எல்லா எண்ணெய்கும் குட் பை சொல்லுங்க! தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து தலைக்கு தடவினால் தலை முடி கருகருன்னு காடு போல அடர்த்தியாக வளரும் தெரியுமா?

coconut-oil-hair-comb
- Advertisement -

தலைமுடி நன்கு செழித்து வளர்வதற்கு முதலில் நமக்கு தேவைப்படுவது தேங்காய் எண்ணெய் தான். கண்ட கண்ட எண்ணெய்களை தடவி இருக்கின்ற முடியையும் இழந்து போவதற்கு பதிலாக தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு பொருளை சேர்த்து தடவி வந்தால் முடி காடு மாதிரி தாறுமாறாக வளரும். அப்படி நாம் தேங்காய் எண்ணெயுடன் சேர்க்க இருக்கும் பொருள் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தலைமுடி காடு மாதிரி அடர்த்தியாக வளர்வதற்கு முதலில் சுத்தமான தேங்காய் எண்ணெயை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்துவது ரொம்பவே நல்லது. தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை சேர்ப்பதால் தலைமுடி உதிர்வது தடுக்கப்படும் மேலும் உள்ளிருந்தே முடி வளர்ச்சியை தூண்டும் அற்புதமான சக்தியும் இதற்கு உண்டு.

- Advertisement -

தேவையான அளவிற்கு சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை எடுத்து ஒரு வாணலியில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு கற்றாழை மடலை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதன் மேல் தோலை சீவி உள்ளே இருக்கும் ஜெல் பகுதியை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஜெல் போன்ற இந்த பகுதியை ஆறு முதல் ஏழு முறை வரை நன்கு தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஸ்கூல் போல பேஸ்ட்டாக கிடைக்கும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து வாணலியில் இருக்கக் கூடிய தேங்காய் எண்ணெயை சுட வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எண்ணெய் சூடானதும் அரைத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லையும் சேர்த்து கொதிக்க விடுங்கள். படபடவென எண்ணெய் பொரிந்து கொதிக்க ஆரம்பித்து நிறம் மாற துவங்கும். எண்ணெயின் நிறம் நன்கு மாறியதும் அடுப்பை அணைத்து சுத்தமாக ஆற விட்டு விடுங்கள். சூடு கொஞ்சம் கூட இல்லாமல் ஜில்லென்று குளிர்ந்து ஆறியதும் ஒரு பாட்டிலில் வடிகட்டி அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வடிகட்டி வைத்துள்ள இந்த ஒரு தேங்காய் எண்ணெயை நீங்கள் தினமும் தலைக்கு 10 நிமிடம் மசாஜ் செய்து ஊற விட்டு விடுங்கள். வாரம் இரண்டு முறை தலைக்கு குளியுங்கள். தினமும் இந்த எண்ணெயை 10 நிமிடம் மசாஜ் செய்து தலையை சிடுக்குகள் இல்லாமல் வாரி பின்னி கொள்ள வேண்டும். தலைமுடிக்கு ரத்த ஓட்டம் இல்லாததாலும் தலைமுடி உதிரத் துவங்கும் எனவே தலை முடிக்கு தினமும் இது போல மசாஜ் செய்து சீப்பை ஸ்கால்ப் பகுதியில் படும்படி நன்கு அழுத்தம் கொடுத்து வாரி விடுங்கள்.

மேலிருந்து கீழாக வருவதை விட கீழிருந்து மேலாக ஒரு முறை வாரி விடுங்கள். இது போல தொடர்ந்து செய்யும் பொழுது ரத்த ஓட்டம் நன்கு கிடைத்து இந்த எண்ணெயின் சத்துக்களும் உள்ளுக்கு சென்று நன்கு தலை முடியை வலுவாக, ஆரோக்கியமாக வளர தூண்டிவிடும். கரு கருன்னு அடர்த்தியாக, ஷைனிங்காக உங்க முடி இனி வளரும்.

- Advertisement -