வீட்டில் இருக்கவே கூடாத ஒரு பூச்சி? இதை ஒழித்துக் கட்ட 1 ரூபாய்க்கு ஒரு பாக்கெட் ஷாம்பூ இருந்தா போதுமே!

cockroach--shampoo
- Advertisement -

வீட்டில் இந்த ஒரு பூச்சி இருக்கவே கூடாது தெரியுமா? அதுதான் கரப்பான் பூச்சி! ஆமாங்க, கரப்பான் பூச்சி இருக்கும் இடங்களில் எல்லாம் தொற்று கிருமிகள் பரவும் அபாயமும் இருக்கும். வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளும் வரக்கூடும். ஈக்கள், கரப்பான் பூச்சிகள், எறும்புகள் தொந்தரவு வீட்டில் அதிகமாக இருந்தால், அதை ஒழித்துக் கட்டி திரும்பவும் வராமல் இருக்க என்ன செய்யணும்? என்பதைத் தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கரப்பான் பூச்சி இரவில் மட்டுமே அதிகம் நடமாடக்கூடியதாக வீட்டில் இருக்கும். நாம் அனைவரும் நன்கு உறங்கிய பின்பு சத்தம் இல்லாமல் பாத்திரம் தேய்க்கும் சிங் ஓட்டை அல்லது பாத்ரூம்களிலிருந்து வரக்கூடிய இந்த கரப்பான் சமைக்கும் பாத்திரங்களின் மீதும் ஏறி செல்கிறது. அதை கழுவாமல் அப்படியே பயன்படுத்தினால் வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் வரக்கூடும். அதனால் தான் எந்த ஒரு பாத்திரத்தையும் நீங்கள் கழுவி வைத்தால் கூட, பயன்படுத்தும் முன்பு ஒரு முறை நன்கு கழுவி பிறகு பயன்படுத்துங்கள்.

- Advertisement -

கரப்பானை ஒழிக்க லிக்விட்:
ஷாம்பூ – ஒன்று, வினிகர் – இரண்டு ஸ்பூன், தூள் உப்பு – அரை ஸ்பூன், தண்ணீர் 100ml, சர்க்கரை – ஒரு ஸ்பூன்.

இந்த கரப்பான் பூச்சிகளை அடியோடு ஒழிக்க கூடிய ஒரு லிக்விட் நம் வீட்டிலேயே எளிதாக தயாரித்துக் கொள்ளலாம். வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து நொடியில் தயாரிக்க கூடிய இந்த ஒரு லிக்விட் ரொம்பவே எஃபக்ட்டிவ் ஆக செயல்படக்கூடியதாக இருக்கிறது. லைட்டாக இதை ஸ்பிரே செய்து விட்டால் போதும், ஒரு கரப்பான் பூச்சி கூட இனி உங்க வீட்டு பக்கம் எட்டி கூட பார்க்காது.

- Advertisement -

மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது சமையல் அறை முழுவதும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். குறிப்பாக செல்ஃப் மற்றும் நீங்கள் பாத்திரம் வைக்கும் இடங்களில் பேப்பரை மாற்றுங்கள். பேப்பரை போடும் முன்பு சுவற்றின் மீதும், தரையின் மீதும் எறும்பு சாக்பீஸை போட்டு அதன் மீது பேப்பரை போடுங்கள். இதனால் எறும்புகள் நெருங்காது.

ஒரு முழு ஷாம்பூ ஒன்றை எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ரெண்டு ஸ்பூன் அளவிற்கு வினிகர் சேருங்கள். அரை ஸ்பூன் தூள் உப்பு போட்டு 100ml அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது எல்லாவற்றையும் நன்கு கரைத்த பின்பு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வாஷிங் மெஷினில் இப்படி துணி துவைத்தால் ஒரு துணியில் கூட சோப்புக் கறை படியவே படியாது. அதோட இதையும் தெரிஞ்சிக்கிட்டா சோப்புக் கறை மட்டுமில்ல வேற எந்த கறையுமே துணியில் இருக்காது.

இதை கரப்பான் பூச்சி நடமாடக்கூடிய இடங்களில் எல்லாம் நன்கு ஸ்ப்ரே செய்து விடுங்கள். இதனுடைய வாசத்திற்கு மூலை முடுக்குகளில், இண்டு இடுக்குகளில் ஒளிந்து கொண்டிருக்கும் எந்த ஒரு கரப்பான் பூச்சிகளும் அல்லது மற்ற பூச்சிகளும் வெளியில் வந்து செத்து மடிந்து விடும். இதன் பிறகு இந்த நாற்றத்திற்கு வேறு எந்த பூச்சிகளும் உங்கள் வீட்டிற்கு வரவே வராது. மறுநாள் காலையில் ஸ்ப்ரே செய்த இடத்தை துடைத்து விடுங்கள். ஷாம்பூவுடன் வினிகர் சேரும் பொழுது ஒருவிதமான அசௌகரியமான சூழ்நிலையை பூச்சிகளுக்கு உருவாக்கும், இதனால் பூச்சிகள் அதனை சாப்பிட்டு விட்டு மடிந்து விடும். அப்புறம் என்ன? இனி ஒரு பிரச்சனையும் இல்லை! கரப்பான் பூச்சியை தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

- Advertisement -