- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபஞ்சத்தைப் போக்கும் பஞ்ச தீப வழிபாடு

பஞ்சத்தைப் போக்கும் பஞ்ச தீப வழிபாடு

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றாலும், அவருக்கு அனைத்து விதமான சுபங்களும் வந்தடைய வேண்டும் என்னும் பட்சத்தில் அவருடைய ஜாதகத்தில் குருவின் அம்சம் என்பது இருக்க வேண்டும். குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தவர் ஆக குரு திகழ்கிறார். எந்த ஒரு சுபகாரியத்தை செய்வதாக இருந்தாலும் குரு எந்த இடத்தில் இருக்கிறார்? யாரை பார்க்கிறார்? அவருடைய பலன்கள் எப்படி இருக்கிறது? என்பதை பொறுத்துதான் சுபகாரியங்களை செய்வார்கள். அந்த அளவிற்கு சிறப்பு மிகுந்த குருகுரிய வியாழக்கிழமை அன்று பிரதோஷம் வருவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில் நாம் ஏற்ற வேண்டிய பஞ்ச தீபங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பஞ்சத்தைப் போக்கும் பஞ்ச தீப வழிபாடு

கார்த்திகை மாதம் தீபத்திற்குரிய மாதம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நம்மில் பலரும் கார்த்திகை மாதத்தில் வீட்டு நிலை வாசலில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யும் வழக்கமும் வைத்திருப்போம். தீபத்திற்கு பெயர் போன இந்த கார்த்திகை மாதம் சிவபெருமானுடைய வழிபாட்டிற்கும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. சிவபெருமானுக்குரிய பிரதோஷ நாளன்று வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யும்பொழுது அதன் பலன் நமக்கு இன்னும் அதிகமாகவே கிடைக்கும்.

- Advertisement -

இந்த தீபத்தை நாம் பிரதோஷம் நேரம் நிறைவடைந்த பிறகு வீட்டில் ஏற்ற வேண்டும். 4:30 மணியிலிருந்து 6:00 மணி என்பது பிரதோஷ நேரம் என்று நம் அனைவருக்கும் தெரியும். 6 மணிக்கு மேல் வீட்டில் எப்பொழுதும் போல் தீபமேற்றி பிரதோஷ வழிபாடுகள் அனைத்தையும் நிறைவு செய்த பிறகு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் குரு பகவானுக்குரிய தானியமான கொண்டைக்கடலையை பரப்பிக் கொள்ள வேண்டும்.

அந்த கொண்டை கடலைக்கு மேலே ஐந்து அகல் விளக்குகளை வைத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி மஞ்சள் நிற திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். ஒவ்வொரு தீபத்தை ஏற்றும் பொழுதும் நாம் ஒவ்வொரு தெய்வத்தை மனதார நினைத்துக் கொள்ள வேண்டும். முதலில் குலதெய்வத்தை நினைத்து ஒரு தீபத்தை ஏற்றுங்கள். இரண்டாவதாக உங்களின் இஷ்ட தெய்வத்தை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும். மூன்றாவது தீபத்தை சிவபெருமானை நினைத்து ஏற்ற வேண்டும். நான்காவது தீபத்தை குருபகவானை நினைத்து ஏற்ற வேண்டும். ஐந்தாவது தீபத்தை குபேர பகவானை நினைத்து ஏற்ற வேண்டும்.

- Advertisement -

சிவபெருமானுக்கு பஞ்சாட்சர மந்திரம் எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததோ அதேபோல்தான் பஞ்ச தீப வழிபாடும் சிறப்பு வாய்ந்ததாகவே திகழ்கிறது. மேலும் அன்றைய தினம் குபேர பகவானுக்குரிய தினம். குபேர பகவானுக்குரிய எண்ணாக திகழ்வதும் 5 தான். அதனால் ஐந்து தீபங்களை ஏற்றி வைத்து இந்த ஐந்து தெய்வங்களை வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் எந்தவித குறையும் இல்லாமல் நிறைவான வாழ்க்கையை வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே: கோடி ரூபாய் கடனும் காணாமல் போக வழிபாடு

பஞ்ச தீபத்தை இந்த முறையில் ஏற்றி முழு மனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்க பெற்று மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்