காரசாரமா செட்டிநாட்டு ஸ்டைலில் சின்ன வெங்காய காரச் சட்னி. இந்த சட்னிக்கு சுட சுட இட்லி இருந்தா காரமே சாப்பிடாதவங்க கூட இன்னும் கொஞ்சம் இருந்தா தாங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

- Advertisement -

சமையலை பொறுத்தவரையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ருசி பிடிக்கும். சிலருக்கு காரம் குறைவாக, சிலருக்கு புளிப்பு தூக்கலாக என்று ஒவ்வொருவரின் விருப்பமும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கும். செட்டிநாட்டு சமையலை பொறுத்தவரையில் அனைத்திலும்மே காரம் சற்று தூக்கலாக தான் இருக்கும். இதை காரம் விரும்பி சாப்பிடுபவர்கள் அனைவருமே இந்த செட்டிநாடு உணவுகளையும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் ஒரு சூப்பரான சின்ன வெங்காய காரச் சட்னி எப்படி செய்வது என்று தான் இந்த பதிவில் தெரிந்து கொள்கிறோம். இது காரம் பிடிப்பவர்கள் மட்டுமல்ல பிடிக்காதவர்கள் கூட ஒரு முறை சாப்பிட்டால் மறுமுறை சாப்பிட தூண்டும் வகையில் சுவையாக இருக்கும்.

இந்த சின்ன வெங்காய கார சட்னிக்கு முதலில் 40 சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள் அதே போல் 20 பூண்டு, அதையும் தோலுரித்து வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் உரித்து வைத்த சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் சேர்த்து பிறகு 10 காய்ந்த மிளகாய்( பயந்து விட வேண்டாம் இந்த வெங்காயம் பூண்டுக்கு இந்த அளவு மிளகாய் போட்டால் தான் சரியாக இருக்கும்) ஒரு பின்ச் அளவு புளி, அரை ஸ்பூன் வெல்லம், அரை ஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நல்ல பையன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் (செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் பயன்படுத்துங்கள் அந்த எண்ணையின் சுவைக்கும் இந்த சட்னியின் சுவைக்கும் அட்டகாசமாக இருக்கும்)சேர்த்து காய்ந்தவுடன் அரைத்து வைத்த வெங்காய விழுதை இதில் சேர்த்து ஒரு முறை கலந்து மூடி போட்டு அப்படியே பத்து நிமிடம் லோ பிலிமில் கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

பத்து நிமிடம் கழித்து எண்ணெய் எல்லாம் சுருண்டு மேலே வந்து இருக்கும். இப்போது லேசாக கிண்டி விட்டு இன்னொரு அடுப்பில் சின்ன தாளிப்பு கரண்டியை வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அந்த தாளிப்பையும் இந்த சட்னியில் ஊற்றி லேசாக கிளறி விட்டு இறக்கி வைத்து விடுங்கள்.

சுவையான செட்டிநாட்டு சின்ன வெங்காய காரச் சட்னி தயார். இந்த சட்னிக்கு சுட சுட இட்லி அவித்து வைத்து சாப்பிட்டால் எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்று நமக்கே கணக்கு தெரியாது. இதில் புளிப்பு, காரம், இனிப்பு எல்லாம் சேர்ந்து இருப்பதால் சுவை பிரமாதமாக இருக்கும் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -