பல நாள் கஷ்டப்பட்டு செய்யிற வேலைகளை எல்லாம் பத்தே நிமிஷத்துல செஞ்சு முடிக்க நீங்க வேண்டாம்னு தூக்கி போடுற இந்த ஓரு பொருள் இருந்தா போதும். வாங்க அப்படி என்ன சீக்ரட்டான டிப்ஸ்ன்னு பார்க்கலாம்.

cleaning
- Advertisement -

வீட்டு வேலைகளை பொறுத்த வரையில் நாள் முழுதும் செய்து கொண்டே இருந்தால் கூட முடியாது. அதிலும் சில வேலைகளை எடுத்தால் அந்த வேலையை மட்டுமே நாள் முழுவதும் செய்ய வேண்டியதாக இருக்கும். அதில் முக்கியமான வேலை வீட்டை சுத்தம் செய்வது. இந்த வேலையை மிக மிக எளியதாக சட்டென்று முடிக்கக் கூடிய வகையில் ஒரு சூப்பரான குறிப்பை தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

வீட்டை சுத்தம் செய்வதற்கு என்று தனியாக ஒட்டடை குச்சி இருக்கும். அதை வைத்து சுத்தம் செய்து விடுவோம். ஆனால் வீட்டின் ஜன்னல் கதவு போன்றவற்றின் மூலை முடுக்குகளில் எல்லாம் சுத்தம் செய்வது தான் இருப்பதிலேயே மிகப் பெரிய வேலை. இதை ஒவ்வொரு இடமாக பொறுமையாக பார்த்து செய்ய வேண்டும். இந்த வேலையை எளிமையாக எப்படி செய்வது என்று தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம் இது.

- Advertisement -

இதற்கு நாம் பயன்படுத்திய பிறகு தேவையில்லை என்று தூக்கிப் போடும் வீட்டை பெருக்கும் பழைய துடைப்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த துடைப்பத்தின் முனைகளை எல்லாம் கத்திரிக்கோல் வைத்து கத்தரித்து துடைப்பத்தை சமமாக ஆக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதை இரண்டு பாகங்களாக பிரித்து இரண்டு பக்கமும் இரண்டு ரப்பர் பேண்ட் அல்லது நூல் வைத்து கட்டி விடுங்கள்.

இப்போது இந்த துடைப்பம் கைப்பிடியுடன் ஒரு இடுக்கி போல இருக்கும். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கொஞ்சமாக லைசால் ஊற்றிக் கொண்டு அந்த லைசாலில் இந்த தொடப்பத்தின் முனையை தொட்டு எடுத்து ஜன்னல், கதவு, இடுக்குகளில் எல்லாம் துடைத்து எடுத்தால் ஒட்டடை தூசு எல்லாம் சுலபமாக நீங்குவதுடன், இப்படி இரண்டாகப் பிரித்து நாம் கட்டியிருப்பதால் இடுக்குகளில் கூட சுத்தம் செய்ய சுலபமாக இருக்கும். அத்துடன் லைசாலும் சேர்த்து இருப்பதால் அந்த இடங்களில் மறுபடியும் சீக்கிரத்தில் ஒட்டடை சேராது. அதே போல் பூச்சிகளும் அண்டாது.

- Advertisement -

இந்த துடைப்பத்தை வைத்து பாத்ரூமையும் சுலபமாக சுத்தம் செய்து விடலாம். முதலில் அதிகமான கறை உள்ள மூலை முடுக்குகளில் எல்லாம் கொஞ்சமாக ஹார்பிக்கை ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போதும் அதே போல பழைய துடைப்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டாகப் பிரித்து எல்லாம் கட்ட வேண்டாம். இந்த துடைப்பத்தை நேரடியாகவே பாத்ரூம் டைல்ஸ், சுவர் இடுக்குகளில் எல்லாம் நின்ற படியே தேய்த்து கொடுங்கள்.

இதற்கு பிரஷ்சை பயன்படுத்தாமல் ஏன் துடைப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு தோன்றலாம். துடைப்பம் நல்ல நீளமாக இருப்பதால் அதிகமாக குனிந்து சுத்தம் செய்ய வேண்டிய சிரமம் இருக்காது. அது மட்டும் இன்றி மூலை முடுக்குகளில் எல்லாம் பிரஸ் அதிக அளவு வளைந்து கொடுத்து தேய்க்காது. அந்த இடத்தில் எல்லாம் தேய்க்க இது உதவியாக இருக்கும். இந்த டிப்ஸ் உடல் நலம் சரியில்லாதவர்கள் வயதானவர்களுக்கு எல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த வெயில் காலத்தில் கூட, காலையில் வடித்த சாதம் ராத்திரி வரைக்கும் கெட்டுப் போகாமல் இருக்கும். சாதம் வடிக்கும் போது இந்த 1 பொருளை சேர்த்தால்.

ஒரு நாள் முழுவதும் சிரமப்பட்டு செய்யும் வேலைகளை ரொம்பவே சிரமம் இல்லாமல் நாம் இது வரை தேவையில்லை என்று நினைத்து தூக்கி போடும் ஒரு துடைப்பத்தை வைத்து செய்து விடலாம் என்ற இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். இதை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -