வளரவே வளராத தலைமுடியை கூட வளர வைக்க 2 ஸ்பூன் வெங்காய சாறு போதும். வெங்காய சாறை தலையில் முறையாக எப்படி அப்ளை செய்வது?

hair2
- Advertisement -

கடையில் ஆயிரக்கணக்கில் காசு கொடுத்து வாங்கிய சீரமுக்கு இணையான ஒரு ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய சீரம் விலை அதிகமாக கடைகளில் கிடைக்கின்றது. ஆனால் அதில் சேர்த்து இருக்கக் கூடிய பொருட்களை சரியாக பார்த்தோம் என்றால், சில செயற்கையான பொருட்களின் கலப்படமும் கண்டிப்பாக இருக்கும். அதாவது கலர் சாயம், முடியை சைனிங் ஆக்குவதற்கு அதிகப்படியான கெமிக்கல்ஸ் இவைகள் கலக்கப்பட்டு தான் சீரம் தயார் செய்யப்படுகின்றது. இவ்வளவு பிரச்சனைகளை கொண்ட சீரமை நிறைய காசு கொடுத்து வாங்கி நம்முடைய தலையில் அப்ளை செய்தாலும் முழுமையான பலனை நம்மால் பெற முடியவில்லை.

முடி உதிர்வை குறைத்து தலைமுடியை சீராக வரச் செய்ய எந்தவிதமான கலப்படமும் இல்லாத ஒரு ஜெல் எப்படி தயாரிக்க போகின்றோம் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ஜல்லை பயன்படுத்தி வந்தால் தலைமுடியில் இருக்கக்கூடிய அத்தனை பிரச்சனைகளும் சரியாகி, முடி மூன்றே மாதத்தில் மூன்று மடங்கு அதிகப்படியான வளர்ச்சியை பெரும்.

- Advertisement -

இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருட்கள் 3 மட்டும் தான். சுத்தமான தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காய சாறு – 1 டேபிள் ஸ்பூன், ஆளி விதை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன். (கூடுமானவரை வெங்காய சாறை அப்படியே எடுத்து நேரடியாக தலையில் அப்ளை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். அது சில பேருக்கு எதிர்மறையான விளைவுகளை கொடுத்து விடும். முடி வளர்ச்சியை கொடுக்கக்கூடிய சில பொருட்களோடு சேர்த்து தான் வெங்காய சாறு தலைக்கு பயன்படுத்த வேண்டும்.)

4 ஸ்பூன் அளவு ஆளி விதைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி இதை அப்படியே அடுப்பில் வைத்து, மிதமான தீயில் எட்டில் இருந்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்தால் திக்காக நமக்கு ஜெல் கிடைக்கும். இதை அப்படியே ஒரு மெல்லிசான காட்டன் துணியில் ஊற்றி, பிழிந்து எடுத்தால் கொழ கொழவென ஆளிவிதை ஜெல் நமக்கு கிடைத்துவிடும். இதை பிளக்சீட்ஸ் ஜெல் என்றும் சொல்லுவார்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்காயத்தை தோலுரித்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து பிழிந்து வெங்காய சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். மரச்செக்கு தேங்காய் எண்ணெயாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.

தயாராக எடுத்து வைத்திருக்கும் இந்த மூன்று பொருட்களையும் (தேங்காய் எண்ணெய், ஆளி விதை ஜெல், வெங்காய சாறு) ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்துக் கலந்தால் ஒரு ஜெல் நமக்கு கிடைத்திருக்கும் அல்லவா. இதை தான் நம்முடைய தலையில் அப்ளை செய்ய வேண்டும். வாரத்தில் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் இதை நம்முடைய தலையில் போடலாம். தலைக்கு குளிப்பதற்கு 20 நிமிடத்திற்கு முன்பு இந்த ஜெல்லை ஸ்கேல்பில் நன்றாக படும்படி வைத்து மசாஜ் செய்து விட வேண்டும். 20 நிமிடங்கள் நன்றாக ஊறியதும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு வழக்கமாக தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.

உங்களுடைய தலைமுடியில் சொல்ல முடியாத அளவிற்கு, உங்களுக்கு தெரியாத அளவிற்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய பவர் இந்த ஜெல்லுக்கு உண்டு. இதை மிகக் குறைந்த அளவில் செய்து அப்போதே பயன்படுத்திக் கொண்டாலும் சரி, அப்படி இல்லை என்றால் கொஞ்சம் நிறைய செய்து இந்த ஜெல்லை ஃப்ரீசரில் வைத்தால் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

ஆனால் ஃப்ரீசரில் வைத்து ஸ்டோர் செய்யும் போது தலைக்கு போடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே இந்த சீரமை எடுத்து வெளியில் வைக்க மறக்க கூடாது. ஃப்ரிட்ஜில் வைத்தால் மூன்று நாட்கள் மட்டுமே கெட்டுப் போகாமல் இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -