நாளை சித்திரை கிருத்திகை! முருகப் பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் தீராத பிரச்சனைகளும் தீரும்.

murugan

தமிழ் கடவுள் முருகனுக்கு நாளை மிகவும் விசேஷமான நாள். சித்திரை கிருத்திகை. இந்த தினத்தில் முருகப்பெருமானை நினைத்து வழிபடுவதன் மூலம் சிறப்பான பலனை அடைய முடியும். சூழ்நிலை காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சித்திரை கிருத்திகை தினத்தை வீட்டில் இருந்தபடியே முருகப்பெருமானின் மந்திரத்தைச் சொல்லி, சுலபமான முறையில் எப்படி வழிபடலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

murugan

ஒரு விசேஷமான தினம் என்றால் எப்பவும் போல் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. முருகப்பெருமானுக்கு நெய்தீபம் ஏற்றுவது மிக மிக சிறப்பான ஒன்று. முடிந்தால் நாளை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரே ஒரு நெய்தீபம் ஏற்றியாவது முருகப்பெருமானை வழிபட வேண்டும். நாளைய தினம், காலை வேளையிலேயே கந்தசஷ்டி கவசத்தை ஒலிக்கச் செய்து காதால் கேட்பது நமக்கு பல கோடி புண்ணியத்தை தேடித்தரும் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, உங்களால் முடிந்த நைய்வேதியதியத்தை முருகப்பெருமானுக்கு படைத்து, மனதார தற்போது இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை உச்சரியுங்கள். உங்களுக்கான மந்திரம் இதோ.

murugan

ஓம் தண்டாயுதபாணியை போற்றி!

- Advertisement -

முடிந்தவர்கள் இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரமான காலை 6 மணிக்கு முன்பாகவே உச்சரிப்பது மிகவும் நல்லது. முடியாதவர்கள் காலை 8 மணிக்கு முன்பாவது உச்சரித்து விடுங்கள். இதேபோல் மாலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் இந்த மந்திரத்தை மீண்டும் 108 முறை உச்சரித்து உங்களது சித்திரை கிருத்திகை விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். முடிந்தவர்கள் காலையிலிருந்து உண்ணாநோன்பு இருந்து முருகனை வழிபட்டால் மிக நல்லது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
விளக்கேற்றும்போது திரியை இந்த வடிவத்தில் போட்டால், வீடு சுபிக்ஷம் ஆகும். எந்த வடிவத்தில் போடுவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Krithigai. murugan manthiram. Murugan manthiram Tamil. krithigai in aprial 2020