நாளை சித்திரை சங்கடஹர சதுர்த்தி தினம் – இதை செய்தால் அதிக பலன்கள் உண்டு

vinayagar
- Advertisement -

தினமும் இறைவழிபாடு மேற்கொள்பவர்களின் உடலும், மனமும் எப்போதும் உற்சாகத்தோடும் ஆரோக்கியமாகவும் இருக்கும். நமது கலாச்சாரத்தில் இறைவனை வழிபட்டு நன்மைகள் பலவற்றை பெறுவதற்கு ஏராளமான முறைகள் இருக்கின்றன. பெரும்பாலான மக்கள் மிகவும் விரும்பி வழிபடக்கூடிய தெய்வமாக விநாயகர் இருக்கிறார். அவரை சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று எப்படி வழிபட்டால் எத்தகைய நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Vinayagar

மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமி தினங்களை காட்டிலும் அதிக சிறப்புகளைக் கொண்ட தினம் சித்ரா பௌர்ணமி தினம். இந்த சித்ரா பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும் நாள் சித்திரை தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி தினமாகும். விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினங்களில் சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி தினமும் ஒன்று. இந்த தினத்தில் விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.

- Advertisement -

சித்திரை தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, உணவு ஏதும் உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் தந்து, ஆராதனை பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

vinayagar

சித்திரை மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் குடும்பத்தில் இருக்கும் பொருளாதார கஷ்ட நிலை நீங்கும். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரிவினைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். நீண்ட காலமாக நோய்களால் அவதிப்படுபவர்கள் நோய்கள் நீங்கி பூரண உடல் நலம் பெறுவார்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். திருமணம் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
தொழில், வியாபாரங்களில் பன்மடங்கு லாபங்கள் பெற இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chithirai sankatahara sathurthi in Tamil. It is also called as Chithirai matham in Tamil or Chithirai theipirai sathurthi in Tamil or Vinayagar valipadu in Tamil or Chithirai matha sirappugal in Tamil.

- Advertisement -