நாளை சித்திரை வளர்பிறை ஏகாதசி – இதை செய்தால் மிகுதியான பலன்களை பெறலாம்

perumal
- Advertisement -

தமிழ் மாதங்கள் மொத்தம் 12. இதில் அனைத்து மாதங்களும் சில சிறப்புகளை கொண்டிருக்கிறது. இவற்றில் சித்திரை மாதமே தமிழ் வருடத்தின் முதல் மாதமாக வருகிறது. அந்த சித்திரை மாதத்தில் இறை வழிபாட்டிற்குரிய பல சிறப்பு மிக்க தினங்கள் வருகின்றன. அதில் பெருமாளின் வழிபாட்டிற்குரிய சித்திரை வளர்பிறை ஏகாதசி விரதம் மற்றும் வழிபாட்டால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Sudarshana vishnu

சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசி “காமதா ஏகாதசி” எனப்படுகிறது. புராணங்களின் படி லலிதன் என்ற கந்தர்வன், ஒரு சாபத்தின் காரணமாக ராட்சஸனாக மாறினான். அவனது மனைவியான லலிதை சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் இந்த காமதா ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து, பெருமாளின் அருளால் கணவனின் சாபம் நீங்க செய்தாள். நீங்கள் விரும்பியதை எல்லாம் நிறைவேற்றும் விரதம் இது. எனவே மிகுந்த நம்பிக்கையோடு இந்த விரதம் இருப்பவர்களுக்கு நன்மைகள் பல ஏற்படும் என்பது பெரியோர்களின் வாக்காகும்.

- Advertisement -

இந்த சித்திரை வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் அல்லது துளசி இலைகள் ஊறவைத்த தீர்த்த நீரை அருந்தி விரதம் இருக்கலாம்.

vishnu

அன்றைய நாள் முழுவதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்கர நாமம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் தவிப்பவர்களுக்கு திருமணம் சீக்கிரம் நடக்கும். குடும்ப பொருளாதார நிலை உயரும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
தேர்வுகளில் வெற்றி பெற இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chithirai valarpirai ekadasi in Tamil. It is also called as Ekadasi vratham in Tamil or Chithirai matham in Tamil or Kamada ekadashi in Tamil or Kamada ekadasi viratham in Tamil.

- Advertisement -