நாளை சித்ரா பௌர்ணமி அன்று, முதல் செலவாக, காசு கொடுத்து இந்த 1 பொருளை வாங்கி விட்டால் போதும். உங்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டம், கடன் சுமை இருக்கவே இருக்காது.

pournami-durga
- Advertisement -

எல்லோருக்குமே வாழ்க்கையில் கடன் இல்லாமல், பணக்கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ஏனோ தெரியவில்லை. இந்த இரண்டு பிரச்சனைகளும் நம்மை விடாமல் துரத்துகின்றது. கஷ்டத்தை கொடுக்கக்கூடிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, வீட்டில் ஐஸ்வரியம் பெருக, லட்சுமி கடாட்சம் பெருக, நாளை(05-05-2023) சித்ரா பௌர்ணமி தினத்தில் நாம் எந்தெந்த பொருட்களை வாங்க வேண்டும். அந்த பொருட்களை எல்லாம் எதற்காக வாங்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

கடன் தீர சித்ரா பௌர்ணமி அன்று வாங்க வேண்டிய பொருள்:
பட்டியலில் நிறைய பொருள் இருக்கிறது என்று பயந்து விடாதீர்கள். உங்களால் இதில் எந்த பொருளை வாங்க முடியுமோ, அந்த பொருளை மட்டும் வாங்குங்கள். அதுவும் காலையில் எழுந்து கடைக்கு போய் முதல் செலவாக இந்த செலவை செய்து அந்த மங்களகரமான பொருளை வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும். சரி, அது எந்தெந்த பொருள் என்று பார்த்து விடுவோம். வெள்ளை நிற டைமண்ட் கற்கண்டு, பச்சரிசி, மல்லிகைப்பூ, கல் உப்பு, மஞ்சள், குங்குமம், 6 பொருட்கள் இதில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்திருக்கும் சித்ரா பௌர்ணமி என்பதால் சுக்கிரனுக்கு உகந்த மகாலட்சுமிக்கு உகந்த வெள்ளை நிற கல்கண்டு வாங்குவது சிறப்பு. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம். வெள்ளிக்கிழமை பௌர்ணமி தினத்தில் கல் உப்பை வாங்கினால் வீட்டில் கடன் சுமை கட்டாயம் குறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மல்லிகைப்பூ மகாலட்சுமியின் அம்சம். இந்த வாசத்திற்கு மயங்காத நல்ல சக்தியே கிடையாது. பச்சரிசி சந்திர பகவானுக்கு உரிய பொருள். பிறகு வழக்கம் போல எந்த ஒரு நல்ல நாளாக இருந்தாலும் மஞ்சள் குங்குமம் வாங்குவது மங்களத்தை உண்டாக்கும். இந்த ஆறு பொருட்களை வாங்க முடிந்தவர்கள் வாங்கலாம். முடியாது என்பவர்கள் உங்களுக்கு அந்த நாளில் எந்த பொருள் தேவையோ இதில் ஏதாவது ஒன்றையாவது நிச்சயம் நீங்கள் வாங்க வேண்டும்.

காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு, பூஜையறை விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வாங்கி வந்த இந்த பொருட்களை எல்லாம் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து கொள்ளவும். காலையில் பூஜை செய்த இந்த பொருட்களை எல்லாம் எடுத்து மாலை சித்ரா பௌர்ணமி பூஜைக்காக பிரசாதம் செய்வீர்கள் அல்லவா, அதில் இந்த பொருட்களை எல்லாம் சேர்க்கலாம். தவறே கிடையாது. எந்த பொருளையும் வீணாக்காதீங்க. பூஜை முடித்த பின்பு எடுத்து சமையல் அறையில் வைத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மல்லிகை பூக்களால் உங்களுடைய பூஜை அறையை அலங்காரம் செய்யுங்கள். மகாலட்சுமி பாதத்தில் சிறிதளவு மல்லிகை பூவை உதிரியாக அர்ச்சனை செய்து, அந்த பூக்களை எடுத்து கொண்டு போய் மேலே நிலா வெளிச்சத்தில் சிறிது நேரம் வைத்திருந்து, அந்த மல்லிகை பூவை பத்திரமாகக் கொண்டு வந்து நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் உங்கள் பண பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும். அந்த அளவுக்கு பாசிட்டிவ் வைப்ரேஷன் சித்ரா பௌர்ணமி அன்று வானத்தில் உதிக்கும் நிலவில் இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: நாளைய தினம் சித்ரா பௌர்ணமி அன்று கடன் நீங்கி வீட்டில் செல்வம் பெருக இந்த வெற்றிலை பரிகாரத்தை தவறாமல் செய்து விடுங்கள். இப்போது தவற விட்டால் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

இந்த நன்னாளில் உங்களால் முடிந்தால் சித்ரா அன்னம் செய்து சந்திரனுக்கு வைத்து வழிபாடு செய்து விட்டு, சித்திரகுப்தன் வழிபாட்டை முடித்துவிட்டு நீங்கள் செய்த அந்த சித்ரா அன்னத்தை கொண்டு போய் பசியோடு இருக்கும் நாலு பேருக்கு அன்னதானம் செய்யலாம். சித்ரா பௌர்ணமி என்றாலே வீட்டில் பல வகையாக சாதங்கள் செய்திருப்பீர்கள். அது நிச்சயம் கொஞ்சமாக இருக்காது. நிறைய தான் இருக்கும். அதையெல்லாம் கொண்டு போய் ஏழையாக இருக்கக்கூடிய இரண்டு பேருக்கு உங்கள் கையால் தானம் கொடுத்தால் உங்களுடைய குடும்பம் சந்தோஷமாக வாழ்வாங்கு வாழும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -