செட்டிநாடு ஃபேமஸ் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு. ஒரு முறை இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க. அதுக்கப்புறம் உங்களுடைய ஃபேவரிட் ரெசிபி இதுவா தான் இருக்கும்

- Advertisement -

குழம்பு எத்தனை வகைகள் இருந்தாலும், அசைவத்தில் எப்படி மீன் குழம்பு தனி இடத்தை பிடிக்குமோ, அதைப் போல தான் சைவத்தில் இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு. எந்த காய் போட்டு குழம்பு வைத்தாலும் இதன் சுவைக்கு அது ஈடு இணை ஆகாது. சாதாரண எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பே இப்படி என்றால், செட்டிநாடு ஸ்டைலில் மசாலாக்களை வறுத்து அரைத்து அந்த கைப்பக்குவத்தில் செய்யும் இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்புபை நீங்கள் ஒரு முறை ருசித்து விட்டால் போதும், இதன் பிறகு கத்திரிக்காயை பார்க்கும் போதெல்லாம் இந்த செட்டிநாடு எண்ணெய் குழம்பு தான் ஞாபகத்திற்கு வரும் அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதம் இருக்கும் இதோ அதற்கான செய்முறை பதிவு.

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்: சோம்பு – 1 ஸ்பூன், முந்திரி – 10, பொட்டுக்கடலை – 2 ஸ்பூன், பூண்டு – பத்து பல், கசகசா – 1ஸ்பூன், துருவிய தேங்காய் -நாலு டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

குழம்புக்கு தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் -150 ,சோம்பு – 1 டீஸ்பூன், பட்டை லவங்கம் – 2, வெந்தயம் – 1/2 டீஸ்பூன், வெங்காயம் – 2, தக்காளி – 3, தனியா தூள் – 2 ஸ்பூன், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், புளி- ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவு, மல்லித்தழை ஒரு கைப்பிடி, கருவேப்பிலை ஒரு கொத்து.

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு 100 கிராம் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கத்தரிக்காய்களை நான்காக நறுக்கி அதில் சேர்த்து பொரித்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அதிலிருந்து எண்ணெயை தனியே ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து விடுங்கள். இப்போது அதே கடாயில் சோம்பு, முந்திரி, பொட்டுக்கடலை, கசகசா இவைகள் எல்லாம் சேர்த்து லேசாக நிறம் மாறியவுடன் தேங்காய் துருவலை சேர்த்து லேசாக ஒரு பிரட்டு பிரட்டி இதையும் தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் இது அப்படியே ஆறட்டும்.

இப்போது அடுப்பை பற்ற கத்திரிகாய் பொறித்து மீதம் எடுத்து வைத்த எண்ணெய்யை ஊற்றி சூடானவுடன் பட்டை, லவங்கம் சேர்த்த பிறகு வெந்தியம், சோம்பு, இரண்டையும் சேர்த்த பின் வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும்.அதன் பிறகு மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். மஞ்சள் தூள் சேர்த்த பிறகு தான் தக்காளி சேர்க்க வேண்டும் தக்காளி சேர்த்து அதுவும் தண்ணீர் வற்றி நன்றாக வதங்கிய பிறகு மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இது நன்றாக கொதித்த உடன் புளிக்கரைச்சலை ஊற்றி அதுவும் ஒரு கொதி வந்த பிறகு அரைத்து வைத்த மசாலாவை இதில் சேர்த்து நன்றாக கொதித்து கெட்டி பதம் வந்தவுடன், பொறித்த கத்தரிக்காயை அதில் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு மல்லித்தலைகளை தூவி மீதம் இருக்கும் எண்ணையை இந்த குழம்பின் மீது ஊற்றி மூடி வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கிராமத்து ஸ்டைலில் அரைக்கீரை கடையல் 5 நிமிஷத்தில் எப்படி செய்வது? கீரையை கடைந்தால் இப்படித்தான் கடையனும்!

ஒரு ஐந்து நிமிடம் கழித்து சாதத்துடன் பரிமாறலாம். அருமையான செட்டிநாட்டு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி.

- Advertisement -