ஜோதிடம் : சின்னத்தம்பி யானையின் மன போராட்டத்திற்கு ஜோதிட காரணம் இதோ

chinnathambi-elephant

ஜோதிடம் என்பது மனிதர்கள் நாகரிகம் அடைய தொடங்கிய காலத்திலேயே உருவாகிய ஒரு வானியல் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த ஒரு கலையாகும். ஜோதிட கலையில் மிகவும் நிபுணத்துவம் மற்றும் பல ஆண்டு அனுபவம் பெற்றவர்கள் ஒரு விடயத்திற்கு ஜோதிட பலன் கணிக்கும் பட்சத்தில் அதன் பலன் துல்லியமாக இருக்கும். அந்த வகையில் சமீப காலமாக அனைவரும் கவனிக்கும் விடயமாக இருக்கும் சின்னத்தம்பி என்று பெயரிடப்பட்டிருக்கும் ஒற்றை காட்டு யானை விவகாரத்தில் ஜோதிட சாஸ்திரத்தின் ஆச்சர்யமான சூட்சமங்களை தெரிந்து கொள்ளலாம்.

elephant

கடந்த ஒரு வார காலமாக அனைத்து ஊடகங்களிலும் கோவை மாவட்டத்தை கதிகலங்க செய்திருக்கும் ஒற்றை ஆண் காட்டு யானையான சின்னத்தம்பி பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த ஒற்றை காட்டு யானையான சின்னத்தம்பியை டாப்ஸ்லிப் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விரட்டியும், பல கிலோமீட்டர்கள் நடந்து, மீண்டும் முன்பு இருந்த கோவை மாவட்டம் பெரிய தடாகம் ஊரின் வனப்பகுதிக்கே திரும்பி வந்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தையும், கலகத்தையும் தந்துள்ளது.

அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் இந்த யானை விவகாரத்தில் ஜோதிடம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகிறார்கள். ஏனெனில் கோட்சார படி பார்க்கும் போது கோவை மாவட்டம் தனுசு ராசியில் இருக்கிறது. தனுசு ராசி என்பது குரு பகவானின் ராசியாகும். குரு பகவானின் வாகனம் யானை. பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் 12 ஆம் வீட்டில் குரு பகவான் இருக்கும் காலத்தில் மனப்போராட்டம், இடமாற்றங்கள் ஏற்படும் என்பது ஜோதிட விதி. தற்போது தனுசு ராசிக்கு 12 ஆம் இடமாகிய விருச்சிக ராசியில் குரு பகவான் இருப்பதால், அவரின் வாகனமாக அந்த ஒற்றை காட்டு யானையான சின்ன தம்பி யானையும் மனப்போராட்டமான நிலையில் இருப்பதோடு, அதன் இருப்பிடத்தில் இருக்காமல் தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருக்கும் சூழலை சந்திக்கிறது.

guru

மேலும் நியூமெராலஜி எனப்படும் எண் கணித சாஸ்திர படி பார்க்கும் போது CHINNATHAMBI என்கிற ஆங்கில எழுத்துகளின் எண் கணித எண்களை கூட்டினால் 37 வருகிறது. 3 + 7 = 10 = 1 இந்த “1” ஆம் எண் என்பது சூரியனின் எண்ணாகும். தனுசு ராசியில் சூரியனின் அம்சம் கொண்ட நட்சத்திரமாக உத்திராடம் நட்சத்திரம் வருகிறது. இது குரு பகவானின் தோஷம் கொண்ட நட்சத்திரம் என கூறுகிறார்கள். இதனால் தான் விநாயகர் பெருமானுக்கு ஒரு தந்தம் உடைந்ததாக கூறுகிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் சின்னத்தம்பி யானையை முதலில் பிடித்து இடமாற்றம் செய்த போது அதன் தந்தத்தின் சிறு பகுதி உடைந்து விட்டது. இதிலிருந்து உலகில் நிகழும் அனைத்து விடயங்களையும் நுணுக்கமாக ஆராயும் போது ஜோதிட சாஸ்திரத்தின் தாக்கம் அதில் இருப்பதை நாம் அறிய முடியும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

இதையும் படிக்கலாமே:
12 ராசியினர் இந்த ஆண்டு செல்ல வேண்டிய கோயில்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chinnathambi elephant in Tamil. It is also called as Jothida sastram in Tamil or Jothida palangal in Tamil or Suriyan natchathiram in Tamil or Chinnathambi yanai in Tamil.