முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை, முகப்பரு தழும்புகளை இனி க்ரீம் போட்டு மறைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை! 1 சொட்டு இந்த எண்ணெயை தடவி தான் பாருங்களேன்.

face16

நிறைய பேர், சுவற்றிற்கு பட்டி பார்ப்பது போல, முகத்திற்கு கிரீம், ஃபவுண்டேஷன் போன்ற பொருட்களை போட்டுக் கொள்வார்கள். முகத்தில் இருக்கும் தழும்புகளை குழிகளை மறைப்பதற்கு பல கிரீம்களை வாங்கி பூசிக்கொண்டு, அதன் மேல் மேக்கப் என்று சொல்லி செயற்கையான பொருட்களை போட்டு அழகைக் கெடுத்துக் கொள்கிறார்கள். இயற்கையான முறையில் முகத்தில் இருக்கும் தழும்புகளை, கரும்புள்ளிகளை, முகப்பருக்களை மறைய வைக்க மிக மிக சுலபமான முறையில் ஒரு வழி உள்ளது. அது என்ன வழி என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

face17

பொதுவாகவே முகத்தில் முகப்பரு ஏற்படுவதன் மூலமாக அந்த இடத்தில் லேசான குழி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இல்லை என்றால் முகப்பரு காய்ந்து கீழே விழும்போது, அந்த இடத்தில் கரும்புள்ளிகள் வந்துவிடும். சில பேருக்கு கருப்பு புள்ளிகள் தானாகவே முகத்தில் உருவாகும். இப்படிப்பட்ட எல்லாவகையான பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இது.

இதற்கு தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய், பிரியாணிக்கு பயன்படுத்தும் பட்டை. இரண்டே பொருள் தான். அடுப்பில் ஒரு சிறிய கடாயை வைத்து கொள்ளுங்கள். 4 டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி, அதில் 1 பட்டையை நான்கிலிருந்து ஐந்து துண்டுகளாக, சிறு சிறு துண்டுகளாக உடைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாக சூடு படுத்த வேண்டும்.

pattai

அந்த பட்டையில் உள்ள எஸன்ஸ் முழுவதும் தேங்காய் எண்ணெயில் இறங்கி இருக்கும். அதை அப்படியே நன்றாக ஆறவைத்து, வடிகட்டி எண்ணெயை மட்டும் தனியாக ஒரு சின்ன பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இது எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. பிரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.

- Advertisement -

முகத்தில் முகப்பரு உள்ள இடத்தில், கரும்புள்ளிகள் உள்ள இடத்தில், கருந்திட்டுக்கள் உள்ள இடத்தில், தினமும் இரவு தூங்க செல்லும் போது ஒவ்வொரு சொட்டாக எடுத்து பிரச்சனை உள்ள இடத்தில் மட்டும் தடவிக் கொண்டாலும் சரி, அப்படி இல்லை என்றால் உங்களுடைய முகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் முகம் பொலிவிழந்து காணப்படுகிறது எனும் பட்சத்தில் இதை முகத்தில் ஆங்காங்கே ஒரு சிறு புள்ளிகள் வைத்து கண்ணுக்கே தெரியாமல் தடவி விட்டு விட வேண்டும் அவ்வளவுதான்.

pattai

இரவு முழுவதும் முகத்தை கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை எண்ணெய், உங்க முகத்தில் அப்படியே இருக்கட்டும். மறு நாள் காலை எழுந்து எப்போதும்போல குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள். சோப்பு போட்டு கழுவி கொண்டாலும் பரவாயில்லை. ஆனால் இதை யார் பயன்படுத்தக் கூடாது. முகப்பருவை கிள்ளி, புண்ணாகி இருந்தால் அந்த இடத்தில் இந்த எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் அந்த இடம் உங்களுக்கு எரியத் தொடங்கும்.

pattai-oil1

எரிச்சல் இருந்தால் பரவாயில்லை என்று நினைப்பவர்கள், இந்த எண்ணெயை தடவினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த முகப்பரு காயம் சீக்கிரமே காய்ந்து, அந்த இடத்தில் இருக்கும் தழும்பு சீக்கிரமே மறைந்துவிடும். நிச்சயமாக இதை பயன்படுத்திய சில நாட்களிலேயே உங்களுடைய முகத்தில் இருக்கும் பிரச்சனை நீங்கி, சருமம் பளபளப்பாக மாறுவதை பார்க்கமுடியும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.