ஜோதிடம் : சித்திரை மாத ராசி பலன்கள் – 2019

chithirai

மேஷம்:
Mesham Rasi

இந்த மாதம் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு திருப்திகரமானதாக இருக்கும். புதிய புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும். சிலருக்கு பெண்களால் பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வழியில் பிரச்சனைகள் உண்டாகும். கணவன் – மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். அவருடைய பிறரிடம் . எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கைகூடி வரும். வருமானமும் அதிகரிக்கும். பாராட்டுகள் குவியும்மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம். தொழில், வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரித்து லாபமும்

ரிஷபம்:
Rishabam Rasi

இந்த மாதம் உங்களுக்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும்.புத்திர பாக்கியமின்றி தவித்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். சுப காரிய முயற்சிகள் வெற்றியடையும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றம், இட மாற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இம்மாதம் இருக்கும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவார்கள். மாணவர்களுக்குப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியிருக்கும்.

மிதுனம்:
midhunam

இந்த மாதம் உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் பணவரவும் பொருள்சேர்க்கையும் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு சக கலைஞர்கள் உதவியாக இருப்பார்கள். மாணவர்கள்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு பெண்களால் நன்மை உண்டாகும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் இழுபறி நிலை இருக்கும். வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக கலைஞர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் விலகும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வமில்லா நிலை ஏற்படும் என்பதால் தீவிர ஈடுபாட்டுடன் படித்தால் மட்டுமே தேர்வுகளில் சிறக்க முடியும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சிம்மம்:
simmam

இந்த மாதம் பொருளாதார வசதி சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சிலருக்கு பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலை ஏற்படும். குடும்பத்தில் தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு இருக்கும். உங்கள் எதிரிகள் பணிந்து போவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களின் கடின உழைப்பை பொறுத்து லாபம் கிடைக்கும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும்.

கன்னி:
Kanni Rasi

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் சற்று கடின முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் சில தடைகள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறு பாடுகள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்ததை விடவும் பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மாணவர்கள் சக மாணவர்களிடம் கவனமாகப் இருக்க வேண்டும்.

துலாம்:
Thulam Rasi

பண வரவு சுமாராக இருக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். குடும்பத்தில் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். முயற்சிகளில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன் படுத்திக் கொள்வது அவசியம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

விருச்சிகம்:
virichigam

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். பணவரவில் குறை ஏதும் இருக்காது. புதிய ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணிக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையை சேர்ந்தவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

தனுசு:
Dhanusu Rasi

திடீர் பணவரவுகள், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்க ளிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உங்களுக்கு வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ற லாபங்கள் கிடைக்கும்.ஆண்களுக்கு பெண்களாலும், பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். அலுவலகத்தில் உங்களின் அனுபவபூர்வமான ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் பாராட்டப்படும். கலைத்துறையினர் சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். மாணவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.

மகரம்:
Magaram rasi

இந்த மாதம் பணவரவு அதிகம் இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். உறவினர்களால் உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும். உடல் நலனில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். சிலர் தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு கணவரின் பாராட்டுகள் கிடைக்கும்.மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

கும்பம்:
Kumbam Rasi

பண புழக்கம் நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பு பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பெண்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கலைத்துறையினருக்கு தாராளமான பணவரவும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்வீர்கள்.

மீனம்:
meenam

சிலருக்கு திடீர் பொருள்வரவு ஏற்படும். புதிய ஆடை, ஆபர ணங்கள் சேரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அலுவலகத்தில் எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டு முடிக்கவேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பை செலுத்தினால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். கலைத்துறையினருக்கு பணத்தோடு, புகழும் கௌரவமும் கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இம்மாதம் இருக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் இருந்த மந்த நிலை மாறி, கல்வியில் சிறந்து பாராட்டுகளை பெறுவீர்கள்.

மாத ராசி பலன், வார பலன், குழந்தைகளுக்கான சிறு கதைகள் உள்ளிட்ட பல தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.