ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு சக்தி தான் அந்த ஈசன். ஈசனின் அவதாரமாக திகழும் தில்லை சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் அவர்களுடைய சிறப்பு வாய்ந்த பரிகாரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இன்றைய தினம் சிவபெருமானுக்கு உகந்த கார்த்திகை மாதத்தில் வந்திருக்கும் பிரதோஷ நாளில், இவ்வளவு சக்தி வாய்ந்த சிதம்பர சக்கரத்தைப் பற்றி சிவ பக்தர்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோஷத்துடன், இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவிற்குள் பயணம் செய்வோம்.
சிதம்பர சக்கரம் வழிபாடு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மறைந்திருக்கும் ரகசியம் ஏராளம். பல ஆராய்ச்சியாளர்களாலேயே கண்டுபிடிக்க முடியாத அதிசயங்கள் மறைந்து இருக்கக்கூடிய கோவில் சிதம்பரம். இன்று வரையிலும் சிதம்பர ரகசியம் என்றால் என்ன என்பது யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு புதிராகவே இருக்கிறது.
சிதம்பர ரகசியத்தை காண வேண்டும் என்றால் இப்போது நமக்கு இருக்கும் இரண்டு கண்கள் போதாது. சிதம்பர ரகசிய அறையை திறக்கும் போது, அந்த இடத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டு வில்வ மாலைகள் தான் நமக்கு தெரியும். புற கண்களால் அந்த சிதம்பர ரகசியம் என்று சொல்லக்கூடிய இடத்தில் அந்த மாலையை மட்டும் தான் நம்மால் காண முடிகிறது.
உண்மையான சிதம்பர ரகசியத்தை பார்க்க வேண்டும் என்றால், அககண்ணால் அதாவது நம்முடைய ஞானக்கண்ணால் இறைவனை உணர மட்டும் தான் முடியும் என்பதே சிதம்பர ரகசியத்தில் மறைந்திருக்கும் உண்மை. இறைவன் என்பவன் கண்ணுக்குத் தெரிய மாட்டான். ஆகாய மார்க்கமாக அண்டத்தில் இருக்கக்கூடிய ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு சக்தியே இறைவன் என்பதை உணர்த்தக்கூடிய சக்தி தான் சிதம்பர ரகசியம்.
அந்த ஈசனின் அருளால், சித்தர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட சக்கரம் தான் சிதம்பர சக்கரம். இந்த சக்கரம் நடராஜரின் அதிசக்தி வாய்ந்த சக்கரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. சரியான முறையில் இந்த சக்கரத்தை எந்திரமாக வரைந்து, அதை கொண்டு வந்து பாழடைந்த வீட்டிற்குள் வைத்தாலும் கூட, அந்த வீடு உடனடியாக பிரகாசமான லட்சுமி கடாட்சம் நிறைந்தாக மாறிவிடும் என்பதுதான் நம்பிக்கை.
இந்த சக்கரம் எந்த இடத்தில் இருக்கிறது அந்த இடத்தில் அந்த ஈசனின் அருள் நேர்மறை ஆற்றல் நிறைந்த இடமாக அந்த இடம் மாறிவிடும். அவ்வளவு நேர்மறை ஆற்றலை தாங்கி நிற்கும் அந்த சக்கரத்தை பார்த்து ஈசனின் இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி, அதன் பிறகு உங்களுடைய வேண்டுதல்களை அந்த சிவபெருமானிடம் 11 முறை வையுங்கள். நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் பலிக்கும். அந்த சிதம்பர சக்கரத்தின் வரைபடம் இந்த பதிவின் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சர்க்ரத்தை பார்த்து சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான்.
ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா
இதையும் படிக்கலாமே: பஞ்சத்தைப் போக்கும் பஞ்ச தீப வழிபாடு
அந்த சிதம்பர சக்கரத்தை பார்த்துக் கொண்டே இந்த மந்திரத்தை சொல்லுங்கள். பிறகு உங்களுடைய வேண்டுதலையும் அந்த சக்கரத்தை பார்த்துக் கொண்டே ஈசனிடம் வையுங்கள். ஈசனின் அருளானது உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் வேண்டியது நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். இந்த சக்கரத்தை நீங்கள் இன்று கண்ணால் பார்த்ததே கோடி புண்ணியம். அதோடு சேர்த்து சிவபெருமானின் மந்திரத்தை சொல்லி, நம்முடைய வேண்டுதலை ஈசனிடம் வைக்க ஒரு வாய்ப்பு கொடுத்த அந்த எம்பெருமானுக்கு நன்றியை தெரிவித்து இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.