உங்கள் குழந்தைகள் தீர்க்காயுள் பெற இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை கூறினால் போதும்.

durga

சில குழந்தைகள் ஜனன ஜாதகத்தின் படி குறைந்த ஆயுளை கொண்டிருப்பார்கள். அல்லது அவர்களின் வாழ்க்கையில் இத்தனையாவது வயதில் மிகப் பெரிய கண்டம் வரும் என்று கூறி இருப்பார்கள். கிரகங்களின் சேர்க்கை சரியாக அந்த குழந்தைக்கு அமைந்து இருக்காது. சில குழந்தைகளுக்கு மரணத்துடன் போராட வேண்டிய கொடுமையாக நிலை இருக்கும். கொடூர நோய்கள் தாக்கி உயிருக்கு போராடி கொண்டிருப்பார்கள். பிறவி குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளும் வாழ்நாளை கஷ்டப்பட்டு நகர்த்தி கொண்டிருக்கும். பார்க்கும் போதே நெஞ்சம் கணத்துதான் போகும். இது போன்ற பிரச்சனைகளை மன தைரியத்துடன் எதிர்கொள்வது அந்த குழந்தையையும், குழந்தையின் பெற்றோர்களுக்கும் அவசியமாக இருக்கும்.

Tamil boy baby names

யார் கைவிட்டாலும் இறைவன் கைவிடமாட்டார் என்ற எண்ணம் கொள்ள வேண்டும். ஒரு உயிரை கொடுப்பவரும் அவரே, அதை பறித்து வேடிக்கை பார்ப்பதும் அவரே. அவரவரின் கர்ம வினைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். நம்மால் பிரார்தனை செய்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? வாழும் போதே நல்லதை செய்து நல்லவர்களாக வாழ்வது தான் அனைவருக்கும் சுகமான, ஆரோக்கியமான வாழ்க்கை அமைய துணை புரியும். இந்த மந்திரம் துர்கா தேவியின் சக்தி வாய்ந்த மந்திரம். இதை உச்சரிப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். இதனை முறையாக எப்படி செய்வது என்று இப்பதிவில் காணலாம்

இந்த மந்திரத்தை தொடர்ந்து குழந்தையின் நலன் கருதி செய்து கொண்டே வர வேண்டும். குழந்தையின் ஆரோக்கியம் சீராகும் வரை செய்யலாம். குறிப்பாக அடிக்கடி நோய்வாய்படும் குழந்தைகளுக்கு இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

durgai amman

துர்கா மந்திரம்:
கும் கும் கும் தும் தும் தும் துர்கே துர்கே மஹாதுர்கே!
நாசய நாசய ஹன ஹன பச பச முத முத பந்த பந்த ஹிசான்!
மகாஷாஷ்தி ரூபிணி!
இமாம் பாலகம் ரக்ஷ ரக்ஷ சிரஞ்ஜீவினம் குரு குரு!
ஹ்ரீம் ஸ்ரீம் கும் தும் பட் ஸ்வாஹா!!

- Advertisement -

துர்கைக்கு பூஜை செய்யும் போது ஒரு சொம்பு நிரம்ப தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். வடக்கு நோக்கியவாறு அமர்ந்து கொள்ளுங்கள். மேற்கூறிய துர்கா தேவியின் சிரஞ்சீவியாக வாழ வைக்கும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்கவும்.

durga-devi-amman

27 முறை உச்சரித்ததும் அந்த சொம்பில் இருக்கும் நீர் புனிதமாகி விடும். இந்த புனித நீரை பாதிக்கபட்ட குழந்தைக்கு தொடர்ந்து கொடுத்து வர வேண்டும். அடிக்கடி நோயால் அவதிபடும் குழந்தைகள் தெம்படையும். பிரச்சனைகள் படிப்படியாக தீரும்.

இதையும் படிக்கலாமே
தீர்க்கவே முடியாது என்ற நோய் கூட இந்த மந்திரத்தை 48 நாட்கள் தொடர்ந்து உச்சரித்தால் தீரும். காஞ்சிப் பெரியவர் அருளியது.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Noi theerkum manthiram in Tamil. Durga manthiram. Durgai amman manthiram Durga prarthanai in Tamil. Noi theera manthiram Tamil.