கிறிஸ்துமஸ் தினத்திற்கு நீங்களே உங்கள் கையால் இந்த சுலபமான சுவையான கேக்கை செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள். பாராட்டு உங்களுக்கு தான்

cake
- Advertisement -

கிறிஸ்துமஸ் என்றாலே கொண்டாட்டம்தான். அதில் முக்கியமாக இடம் பெறுவது சாக்லேட், ஐஸ்கிரீம், கேக் போன்ற இனிப்பு வகைகள் தான். அனைவருமே மற்றவர்களுக்கு இவற்றை பகிர்ந்து கொடுத்து கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த குளிர்காலத்தில் கலர் கலரான வண்ணங்களில் அலங்காரங்கள் செய்து, மின் விளக்குகளை ஒளிர விட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாட்டத்தை கொண்டாடி மகிழ்கின்றனர். அதை கொண்டாடுபவர்களுக்கும் சரி,பார்க்கும் மற்றவர்களுக்கும் ஆனந்தம் அதிகமாகவே இருக்கிறது. உறவினர்கள் மட்டுமல்லாது அக்கம் பக்கத்து வீட்டாருடன் கிறிஸ்துமஸ் பண்டிகை மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கின்றனர். எனவே மற்றவருக்கு கொடுக்கக்கூடிய கேக்கை நீங்களே வீட்டில் செய்த இந்த கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடி மகிழலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

chrisrmus

தேவையான பொருட்கள்:
கருப்பு திராட்சை – கால் கப், மஞ்சள் திராட்சை – 2 ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, பாதாம் – 10, பிஸ்தா – 10, ஆரஞ்சு ஜூஸ் – ஒரு கப், பேக்கிங் சோடா – அரை ஸ்பூன், பேக்கிங் உப்பு – அரை ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – 3, கிராம்பு – 3, ஏலக்காய் – 3, சர்க்கரை – அரை கப், மைதா மாவு – அரை கப், பால் பவுடர் – 3 ஸ்பூன், உப்பு இல்லாத பட்டர் – – கால் கப், காய்ச்சிய பால் – கால் கப், டூட்டி ஃப்ரூட்டி – அரை கப்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் கால் கப் டூட்டி ஃப்ரூட்டி, கருப்பு திராட்சை, மஞ்சள் திராட்சை மற்றும் முந்திரி, பிஸ்தா, பாதாம் இவற்றைப் பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றுடன் கால் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு கப் ஆரஞ்சு பழ ஜூஸை சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

nuts

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் மூன்றுபட்டை துண்டு 3 கிராம்பு மற்றும் 3 ஏலக்காயின் உள்ளிருக்கும் விதைகளை மட்டும் சேர்த்து, அவற்றுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மைதா மாவு, 3 ஸ்பூன் பால் பவுடர் மற்றும் பொடித்து வைத்த சர்க்கரை பவுடர் இவை அனைத்தையும் நன்றாக சலித்துக் கொள்ளவேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, அரை கப் சர்க்கரை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து கேரமெல் செய்து கொள்ள வேண்டும். சர்க்கரை நன்றாகக் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அனைத்து, அரைகப் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கலந்துவிட வேண்டும். இல்லாவிடில் சர்க்கரைப்பாகு கெட்டியாகிவிடும்.

cake

பிறகு இந்த சர்க்கரை பாகை ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொண்டு, அதனுடன் சலித்து வைத்த மாவு மற்றும் ஊறவைத்த நட்ஸ்கள் மற்றும் அரை ஸ்பூன் சோடா உப்பு, அரை ஸ்பூன் பேக்கிங் சோடா இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் ஒரு கனமான பாத்திரத்தில் பட்டர் தடவி கொண்டு அதன் மீது லேசாக மைதா மாவை தூவிக் கொண்டு, கலந்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி, குக்கரில் வைத்து, குக்கரை மூடி, விசில் போட்டு மிதமான தீயில் 50 நிமிடம் வேக விட வேண்டும். பிறகு வெளியே எடுத்து ஆற வைத்து அதன் பின்னர் சுவைக்க வேண்டும்.

- Advertisement -