முடி வளர சின்ன வெங்காயம் பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக இதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்! தலைமுடிக்கு சின்ன வெங்காயம் இவ்வளவு செய்யுமா?

small-onion-hair-oil
- Advertisement -

தலை முடி பிரச்சனைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சரியான தூக்கமின்மை மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ளாமை இந்த இரண்டுமே மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றது. ஒரு மனிதன் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். ஆனால் இன்று வேலை பளு காரணமாக தூக்கத்தின் அளவு பெருமளவு குறைந்ததால் ஏற்படக்கூடிய பிரச்சனையாகவும் முடி உதிர்வு பிரச்சனை தலைதூக்கி இருக்கிறது. கண்களுக்கும், மூளைக்கும் ஓய்வில்லாமல் அதிக வேலையை கொடுப்பவர்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சினை அதிகமாக இருக்கும். இப்படி உங்களுடைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்பட்ட தலைமுடி உதிர்வு பிரச்சனையை சரி செய்வதற்கு சின்ன வெங்காயம் சரியான தேர்வாக இருக்கிறது. ஆனால் அதை பயன்படுத்தும் முன்பு இதையும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. அது என்ன? என்பதை இந்த பதிவில் இனி தொடர்ந்து பார்ப்போம்.

முடி வளர்வதற்கு உரிய அத்தனை சத்துக்களும் சின்ன வெங்காயத்தில் கொட்டிக் கிடக்கின்றன, ஆனால் அதை நேரடியாக சாறு எடுத்து தலை முடிக்கு பயன்படுத்துவது கூடாது. சின்ன வெங்காயத்தில் இருக்கும் கந்தகம் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இதனால் வேர் கால்களுக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து கிடைத்து, வேகமாக முடி வளர்ச்சியைத் தூண்ட செய்கிறது. வலுவான, அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும் இந்த சின்ன வெங்காய சாற்றை நேரடியாக தலையில் அப்படியே தடவுவதை காட்டிலும், அதனுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து பயன்படுத்துவது சிறந்தது.

- Advertisement -

எலுமிச்சை சாற்றை நீங்கள் அப்படியே முகத்திற்கு பயன்படுத்தினால் ஒரு விதமான எரிச்சலை ஏற்படுத்தும். அதனுடன் வேறு சில பொருட்களின் சாற்றையும் சேர்த்து பயன்படுத்தும் பொழுது அதன் வீரியம் குறைந்து நன்மைகள் நமக்கு முழுமையாக வந்தடையும். அதே போல வெங்காயத்தின் சாற்றையும் நேரடியாக தலையில் பயன்படுத்தக் கூடாது. அதனுடன் தலைமுடி பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய சத்துக்கள் அதிகம் கொண்டுள்ள கேரட் சாறை பயன்படுத்துவது மிகவும் நன்மைகளை அளிக்கக் கூடியது.

வெங்காய சாற்றுடன் சம அளவு கேரட் சாறு கலந்து கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி சின்ன வெங்காயத்துடன், ஒரு கைப்பிடி கேரட் துண்டுகளை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து ஒரு சுத்தமான காட்டன் துணியில் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டின் கலவையை ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டால் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் ஃப்ரிட்ஜில் வரை வைத்துப் பயன்படுத்தலாம். அரைக்கும் பொழுது தண்ணீர் எதுவும் சேர்த்து விடக்கூடாது.

- Advertisement -

இந்த கேரட் மற்றும் சின்ன வெங்காய சாற்றை உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்து விட வேண்டும். வாரம் ஒரு முறை இந்த மசாஜ் செய்தால் போதும், அடிக்கடி செய்வதை தவிர்க்கவும். பத்து நிமிடம் இது போல தலை முழுவதும் மசாஜ் செய்தால் உச்சந்தலையில் தடைபட்ட ரத்த ஓட்டம் சீராகிவிடும். பொதுவாகவே உச்சந்தலையை அடிக்கடி நீங்கள் கைகளால் மசாஜ் செய்வது உங்களுடைய கேசத்திற்கு நன்மைகளை கொடுக்கும்.

தலைமுடி பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு உச்சந்தலையில் கை வைத்தாலே ஒருவிதமான வலி ஏற்படும். இத்தகையவர்கள் இறுக்கமாக ஹேர்பின், கிளிப் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தலைமுடியை இறுக்கமாக கட்டக் கூடாது. அடிக்கடி தலைக்கு மசாஜ் செய்து இது போல ஊட்ட சத்து அளித்து தலைமுடியை இலகுவாகவும், சிக்கல்கள் இல்லாமலும், வறட்சி இன்றி பராமரித்து வந்தால் இழந்த முடியை மிக விரைவிலேயே மீட்டு எடுத்து விடலாம்.

- Advertisement -