ஒருவருடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அவரை சுற்றி நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்க வேண்டும். அப்படி நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருப்பதற்கு நமக்கு கண்டிப்பான முறையில் நவகிரகங்களின் அருள் என்பது வேண்டும். நமக்கு நடக்கக்கூடிய ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் நவகிரகங்களின் ஆதிக்கம் என்பது இருக்கும் அது நல்ல விதத்தில் இருந்தால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். தீய விதத்தில் இருந்தால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் நவகிரகங்கள் இருந்தாலும் நம்முடைய வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் ஒன்று இருக்கிறது. அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன. அந்த ஒன்பது கிரகங்கள் அனைத்துமே சாதகமான சூழ்நிலையில் நமக்கு செயல்பட்டால் தான் நாம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற முடியும். ஏதாவது ஒரு கிரகம் நமக்கு பாதகமாக இருக்கும் பட்சத்தில் அந்த கிரகத்தால் நமக்கு பாதிப்புகள் உண்டாகும். ஜாதக ரீதியாக எந்த அளவிற்கு இந்த நவகிரகங்களை நம்பி செயல்படுகிறோமோ அதே அளவிற்கு தான் வீட்டிற்குள்ளும் நவகிரகங்களின் ஆதிக்கம் என்பது இருக்கும். வீட்டில் இருக்கக்கூடிய நவகிரகங்களின் ஆதிக்கம் நல்ல விதமாக இருந்து வீட்டில் அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
பொதுவாக வீட்டிற்கு நாம் செய்யக்கூடிய எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அந்த பரிகாரத்தை வீட்டிற்குள் நுழைவதற்கு காரணமாக இருக்கக்கூடிய நிலை வாசலில் தான் செய்வோம். அந்த வகையில் தான் நவகிரகங்களின் அருளை பெறுவதற்கும் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதற்கும் நிலை வாசலில் நாம் ஒரு பரிகாரத்தை செய்ய போகிறோம். இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். இருப்பினும் ராகு காலம், எமகண்டம், கரிநாள் போன்ற நாட்களை தவிர்த்து விட்டு அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களை தேர்வு செய்வது நல்ல பலனை தரும்.
இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக வீட்டை சுத்தம் செய்து கொள்ளுங்கள். வீட்டை சுத்தம் செய்வது போலவே நிலை வாசலையும் பன்னீரை வைத்து சுத்தம் செய்து நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த துணியில் நவகிரகங்களின் அருளைப் பெற்ற நவதானியங்களை வைக்க வேண்டும். அதை மூட்டையாக கட்டி நிலை வாசலில் கட்டிவிட வேண்டும். தினமும் காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி சாமி கும்பிடும் பொழுது சாம்பிராணி ஊதுபத்தி காட்டுவோம் அல்லவா? அப்பொழுது அந்த மூட்டைக்கும் நாம் காட்ட வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த மூட்டையில் இருக்கக்கூடிய நவதானியத்தை எடுத்து ஓடுகின்ற தண்ணீரில் போட்டுவிட்டு புதிதாக மாற்றி கட்டிக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:வாஸ்து பகவானின் அருளை பெற செய்ய வேண்டிய வழிபாடு
நவகிரகங்களின் அருளை பெறுவதற்கும் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை விலக்கி நேர்மறை ஆற்றல்களை அதிகரிப்பதற்கும் முழு மனதோடு இந்த பரிகாரத்தை நிலை வாசலில் செய்து பாருங்கள். சிறப்பான பலனை பெறுவீர்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.