வீடு முழுக்க நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தி, ஆரோக்கியம் மற்றும் செல்வவளத்தை தரவல்ல இந்த வழிமுறை பற்றி தெரியுமா?

samayal arai
- Advertisement -

பெங் சூயி என்பது பண்டைய சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சாஸ்திரம் ஆகும். நம் நாட்டு வாஸ்து சாஸ்திரத்தை போன்ற ஒரு சாஸ்திர கலை தான் இந்த பெங் சூயி கலை. முற்காலத்தில் சீனா, ஜப்பான்,கொரியா போன்ற நாடுகளில் மட்டுமே பின்பற்றப்பட்டு வந்த இந்த சாஸ்திர கலை, சமீப வருடங்களில் உலகம் முழுவதும் பலராலும் பின்பற்றப்படுகின்றது. அந்த வகையில் நமது வீட்டில் நல்ல அதிர்வலைகள் ஏற்படவும், அதனால் நமக்கு ஆரோக்கியம் மற்றும் செல்வம் நிறைந்த வாழ்க்கை கிடைக்கவும் பெங் சூயி சாஸ்திரம் கூறும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நம் வீட்டில் பல அறைகள் இருந்தாலும் நாம் உயிர்வாழ அன்றாடம் உணவை சமைக்கின்ற சமையல் அறை தெய்வங்கள் இருக்கும் பூஜை அறைக்கு நிகரான ஒரு அறையாகும். பெங் சூயி சாஸ்திரத்தின் படி ஒரு வீட்டில் சமையலறை சீரான முறையில் இருந்தால், அவ்வீட்டில் வளமை நிறைந்திருக்கும் என்பது அந்த சாஸ்திரத்தின் திடமான கருத்தாகும்.

- Advertisement -

நம் வீட்டில் இருக்கின்ற சமையல் அறை எப்போதும் வெளிச்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும். எனவே சமையலறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார விளக்குகள் இருப்பதையும், அந்த விளக்குகளின் ஒளி சமையலறையில் அனைத்து பகுதிகளிலும் விழும்படியும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மின்சார வெளிச்சத்தை காட்டிலும் பகல் வேளைகளில் சமையலறை ஜன்னல்களைத் திறந்து இயற்கையான சூரிய ஒளியை சமையலறைக்குள் விழுமாறு செய்வதால், அந்த அறையில் உயிராற்றலை நிரப்பி, வீட்டிலும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

நாம் தினந்தோறும் உணவு சமைக்கின்ற கேஸ் ஸ்டவ் அடுப்பு எப்போதும் தூய்மையாக இருப்பது அவசியம். அழுக்குப் படிந்த கேஸ் ஸ்டவ், கரி படிந்த கேஸ் பர்னர்கள் போன்றவற்றை நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் வைத்திருப்பதால், வீட்டில் உயிர் சக்தி ஆற்றல் குறைந்து, அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு வீண் விரயங்கள், உடல் நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்தும் என பெங் சூயி சாஸ்திரம் கூறுகின்றது.

- Advertisement -

சமையல் அறைக்கு வெளிறிய மஞ்சள், இளம்பச்சை, இளஞ்சிவப்பு போன்ற நிறங்களில் வண்ணம் தீட்டுவது சிறப்பு. சமையல் அறை முழுவதும் ஒரே நிறத்தில் வண்ணம் தீட்டாமல், சமையலறை சுவற்றிற்கு ஒரு நிறத்திலும், கிச்சன் கேபினட்களுக்கு ஒரு நிறத்திலும் வண்ணம் தீட்டலாம். மேலும் சமையல் அறை சுவற்றின் மேல் பகுதி ஒரு நிறத்திலும், கீழ் பகுதி ஒரு நிறத்திலும் வண்ணம் தீட்டுவதால் சமையலறையில் நேர்மறை ஆற்றல்கள் பெருகும்.

நம் நாட்டு சாஸ்திரங்களிலும், சீன நாட்டு பெங் சூயி சாஸ்திரத்திலும் பழங்கள் வளமையின் சின்னமாக பார்க்கப்படுகின்றது. எனவே உங்கள் சமையலறை மேஜையில் ஒரு கூடையில் எப்போதும் பலவகையான இயற்கையான பழங்களை நிரப்பி வைத்து, அப்பழங்களை அந்த வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு வர வேண்டும். பழங்கள் தீர்ந்து போனால் மீண்டும் புதிய பழங்களை கொண்டு, அந்தக் கூடையை நிரப்பி சமையல் அறை மேஜையில் வைக்க வேண்டும். செயற்கையான பழங்களை அலங்காரத்திற்காக அந்த கூடையில் வைக்கக்கூடாது.

சமையலறை சுவர்களில் இயற்கை காட்சிகளின் படங்களை மாட்டி வைப்பது நல்லது. அதிலும் குறிப்பாக சுவையான உணவுகள், இனிப்பு பண்டங்கள், பானங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற சமையல் தொடர்பான பொருட்களின் படங்களை மாட்டி வைப்பதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகி மகிழ்ச்சி, வளமை கூடும்.

சமையலறை எப்போதும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சமையல் மேடையில் குப்பைகள் கிச்சன் கேபினட் மீது தூசுகள், குப்பைகள் காய்கறி பழங்கள் போன்றவற்றை அவ்வப்போது அப்புறப்படுத்தி விட வேண்டும்.

- Advertisement -