தாய்லாந்தில் கால் பதித்த சோழர்கள் – இன்று அங்கு தமிழ் பேசும் மக்கள்

chola-1
- Advertisement -

இன்று நம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பின்பற்றும் மதமான இந்து மதம் உலகின் பழமையான இன்று வரை நீடித்திருக்கும் ஒரு மதமாகும். உலகின் பல நாட்டு மக்கள் அதிவாசிகளைப் போல் வாழ்ந்த காலத்தில் பாரதம் மிக உயர்வான மனித நாகரிகம் மற்றும் பண்பாடு கொண்ட நாடாக இருந்தது. நமது உயரிய மதம், நாகரிகம், கலாச்சாரம் போன்றவை பிற நாடுகளுக்கும் அக்காலத்திலேயே பரவியது. அப்படி நமது நாட்டு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை இன்றும் பின்பற்றும் ஒரு நாட்டைப் பற்றி இங்கு காண்போம்.

Thanjai periya kovil

இன்று “தாய்லாந்து” என்று அழைக்கப்படும் ஒரு நாடு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை “சியாம்” என்றழைக்கப்டடது. ஆனால் நமது பாரத நாட்டின் பண்டைய இலக்கியங்களில் இந்த தாய்லாந்து நாடு அக்காலத்தில் “சியாமள” தேசம் என்று அழைக்கப்பட்டது. வங்க கடலையே ஏரியாக கருதி அதைக் கடந்து பல நாடுகளில் தங்கள் தடத்தை பதித்த “சோழர்கள்” இந்த சியாமள தேசத்தையும் ஆண்டார்கள். அப்போது அங்கிருந்த மக்கள் சோழர்கள் பின்பற்றிய “சைவ” மற்றும் “வைணவ” மதக் கோட்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு தாங்களாகவே விரும்பி அம்மதங்களை ஏற்றுக்கொண்டார்கள்.

- Advertisement -

அப்போது அந்த சியாமள நாட்டை ஆண்ட மன்னனுக்கு தங்கள் குலப்பெண் ஒருத்தியை திருமணம் செய்து வைத்தார்கள் சோழர்கள். இதனால் பல பண்பாடு மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் இந்த இரு ராஜ்ஜியங்களுக்கிடையேயும் ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்த நாட்டின் மன்னரும், மக்களும் புத்த மதத்தை தழுவினாலும் இந்து மத பாரம்பரிய பழக்க வழக்கங்களை அவர்கள் விட்டுவிடவில்லை.

rajarajan

அதற்கு உதாரணமாக தாய்லாந்து மன்னர்கள் குடும்பத்தில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அதற்கேற்ற தமிழ் மொழியின் சிறந்த படைப்புக்களான “திருப்பாவை” மற்றும் “திருவெம்பாவை” பாடல்கள் தமிழ் மொழியிலேயே நமது தமிழ் பிராமணர்களால் பாடப்படுகின்றன. சோழர்கள் காலத்தில் தமிழ்நாட்டின் ராமநாதபுரப் பகுதியைச் சேர்ந்த இந்த பிராமணர்கள் தாய்லாந்து நாட்டிற்கு சென்ற போது அந்நாட்டு மன்னர்கள் அவர்களை விரும்பி வரவேற்றனர். இந்த பிராமணர்கள் பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டு மன்னர்களால் ஆதரிக்கப்படுகின்றனர். இன்றும் இவர்கள் பங்கில்லாமல் அரச குடும்பத்தில் எந்த ஒரு நிகழ்வும் நடைபெறுவதில்லை.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இந்த சோழர்கள் மூலமாக தமிழ் “கவிச்சக்ரவத்தி கம்பன்” இயற்றிய “கம்பராமாயணத்தையும்” இந்நாட்டு மக்கள் அறிந்தனர். அந்த காவிய நாயகனாகிய “ஸ்ரீராமரிடம்” தாங்கள் கொண்ட மிகுந்த பற்றின் காரணமாக ஒவ்வொரு தாய்லாந்து மன்னரும் தன் பெயருக்கு பின்னால் “ராமா” என்ற பெயரை இணைத்துக்கொள்ளும் வழக்கத்தை தொடங்கினார்கள். மற்றும் அந்த ராமர் அரசாண்ட இந்தியாவின் “அயோத்தியா” நகரத்தை நினைவு படுத்தும் வகையில் தங்கள் நாட்டின் ஒரு நகரத்திற்கு “அயூத்தயா” என்று பெயரிட்டனர்.

இந்நாட்டில் “மீகாங்” என்று ஒரு பெரும் நதி ஓடுகிறது. “மா கங்கா” என்று நம் நாட்டின் புனித நதியான “கங்கை” நதியை நினைவுபடுத்தும் வகையில் அவர்கள் மொழியில் “மீகாங்” என பெயரிடப்பட்டது. மேலும் நம் நாட்டில் முற்காலத்தில் மன்னர்கள் செய்த சடங்கான “பொன் ஏர்” கொண்டு உழும் சடங்கை இவர்கள் இன்றும் கடைபிடிக்கின்றனர். இறுதியாக இந்த நாட்டு மன்னர்கள் குடும்பத்தில் யாரேனும் இறந்தால் இந்தியாவிலிருந்து “7 நதிகளின்” புனித நீரைக் கொண்டு சென்று அவர்களின் ஈம கிரியைகளை செய்கின்றனர். இதிலிருந்து நம் தமிழ் மற்றும் பாரத கலாச்சாரத்தை மற்ற நாட்டினர் போற்றி இன்றும் பின்பற்றி வரும் போது, நாம் இவற்றிலிருந்து விலகிச் சென்று கொண்டிருப்பது சற்றே வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

இதையும் படிக்கலாமே:
கடுமையான வெயிலிலும் குளிர்ந்த நிலையிலே உள்ள அதிசய கோவில் பற்றி தெரியுமா ?

English Overview:
Here we have the Chola history in Tamil in which what happened in Thailand after Chola acquired it and how Hindu religion came in to Thailand.

- Advertisement -