நாளை சித்திரை மாத சிவராத்திரி! இந்த மந்திரத்தை உச்சரித்து சிவபெருமானை வழிபட்டால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

sivan-mantra

சிவராத்திரி அன்று சிவனை மனதார நினைத்து வழிபடும்போது அந்த ஈசனின் அருளைப் நம்மால் முழுமையாக பெற முடியும். இந்த சித்திரை மாதம் வரும் சிவராத்திரியில் அந்த ஈசனின் அருளை முழுமையாகப் பெற, எப்படி சுலபமான முறையில் வீட்டிலிருந்தபடியே வழிபாடு செய்யலாம் என்பதைப் பற்றியும், இந்த தினத்தில் சிவபெருமானை நினைத்து உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

sivan

விரத நாட்களில் என்ன வழிமுறைகளை நீங்கள் கடைபிடித்தீர்களா, அதேபோல் இந்த சிவராத்திரி அன்றும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு, உங்களால் என்ன நைவேத்தியம் செய்து, இறைவனுக்கு படைக்க முடியுமோ அதை படையல் இட்டு, பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றிவைத்து, காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

மாதம்தோறும் வரும் சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் சித்திரை மாத சிவராத்திரி அன்று சிவ பெருமானை மனதார வழிபடும்போது நோய் நொடியற்ற வாழ்க்கையையும், சுபிட்சமான வாழ்க்கையையும் பெற முடியும் என்று சொல்கிறது சாஸ்திரம். சிவராத்திரி அன்று சிவனை நினைத்து மனதார உச்சரிக்க வேண்டிய மந்திரம் உங்களுக்காக இதோ.

‘ஓம் சிவசிவ சங்கரா போற்றி!’

- Advertisement -

இந்த மந்திரத்தை உச்சரிப்பதில் எந்த ஒரு கஷ்டமும் இல்லை. காலையில் 108 முறை உச்சரிக்க வேண்டும். மாலையில் 6 மணிக்கு பிறகு 8 மணிக்குள் இந்த மந்திரத்தை மீண்டும் ஒரு முறை 108 முறை உச்சரித்து உங்களது சிவராத்திரி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

sivan

அந்த ஈசனின் அருளை முழுமையாகப் பெறுவதற்கு சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள சுலபமான மந்திரம் இது. நம்பிக்கையோடு உச்சரித்துப் பாருங்கள். வளமான வாழ்க்கையை பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்கள் குழந்தைகள் தீர்க்காயுள் பெற இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை கூறினால் போதும்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sivarathiri manthiram in Tamil. Sivan manthiram. Sivan manthiram Tamil. Sivarathiri Tamil. Sivarathiri viratham.