இந்த சின்ன சின்ன குறிப்புகளை பின்பற்றினாலே போதும். நீங்கள் பேரழகியாக மாறிவிடலாம். இதற்கு நிறைய காசு கூட செலவு செய்ய வேண்டாங்க.

face11
- Advertisement -

முகம் பார்ப்பதற்கு எப்போதும் அழகாக இருக்க வேண்டும். 24 மணி நேரமும் சோர்வு அடையாமல் முகம் பொலிவாக இருக்க, வீட்டில் இருக்கக்கூடிய சில சுலபமான பொருட்களை வைத்தே என்ன செய்யலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த குறிப்புகளை பின்பற்றினால் உங்களுக்கு ஆயுசுக்கும் பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பே கிடையாது. உங்களுடைய அழகை பாதுகாக்க மேலும் அழகை அதிகப்படுத்திக் கொள்ள இவ்வளவு ஈஸியான ரெமிடியை மிஸ் பண்ணாதீங்க.

அழகான அழகிற்கு முதலில் காலை மாலை இரண்டு வேலையிலும் முகத்தை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு தான் நம் முகத்தில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு முதல் காரணம். காய்ச்சாத பச்சை பாலில், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டு கலந்து இந்த பாலை பஞ்சில் தொட்டு முகத்தை சுத்தமாக துடைத்து விடுங்கள். கழுத்து பகுதியிலும் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பால் உங்கள் சருமத்திற்கு ஒத்து வராது என்றால் பாலுக்கு பதில் ரோஸ் வாட்டர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

முகத்தை பால், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக துடைத்துவிட்டு ஒரு நிமிடம் போல மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவி விட வேண்டும். அதன் பின்பு முகத்தை குளிர்ச்சியாக அழகாக வைத்துக்கொள்ள ஒரு குட்டி பேஸ்பேக் போடலாம்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெட்டிய வெள்ளரிக்காய் 1/4 கப், தக்காளி பழம் 1, இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறுடன் கடலை மாவு அல்லது கோதுமை மாவு உங்கள் சருமத்திற்கு எது செட் ஆகுமோ அந்த மாவை போட்டு கலந்து பேக் தயார் செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் தேன் இருந்தால் அதையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பேக்கை முகம் முழுவதும் போட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை லேசாக மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள். இதை செய்தாலே உங்களுடைய முகம் அவ்வளவு பொலிவு பெறும்.

- Advertisement -

இந்த அழகை பாதுகாக்க ஒரு சூப்பர் டோனர். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த டோனரை பயன்படுத்த வேண்டும். இயற்கையான டோனர் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 டம்ளர் அளவு தண்ணீரை அதில் ஊற்றி துளசி இலைகள் 10, கிரீன் டீ தூள் 1 – ஸ்பூன், போட்டு இதை இரண்டு நிமிடம் நன்றாக கொதிக்க வையுங்கள்.

துளசி இலையின் சாறும் கிரீன் டீயின் சாறும் அந்த தண்ணீரில் இறங்கியவுடன் அதை வடிகட்டி அப்படியே நன்றாக ஆற வைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் ஏழு நாட்கள் கெட்டுப் போகாது. இந்த டோனரை காலை மதியம் இரவு 3 வேலையும் முகத்தில் ஸ்பிரே செய்து அப்படியே விட்டு விடுங்கள். முகத்தில் வெயிலினாலோ அல்லது மற்ற பொல்யூஷன் மூலமாகவோ எந்த ஒரு பிரச்சனையும் நமக்கு வராது. இதுபோக முகப்பரு பிக்மென்டேஷன் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் இந்த டோனர் பயனுள்ளதாக இருக்கும். இந்த சின்ன சின்ன ரெமெடி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. நீங்க பேரழகியா மாறிடுவீங்க.

- Advertisement -