குக்கர்ல கருங்கல்லை போட்டால் இப்படி எல்லாம் கூட நடக்குமா? இது ஒரு புது ஐடியாவா இருக்கே. தெரிஞ்சு வச்சுக்கிட்டா என்னைக்காவது ஒரு நாள் கட்டாயம் யூஸ் ஆகும்.

cooker
- Advertisement -

கசங்கி போன டி-ஷர்ட், சுடிதார், சட்டை, குர்தா இப்படி எதை வேண்டுமென்றாலும் அயன் பாக்ஸ் இல்லாமல் சுருக்கங்களை நீக்க இரண்டு சூப்பரான ஐடியாவை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தினமும் இந்த குறிப்பு தேவைப்படாது என்றாலும், என்றாவது ஒரு நாள் வீட்டில் கரண்ட் இல்லை அயன் பாக்ஸ் ரிப்பேர், கடைக்கு துணியை எடுத்துச் சென்று அயன் செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இந்த குறிப்பு கட்டாயம் நமக்கு உதவும். சும்மா தெரிஞ்சு தான் வச்சுப்போமே.

அயன் பாக்ஸ் இல்லாமல் துணியில் இருக்கும் சுருக்கத்தை நீக்க சூப்பரான ஐடியா:
முதலில் இதற்கு நாம் ஒரு ஸ்ப்ரே பாட்டிலை தயார் செய்ய வேண்டும். ஸ்ப்ரே பாட்டிலில் பாதி அளவு அல்லது நிரம்ப தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் 1 ஸ்பூன் கம்ஃபோர்ட் ஊற்றிக் கொள்ளவும். உங்கள் விருப்பம் தான். வேறு ஏதாவது ஃபேபரிக் கண்டிஷனர், வேற பிராண்டில் கிடைத்தாலும் நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது தண்ணீரையும் அந்த ஃபேப்ரிக் கண்டிஷனரையும் நன்றாக குலுக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

கசங்கி போன துணியை பாயில் மீது நன்றாக விரித்து விடுங்கள். கசங்கி போன துணியில் இந்த ஸ்பிரேவை நன்றாக ஸ்பிரே செய்து விட வேண்டும். தண்ணீர் கசக்கிய துணியில் பட்டு, லேசாக ஈரமாகத்தான் செய்யும். பிறகு உங்கள் கையை வைத்து லேசாக ஈரமான அந்த துணியை கையாலேயே சுருக்கத்தை நீக்கி, அப்படியே சுருக்கம் இல்லாமல் தடவி விடுங்கள். இரண்டு நிமிடம் இதுபோல சுருக்கம் இல்லாமல் அந்த துணியை உங்கள் உள்ளங்கையால் தடவி தேய்த்து விட்டு, அப்படியே அந்த துணியை காய வைத்து விடுங்கள். ஈரம் பட்ட இடமெல்லாம் 5 நிமிடத்தில் காய்ந்ததும், நம்பவே மாட்டீங்க. சுருக்கமான துணி சுருக்கம் இல்லாமல் மாறி இருக்கும். நீங்க வேணும்னா இந்த குறிப்பு டெஸ்ட் பண்ணி பாருங்க.

இப்படி ஸ்ப்ரே செய்த அந்த துணி காய 5 லிருந்து 7 நிமிடங்கள் எடுக்கும் அல்லவா. அதுவரை கூட உங்களால் வெயிட் பண்ண முடியாது. இன்னும் சீக்கிரம் அந்த சுருக்கத்தை நீக்க வேண்டும் என்றால் ஸ்பிரே செய்த அந்த சட்டையை ஒரு சூடான பாத்திரத்தை வைத்து அயன் செய்யப் போகின்றோம். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க தண்ணீரை சூடு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு குக்கரை எடுத்துக்கோங்க. அதில் நல்ல வெயிட் கொடுப்பதற்காக பத்து சின்ன கருங்கல்லை போடுங்கள். அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் பூண்டு நசுக்கும் கல் அல்லது சின்ன உரல் எது இருந்தாலும் அந்த குக்கருக்குள்ளே வைத்து, அதன் உள்ளே சுட சுட இருக்கும் தண்ணீரை ஊற்றி குக்கரை ரப்பர் போட்டு மூடி, மேலே விசிலையும் போட்டு விடுங்கள். (அப்போது குக்கருக்கு உள்ளே இருக்கும் சுடுதண்ணீர் சீக்கிரத்தில் ஆறாது).

இந்த குக்கரை அப்படியே ஜாக்கிரதையாக எடுத்து சுருக்கமான துணியின் மேல் வைத்து அயன் செய்ய வேண்டும். இப்படி ஃபேப்ரிக் கண்டிஷனரை ஸ்பிரே செய்து அயன் செய்யும்போது அந்த சுருக்கங்கள் எளிதில் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: பாட்டி காலத்து பழைய கரி பிடிச்ச பாத்திரத்தை கூட புதுசு போல பளப்பளன்னு மாத்த இதோ இந்த சூப்பர் ஐடியாவை ட்ரை பண்ணுங்க.

இந்த ஸ்பிரேவை அடிக்காமலும் நீங்கள் அயன் செய்யலாம். அப்போது சுருக்கம் நீங்க இன்னும் கொஞ்சம் கூடுதல் நேரம் எடுக்கும். நீங்கள் சுடச்சுட தயார் செய்து வைத்திருக்கும் இந்த குக்கரை வைத்து இரண்டு சட்டை வரை சூப்பராக அயன் பண்ணலாம். வேணும்னா ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு பிடித்தவர்கள் தேவை எனும் போது முயற்சி செய்து பலன் பெறலாம்.

- Advertisement -