இந்த வெயில் காலத்தில் கூட, காலையில் வடித்த சாதம் ராத்திரி வரைக்கும் கெட்டுப் போகாமல் இருக்கும். சாதம் வடிக்கும் போது இந்த 1 பொருளை சேர்த்தால்.

rice
- Advertisement -

இப்போது நல்ல வெயில் காலம் வந்துவிட்டது. இந்த வெயில் காலத்தில் காலையில் வடித்த சாதம், மதியம் 2 மணிக்குள்ளாகவே தண்ணீர் விட்டு, கொச கொசப்பாக மாறி விடுகின்றது. குறிப்பாக அலுவலகம் செல்பவர்களுக்கு, சாதத்தை கட்டிக் கொடுத்தால் மதியம் சாப்பிடுவதற்குள், அந்த சாதம் கெட்டுப் போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. காலையில் வடித்த சாதம், இரவு வரை அப்படியே பிரஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய பயனுள்ள ஒரு சின்ன வீட்டு குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்போடு சேர்த்து ஈரமான சர்க்கரையை, உதிரி உதிரியாக காய்ந்த சர்க்கரையாக எப்படி மாற்றுவது என்பதை பற்றிய குறிப்பும் இந்த பதிவின் இறுதியில் உங்களுக்காக.

வெயில் காலத்தில் சாதம் கெட்டுப் போகாமல் இருக்க:
எப்போதும் போல சாதத்தை ஊற வைத்து கழுவி, தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளுங்கள். குண்டானில் வடிக்கக்கூடிய சாதத்திற்கும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம். குக்கரில் வைக்கக்கூடிய சாதத்திற்கும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம். குண்டானில் சாதம் வைத்தால், சாதம் வெந்து வந்த பிறகு, வடிப்பதற்கு 1 நிமிடம் இருக்கும் போது, 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை அந்த சாதத்தில் ஊற்றி நன்றாக கலந்து ஒரு கொதி வந்ததும் உடனடியாக சாதத்தை வடித்து விட வேண்டும். 1 டம்ளர் அரிசி வைத்தீர்கள் என்றால், 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் போதும்.

- Advertisement -

நீங்கள் சாதம் வைக்கின்ற அளவுக்கு ஏற்றது போல தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காய் எண்ணெயின் வாசம் சாதத்தில் அடிக்குமோ என்ற கவலை வேண்டாம். அந்த வாசம் எல்லாம் எதுவும் வீசாது. எப்போதும் போல தான் சாதம் இருக்கும். குக்கரில் சாதம் வைப்பதாக இருந்தால், குக்கரில் அரிசி போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி குக்கரை மூடி விசில் வைக்க வேண்டும்.

உங்களுக்கு தேங்காய் எண்ணெய் பிடிக்காது என்றால் 1 ஸ்பூன் நல்லெண்ணையை சேர்த்து கூட சாதத்தை வடித்து வைக்கலாம். இப்படி செய்தால் வெயில் காலத்தில் சாதம் சீக்கிரத்தில் தண்ணீர் விடாது. கொச கொச என சாதம் சீக்கிரத்தில் கெட்டுப் போகாது என்பது குறிப்பிடத்தக்கது. சாதம் வடித்து பிறகு, சாதம் குக்கரில் வெந்த பிறகு என்ன செய்ய வேண்டும்.

- Advertisement -

ஹாட் பேக் எடுத்துக்கோங்க. அதில் முதலில் சுத்தமான வெள்ளை நிற காய்ந்த துணியை போட்டுவிட்டு, அந்த துணியில் வடித்த சாதத்தை கொட்டி மூடி விடுங்கள். 1/2 மணி நேரம் கழித்து இந்த சாதத்தை எடுத்து லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுத்தால் சாதம் வெயில் காலத்தில் சீக்கிரம் கெட்டுப் போகாது. உங்களுடைய வீட்டில் ஹாட் பேக்கில் வெள்ளைத் துணியில் சாதம் இருக்கும் போது இரவு வரை அந்த சாதம் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். சாதத்தில் இருக்கும் சூடும் மதியம் வரை தாங்கும். எளிமையான குறிப்பு தான். ஆனால் தினம் தினம் எல்லோர் வீட்டிலும் தேவைப்படக்கூடிய குறிப்பு இது. உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: ஒரு கப் அவல் இருந்தா இட்லி தோசைக்கு மாவு இல்லாத நேரத்தில் சூப்பரான இந்த ஊத்தப்பம் ரெடி பண்ணிடலாம். ஊத்தப்பம்ன்னா இப்படித் தான் இருக்கணும்னு சொல்ற அளவுக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

சர்க்கரையில் இருக்கும் தண்ணீர் நீங்க:
சில சமயம் ரேஷன் கடையில் இருந்து வாங்கிய சர்க்கரை ஈரத்தன்மையோடு இருக்கும். வாங்கிய சர்க்கரையை அகலமான வெள்ளை நிறத் துணியில் கொட்டி கொஞ்ச நேரம் ஆற வைத்து விடுங்கள். சர்க்கரையை டப்பாவில் கொட்டுவதற்கு முன்பு அடியில் நான்கு ஐந்து, பல் குத்தும் குச்சியை போட்டு விடுங்கள். சர்க்கரையை கொட்டி விட்டு அதன் நடுவே மரத்தினால் செய்யப்பட்ட பல் குத்தும் குச்சைப் போட்டு டப்பாவை மூடி வைத்தால், அதில் அதிகமாக ஈரத்தன்மை இருக்காது. சர்க்கரை உதிரி உதிரியாக இருக்கும்.

- Advertisement -