உங்கள் வீட்டு சமையல் அறை சிங்கிற்கு அடியில், இந்த வாசனை திரவியம் இருந்தால் கரப்பான்பூச்சி வீட்டிற்குள் வருவதற்கே பயப்படும். ஒருமுறை இதை ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

cockroach
- Advertisement -

கரப்பான் பூச்சி இல்லாத சமையல் அறையே இல்லை என்று கூட சொல்லலாம். எந்த அளவிற்கு வசதிகள் பெருகி கொண்டே செல்கின்றதோ, அந்த அளவிற்கு கஷ்டங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சமையலறைக்குள் சிங்க் வந்தவுடன், வீட்டிற்குள் கரப்பான் பூச்சிகளும் சேர்ந்து வந்து விட்டது. என்ன செய்வது. முன்னேற்றங்கள் அடைய அடைய அதன் மூலம் வரும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். சரி, இந்த கரப்பான் பூச்சியை ஒழிப்பதற்கு ஒரே வழி ஹிட் அடிப்பது. இது செயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஒரு கெமிக்கல் கலந்த சாதம். சில பேர் இதைப் பயன்படுத்துவார்கள். சில பேருக்கு இதனுடைய வாசனை அலர்ஜியை கொடுக்கும், என்பதால் இதை பயன்படுத்த மாட்டார்கள். இதைப் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் கரப்பான் பூச்சிகளை எப்படி விரட்டுவது. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

computer-sambirani1

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள். தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், கம்ப்யூட்டர் சாம்பிராணி வத்தி 2, ஒரு சிறிய டம்ளர் தண்ணீர், தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு 2 ஸ்பூன். எந்த சாம்பிராணி வத்தி பிராண்ட் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். எந்த ஷாம்புவை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு சிறிய பிளாஸ்டிக் பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் அந்த ஷாம்புவை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நன்றாகக் கரைத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் கம்ப்யூட்டர் சாம்பிராணி வத்தியை நன்றாக தூள் செய்து போட்டு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு இன்னும் கொஞ்சம் தண்ணீர் விட்டு, இதை இந்த கலவையை நன்றாக கலந்து கொண்டால், கரப்பான் பூச்சியை விரட்டும் இயற்கையான முறையில் வாசனை நிறைந்த திரவம் தயார்.

black-water

சுலபமான முறை. தண்ணீரில், ஷாம்பூ, கம்ப்யூட்டர் சாம்பிராணி, தேங்காய்எண்ணெய் இது முழுவதும் கரையும் படி கலக்க வேண்டும். அவ்வளவு தான். இந்த கலவையை ஒரு சிறிய பிளாஸ்டிக் பவுலிலோ அல்லது சிறிய டம்ளரிலோ கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, உங்களுடைய வீட்டில் எங்கெல்லாம் கரப்பான் பூச்சிகளின் தொல்லை இருக்கின்றதோ, அங்கெல்லாம் ஒவ்வொன்றை வைத்து விட்டாலே போதும். வீட்டிற்குள் கரப்பான் பூச்சி வருவதை தவிர்த்து விடலாம்.

- Advertisement -

15 நாட்களுக்கு ஒரு முறை இதனுடைய வாசம் குறைந்துவிடும். அதன் பின்பு மீண்டும் இதேபோல புதிதாக தயார் செய்து ஆங்காங்கே வைத்துக்கொள்ள வேண்டும். இதை செய்தால் முற்றிலுமாக கரப்பாம்பூச்சி ஒழிக்கப்படும் என்று சொல்லவில்லை. இந்த வாதத்திற்கு கரப்பாம்பூச்சி உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்கும். கொஞ்சமாக இந்த கலவையை இரவு தூங்கச் செல்லும் போது, சிங்கிற்கு அடியில், வாஷ்பேஷனுக்கு அடியில், உள்பக்கத்தில் தண்ணீர் செல்லக்கூடிய துவாரங்களை சுற்றியும், கரப்பான்பூச்சி வரக்கூடிய இடங்களில் தெளித்து விட்டு சென்றாலும் இரவு நேரத்தில் நம்முடைய வீட்டிற்குள் கரப்பான் பூச்சிகள் வராமல் இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

kitchen-cockroach

உங்கள் வீட்டில் இந்த டிப்ஸ் நல்ல பலன் கொடுத்தால் மட்டும், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு நீங்கள் இதை பகிர்ந்து கொள்ளலாம். எல்லோருக்கும் உபயோகமான குறிப்பு இது. வாரத்தில் ஒருநாள் சிங்க் ஓட்டைக்குள், சூடான தண்ணீரில் ஆப்ப சோடா மாவு கலந்து ஊற்றி விட்டாலே போதும் கரப்பான் பூச்சிகளின் தொல்லை படிப்படியாக குறையும். சிங்க் அடியில் குப்பை கூடையை வைக்கும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய சமையலறை சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

- Advertisement -