்பிக்கைக்குரிய நபர்களை வேலையில் சேர்த்துக் கொள்வீர்கள். குடும்பத்தினருடன் இறை சார்ந்த பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

- Advertisement -

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்கள் செவ்வாய் கிரகப் பெயர்ச்சியால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். வாகன ரீதியான பயணங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நெருப்பினால் கண்டம் உருவாகும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். செவ்வாய் தோறும் முருகப் பெருமானை வழிபட நன்மைகள் நடக்கும். சூரிய பெயர்ச்சியால் உங்கள் ராசிக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்படலாம். பெண்கள் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். கூடுமானவரை முக்கிய முடிவுகளை இந்நாட்களில் எடுப்பதை தவிர்ப்பது உத்தமம். மனைவி வழி சொத்துக்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் தரும். பொருளாதார ஏற்ற இறக்கத்தை திறம்பட கையாள்வதால் முன்னேற்றத்தை காணலாம்.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரக பெயர்ச்சி ஆனது குடும்பத்தில் சலசலப்பை உண்டாகும். அமைதியாக இருந்த குடும்பத்தில் திடீர் குழப்பங்களும், சண்டை, சச்சரவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. கூடுமானவரை இக்காலகட்டத்தில் பிரச்சனைகளை பேசி தீர்ப்பதை விட விலகி இருந்து வேடிக்கை பார்ப்பது நல்லது. சூரிய பெயர்ச்சி உங்கள் ராசிக்குபுதிய விஷயங்கள் மூலம் புதிய வருமானங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகும். பதவி உயர்வு பாராட்டுக்கள் என்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் லாபத்தை அதிகமாக காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான விரிவாக்கம் நன்மைகளை சேர்க்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரக பெயர்ச்சி பணவரவை திருப்திகரமாக செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை பெறுவீர்கள். முன்னோக்கி வைத்த காலை பின் நோக்கி வைக்ககூடாது. எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றி உங்களுக்குத்தான். சூரிய பெயர்ச்சியால் உங்கள் ராசிக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. போட்ட முதலீடுகள் மூலம் புதிய லாபங்களை காண்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதரவை பெறுவீர்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த கடன் தொகைகளை வசூல் செய்வதற்கான சிறப்பான காலம் இது. வம்பு, வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உணவு கட்டுப்பாட்டில் கூடுதல் அக்கறை செலுத்துவது உத்தமம். வேலை வாய்ப்பை தேடி அலைபவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு. தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்கள் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது மூலம் ஏற்றம் பெறலாம். உங்களுடைய வீண் பிடிவாதம் தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் அதனை தளர்த்தி கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உறவில் குழப்பங்கள் நீடிக்கும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது நல்லது.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகும். ஒரு சிலருக்கு வீடு, மனை வாங்கும் விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விஷயங்களில் அதிக லாபங்களை காணலாம். குடும்பத்தில் சர்வாதிகாரம் செலுத்தினால் மன அமைதியை இழக்க நேரிடும். கூடுமானவரை விட்டுக் கொடுத்து செல்வது சிறப்பான பலன்களை தரும். தொழில் ரீதியான முயற்சிகளில் தடை தாமதங்களுக்கு பின் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை எரிச்சலூட்டும் வகையில் இருக்கும். கூடுமானவரை பொறுமையை இழக்காமல் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வாகன ரீதியான பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் சூரிய கிரக பெயர்ச்சி ஆனது அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க இருக்கிறது. உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் செவ்வாய் பகவான் சஞ்சாரம் செய்வதால் வருமானம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் நீங்கி அவர்களால் அனுகூலமான பலன்களை பெறலாம். சூரிய பெயர்ச்சி உங்கள் ராசிக்கு தன்னம்பிக்கையும், தைரியத்தையும் வரவழைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்கள் மதிப்பு கொடுத்து நடந்து கொள்வார்கள். தொழில் மற்றும் வியாபார விரிவாக்கம் தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவு எடுப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஒற்றுமை அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி ஆனது வெற்றியைக் கொடுக்கும். குடும்பத்தினரின் ஆதரவை பெற்று தரும். சூரிய பெயர்ச்சி உங்கள் ராசிக்கு வழக்குகள் தொடர்பான விஷயங்களில் நன்மைகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் தீரும். உங்களுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வந்து சேரும். பழைய முதலீடுகள் மூலம் அதிக லாபத்தை காண இருக்கிறீர்கள். குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் அசுப வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது உத்தமம். தேவையற்ற வாக்குவாதங்களால் விபரீத விளைவுகள் ஏற்படும் காலம் இது. கூடுமானவரை தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வது சிறப்பான பலன் தரும். மனைவியின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார், உறவினர்களிடம் இருந்து வந்த பணம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.