வாஷிங் மெஷினில் இப்படி துணி துவைத்தால் ஒரு துணியில் கூட சோப்புக் கறை படியவே படியாது. அதோட இதையும் தெரிஞ்சிக்கிட்டா சோப்புக் கறை மட்டுமில்ல வேற எந்த கறையுமே துணியில் இருக்காது.

- Advertisement -

இப்போதெல்லாம் வாஷிங் மெஷின் இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இன்றியமையாத வீட்டு சாதன பொருளாக வாஷிங் மெஷின் மாறி விட்டது. இந்த வாஷிங் மெஷினில் துணி துவைக்கும் போது ஆங்காங்கே சோப்பு கறை திட்டு திட்டாக தெரியும். அப்படி ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முன்பெல்லாம் எவ்வளவு துணிகளாக இருந்தாலும் கைகளில் தான் துவைப்போம். அதற்கு ஒரு பெரிய பாத்திரத்தில் சோப்புத் தூளை போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கைகளில் கரைத்து அதன் பிறகு ஊற வைத்து துவைப்போம். இந்த முறையில் சோப்புத் தூள் கரைந்து விடும். அப்படியே கரையவில்லை எனினும் நாம் எடுத்து துவைத்து அலசும் போது நீங்கி விடும்.

- Advertisement -

ஆனால் வாஷிங்மெஷினில் அப்படியெல்லாம் செய்ய முடியாது. வாஷிங் மெஷின் சோப்பு பவுடர் போடுவதற்கு என்று தனியாக ஒரு பாகம் இருக்கும் அதில் தான் போட வேண்டும். இப்படி துவைக்கும் போது சோப்பு பவுடர் துணிகளில் ஆங்காங்கே பட்டு துவைத்து காய வைத்த பிறகு திட்டித் திட்டாக அசிங்கமாக தெரியும்.

சோப்பு பவுடர் பயன்படுத்துவதற்கு பதிலாக லிக்விட் பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உண்மையில் வாஷிங்மெஷினை பொறுத்த வரையில் சோப்பு பவுடரை விட லிக்விட் பயன்படுத்தினால் தான் மெஷினும் நன்றாக இருக்கும். ஆனால் வாஷிங் பவுடர் குறைந்த விலைகளில் கூட கிடைக்கும். லிக்விட் விலை சற்று கூடுதல். இதை எல்லோரும் வாங்க முடியுமா என்பது கொஞ்சம் சந்தேகம் தான். துணி துவைக்கும் போது இந்த ஒரு டிப்ஸை மட்டும் தெரிஞ்சுக்கிட்டு துவைத்தால் கண்டிப்பா துணியில் சோப்பு கரை படியாம துவைக்கலாம் வாங்க அது எப்படி என்று பார்க்கலாம்.

- Advertisement -

எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் பயன்படுத்தும் சாக்ஸ் நிச்சயமாக இருக்கும். நீங்கள் வாஷிங் மெஷின் துணிகளை எல்லாம் சேர்த்த பிறகு இந்த சாக்ஸில் நீங்கள் எடுத்திருக்கும் துணிகளின் அளவிற்கு ஏற்றவாறு சோப்புத் தூளை போட்டு முடிச்சு போட்டு துணிகளுடன் சேர்த்து அந்த சாக்ஸையும் அதில் போட்டு விடுங்கள். சோப்பு பவுடர் கொட்டுவதற்கு என்று இருக்கும் பாகத்தில் இதைப் போட வேண்டாம்.

துணிகளில் இதை போட்ட பிறகு நீங்கள் எப்போதும் போல துணி துவைத்து எடுத்து விட்டால், சாக்ஸில் இருக்கும் சோப்பு பவுடர் மொத்தமும் கரைந்து துணிகளில் கறை படியாமல் துவைத்து விடும். சாக்ஸில் கூட சோப்பு கறை இல்லாமல் சுத்தமாகும் என்றால் பாருங்களேன்.

- Advertisement -

இப்படி துணி பவுடர் போடும் போது அத்துடன் ஒரு டீஸ்பூன் கான்பிளவர் மாவு அல்லது படிகாரத் தூள் இரண்டில் உங்களிடம் எது இருந்தாலும் அதையும் சேர்த்து துவைக்கும் போது துணிகளில் வேறு எந்த கறைகள் இருந்ததாலும் கூட சுலபமாக நீங்கி விடும். இந்த கான்பிளவர் அல்லது படிகாரத் தூளை சோப்பு பவுடரை சாக்ஸில் போடும் போது இதையும் சேர்த்தே போட்டு துவைக்கலாம். ஒரு வேளை நீங்கள் லிக்விட் பயன்படுத்துவதாக இருந்தால் பவுடர் போடும் பாகத்தில் லிக்விட் ஊற்றும்போது இதையும் சேர்த்து துவைக்கலாம் துணிகளில் சின்ன கறை கூட இல்லாமல் பளிச்சென்று துவைத்து கொடுத்து விடும்.

அதுமட்டுமின்றி வாஷிங் மிஷினில் நாம் எப்போது துணி துவைப்பதாக இருந்தாலும் மெஷினின் கொள்ளவிற்கு கொஞ்சம் குறைவாகத் தான் நாம் துணிகளை போட வேண்டும். இப்படி போடும் போது மட்டும் தான் துணிகள் நன்றாக துவைத்து கறைகள் முழுவதுமாக நீங்கும். அது மட்டுமின்றி வாஷிங் மிஷினும் நீண்ட நாள் பழுதாகாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: அட பல்பொடியை கூட வீட்டிலேயே இவ்வளவு சுலபமாக செய்யலாமா? அதுவும் வெறும் 4 பொருட்களை வைத்து. இந்த குறிப்பு தெரியாமல் இத்தனை நாட்களாக பல்லை வீணடித்து விட்டோமே.

இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் உள்ள தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம் இனி நீங்கள் மெஷினில் துணி துவைக்கும் பொழுது இதை பயன்படுத்தி துவைத்து பாருங்கள் துணிகளில் எந்த கறையும் இல்லாமல் பளிச்சென்று இருக்கும்.

- Advertisement -