வெள்ளி தங்க வைர நகைகளை எளிமையாக சுத்தம் செய்யும் முறை

jewellery lady
- Advertisement -

நகைகளின் மீது ஆர்வம் இல்லாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. சிலருக்கு தங்க நகைகள் பிடிக்கும். சிலருக்கு வெள்ளி நகைகள் இன்னும் சிலருக்கு வைர நகைகள் பிடிக்கும். எப்படியாயினும் ஏதாவது ஒரு நகை மீது நமக்கு ஈர்ப்பு இருக்கத் தான் செய்கிறது.

அப்படி ஆசைப்பட்டு நகைகளை வாங்கி வைத்து விட்டால் மட்டும் போதாது. அந்த நகைகளை முறையாக பராமரிக்க வேண்டும். அப்போது தான் அது எப்போதும் பார்க்க பளிச்சென்று புதிது போல இருக்கும். அதுவும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் நகைகள் என்றால் இன்னும் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

- Advertisement -

இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் உள்ள வழிமுறைகளின் படி நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் இந்த நகைகளை சுத்தப்படுத்தி பாருங்கள். புதிதாக வாங்கிய நகைகள் போல எப்போதுமே பளிச்சென்று இருக்கும். வாங்க அது என்ன முறை என்று தெரிந்து கொள்ளலாம்.

வைர நகைகளை எளிமையாக சுத்தப்படுத்தும் முறை

வைர நகைகளை பொருத்த வரையில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நாம் சுத்தம் செய்தே ஆக வேண்டும் இல்லை என்றால் நகைகளின் பொலிவு குறைந்து பார்க்க மங்கலாக இருக்கும். வைர நகைகளை சுத்தம் செய்ய ஒரு பாத்திரத்தில் முதலில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீரில் உங்களுடைய நகைகளை போட்டு 15 நிமிடம் வரை ஊற விடுங்கள்.அதன் பிறகு மென்மையான பிரஷ் கொண்டு செய்யுங்கள். வைர நகைகளை சுத்தப்படுத்த எந்தவித பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது. நகையை தேய்த்து பிறகு மீண்டும் வெதுவெதுப்பான தண்ணீரில் 10 நிமிடம் போட்டு விட்டு மெல்லிய காட்டன் துணியினால் துடைத்து விடுங்கள் போதும். நீங்கள் எப்போதாவது பயன்படுத்தும் நகை என்றால் மாதம் ஒரு முறை இப்படி சுத்தப்படுத்தி எடுத்து வையுங்கள். தினந்தோறும் பயன்படுத்தும் வகையாக இருந்தால் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இதுபோல செய்வது நல்லது.

வெள்ளி நகைகளை சுத்தம் செய்வது எப்படி?

வெள்ளி நகையை பொருத்த வரையில் சீக்கிரம் கருப்பாக மாறி விடும். அதற்காக வெள்ளி நகைகளை அடிக்கடியும் கழுவக் கூடாது. இதனால் அதனுடைய வெள்ளி தன்மை குறைந்து விடும். ஆகையால் மாதத்திற்கு ஒரு முறை வெள்ளியை சுத்தம் செய்தால் போதும்.

- Advertisement -

வெள்ளி நகைகளை சுத்தம் செய்ய ஒரு பிரஷ் வெள்ளை நிற பேஸ்ட் தொட்டு அந்த பேஸ்ட் இப்போது தண்ணீரில் நினைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதை நகைகளின் மீது லேசாக தேய்த்து விட வேண்டும். அதன் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு நகையை சுத்தம் செய்து காட்டன் துணி வைத்து துடைத்து விடுங்கள். வெள்ளி நகை புதிது போல மாறி விடும். வெள்ளி நகையை பொருத்த வரையில் அவரவர் உடல் சூட்டிற்கு ஏற்ப சீக்கிரம் அல்லது காலதாமதமாக கறுக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தங்க நகைகள் எளிமையாக சுத்தம் செய்வது எப்படி?

இந்த வைரம் வெள்ளி நகைகளை விட தங்க நகைகளை தான் பெரும்பாலும் தினசரி அணிந்து கொள்ளுவோம். இவற்றை தான் நாம் அதிகமாக பராமரிக்க வேண்டியதாகவும் இருக்கும். இந்த நகைகளை சுத்தம் செய்யவும் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு சொட்டு பேபி ஷாம்பு சேர்த்து நன்றாக கலக்கி அதில் நகைகளை ஊற வையுங்கள்.இதற்கும் பிரஷ் கொண்டு மெதுவாக தேய்க்க வேண்டும் அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்கும் போது நகைகளை வடிவமைப்பு மறைந்து விடும்.

அது மட்டும் இல்லாமல் நகையின் தரமும் குறைய வாய்ப்புண்டு ஆகவே மெதுவாக கவனமாக தேய்க்க வேண்டும். இப்படி பிரஷ் கொண்டு தேய்த்த பிறகு மீண்டும் வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு எடுத்து காட்டன் துணி வைத்து துடைத்து காய வைத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் அணிந்து கொள்வதோ எடுத்து வைப்பது உங்கள் விருப்பம். இந்த நகைகள் தொடர்ந்து அணிந்து கொள்ளும் வகையாக இருப்பின் மாதம் ஒரு முறை இது போல சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டை சுத்தம் செய்ய எளிமையான வீட்டுக் குறிப்பு

நீங்கள் பயன்படுத்தும் தங்கம் வெள்ளி வைரம் நகைகளை இது போல சுத்தம் செய்து பராமரித்து பாருங்கள் நிச்சயம் எப்பொழுதும் நகை புதிது போல பளிச்சென்று இருக்கும்.

- Advertisement -