மண் சட்டியை சுத்தம் செய்யும் முறை

man-satti
- Advertisement -

சமைப்பதற்கு விதவிதமாக எத்தனையோ பண்ட பாத்திரங்கள் வந்து இருந்தாலும், மண்சட்டிக்கு இருக்கும் மகத்துவம் குறையவில்லை. இன்னும் நிறைய பேர் இந்த மண் சட்டியை பயன்படுத்தி மீன் குழம்பு வைப்பது, புளி குழம்பு வைப்பது, போன்ற சமையலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆனால் அதை பக்குவமாக கையாளவில்லை என்றால், பக்குவமாக சுத்தம் செய்யவில்லை என்றால், அதிலிருந்து சில பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். உதாரணத்திற்கு மண்சட்டியில் சமைக்கும் போது, அந்த எண்ணையை எல்லாம் மண் சட்டி இழுத்து வைத்துக் கொள்ளும். அதாவது மண்சட்டிக்கு உறிஞ்சும் தன்மை அதிகம் உண்டு.

- Advertisement -

நிறைய முறை குழம்பு வைத்த மண் சட்டியை சரியாக சுத்தம் செய்யாமல், மீண்டும் மீண்டும் சமைக்கும்போது, நமக்கு பழைய எண்ணெயின் வாடை குழப்பில் வீச தொடங்கும். அந்த மண் சட்டியை எண்ணெய் போக எப்படி சுத்தம் செய்வது. மண்சட்டி உறிஞ்சி வைத்திருக்கும் எண்ணெயை வெளியே கக்க வைக்க என்ன செய்வது பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

மண் சட்டியை சுத்தம் செய்யும் முறை

சமைத்து முடித்த பிறகு எப்போதும் போல சுத்தம் செய்த மண் சட்டியை, ஈரம் போக காய வைத்து விடுங்கள். பிறகு அதை கேஸ் ஸ்டவ்வில் வைத்து ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் சூடு செய்யுங்கள். இப்படி சூடு செய்யும் போது மண்சட்டி உறிஞ்சி வைத்திருக்கும் எண்ணெயை அப்படியே வெளியே கக்கும். அப்போது மண்சட்டிக்கு உள்ளே கொஞ்சமாக அரிசி மாவை போட்டு நன்றாக அப்படியே வறுத்து எடுத்து விடுங்கள்.

- Advertisement -

அரிசி மாவு அந்த எண்ணெயையெல்லாம் உறிஞ்சிக்கொள்ளும். அரிசி மாவில் நிறமும் மாறும். இதை எடுத்து கீழே கொட்டி விடுங்கள். மீண்டும் அந்த மண் சட்டியை அடுப்பில் வைத்து சூடு செய்யுங்கள். உள்பக்கமும் வெளிப்பக்கமும் எண்ணெய் கசியும். திரும்பவும் ஒரு முறை இதே போல அரிசி மாவை தூவி வறுத்து எடுத்து அந்த மண் சட்டியை தண்ணீரில் கழுவி விட்டால் போதும் மண்சட்டி சுத்தமாகிவிடும். பிறகு மண் சட்டியை கட்டாயம் வெயிலில் காய வைத்து தான் எடுத்து வைக்க வேண்டும்.

மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றினால் அந்த மண் சட்டியில் மீண்டும் சமைக்கும்போது, பழைய எண்ணெயின் வாடை வீசாது என்பது குறிப்பிடத்தக்கது. வாரத்துக்கு ஒரு முறை இப்படி உங்கள் வீட்டில் அடிக்கடி பயன்படுத்தும் மண் சட்டியை சுத்தம் செய்வது நல்லது.

- Advertisement -

இதே போல இன்னொரு மெத்தடும் இருக்கு. நீங்க சட்டியில் குழம்பு வைத்த பிறகு அந்த குழம்பை இன்னொரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். வெறும் சட்டியை நல்ல தண்ணீரால் அலசி கீழே கொட்டி விடுங்கள். பிறகு அதில் முக்கால் பாகம் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் எலுமிச்சம்பழத் தோல் அல்லது எலுமிச்சை பழச்சாறு ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

எலுமிச்சம்பழம் இல்லை என்றால் வெறும் தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். தண்ணீரும் அந்த மண் சட்டியும் கை பொறுக்கு சூடு வரும் வரை ஆறவிட்டு விடுங்கள். பிறகு அந்த தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு வெறும் நாரை போட்டு மட்டும் தேய்த்து கழுவினால் போதும். சோப்பு போட்டு எப்போதுமே மண் பாத்திரங்களை தேய்த்து கழுவக்கூடாது.

இதையும் படிக்கலாமே: வெள்ளி தங்க வைர நகைகளை எளிமையாக சுத்தம் செய்யும் முறை

மண்சட்டியில் கண்ணுக்கு தெரியாத ஓட்டை இருக்கும். அதில் போய் சோப்பு துகள்கள் தங்கிவிடும். பிறகு சமைக்கும் போது அது நம்முடைய சாப்பாட்டோடு கலக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு தேவைப்பட்டால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -