உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளில் நிறைய பூக்கள் பூக்க, நிறைய காய்கறிகள் காய்க்க, தொட்டியில் இருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து விட்டு, இந்த பொருளை சேர்த்து பாருங்கள்!

plant-gardening

பொதுவாகவே இப்போது நிறைய பேரது வீட்டில் மாடி தோட்டம் அமைத்தோ அல்லது தொட்டிகளிலோ அவரவர் வீட்டிலேயே காய்கறிகளையும், பூக்களையும் வளர்த்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.  சிலபேருக்கு அந்த செடிகள் இயற்கையாகவே செழிப்பாக வளரும். ஆனால், அதிகப்படியான பூக்களை கொடுக்காது. காய்களை கொடுக்காது. சிலரது வீட்டில் செடிகள் வளர்வதே மிகவும் கஷ்டமாக இருக்கும். உங்கள் வீட்டுத் தோட்டத்திலும் இப்படிப்பட்ட பிரச்சனை இருக்கிறதா? உங்களுக்கான பதிவு தான் இது. உங்கள் வீட்டில் வைத்திருக்கும் மண்ணுடன், எந்தப் பொருளை கலந்து வைத்தால் செடி செழிப்பாக வளரும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

coconut-fiber

உங்களுடைய வீடுகளில் தேங்காயிலிருந்து உரிக்கும் நார் மட்டுமே போதும். மட்டை தேங்காய் என்று சொல்லப்படும், தேங்காயிலிருந்து உரித்து எடுக்கப்படும் நார்களை, கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிலேயே சேமித்து வைத்துக் கொண்டாலும் சரி. அல்லது கடைகளிலிருந்து வாங்கினாலும் சரி. அதாவது தென்னை மரம் வைத்திருப்பவர்கள் வீடுகளில் இந்த நார் சுலபமாக கிடைக்கும்.

அந்த தேங்காய் நார்களை உதிர்க்கும் போது தேங்காய் நார் தூள் விழும். தேங்காய் நாரை அப்படியே நாராக பயன்படுத்தி விடக்கூடாது. அந்த நாட்களிலிருந்து உதிரும் போது, கீழே தவிடு போல் தூள் விழும். அந்த தூள் தான் நமக்கு தேவை. ஆனால் அது கொஞ்சமாகத்தான் கிடைக்கும் அல்லவா? ஆகவே, துள்கள் நீக்கப்பட்ட, மீதமுள்ள தேங்காய் நார்களை கத்தரிக்கோலால் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, மிக்சியில் போட்டு அரைத்து தூளாக்கி பயன்படுத்த வேண்டும்.

coconut-fiber1

உங்களுக்கு கிடைத்த தேங்காய்நார் துகள்களை ஒரு மண் தொட்டியில் போட்டுக்கொள்ள வேண்டும். அதாவது உங்களது கைகளில் அள்ளி எடுத்து, மூன்று கைப்பிடிகள் போட்டுக்கொள்ள வேண்டும். அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கிளறி நன்றாக ஊற வைக்க வேண்டும். அதன்பின்பு கடைகளில் விற்கும் மண்புழு உரம் இதையும் மூன்று கைப்பிடி அளவு, தண்ணீர் ஊற்றி ஊற வைத்திருக்கும் தேங்காய் நார் துகள்களுடன் சேர்த்து கலந்துவிட வேண்டும். அதன் பின்பு இரண்டு கைப்பிடி அளவு செம்மண். உங்களுக்கு செம்மண் கிடைத்தால் போடலாம். அப்படி இல்லாதவர்கள் உங்கள் வீட்டில் என்ன மண் இருக்கிறதோ அதைப் போட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

அதாவது ஒரு சிறிய அளவு தொட்டிக்கு 40% தேங்காய் நார் துகள்கள், 40% மண்புழு உரம், 20% மண். இந்த விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தொட்டியில் இவை அனைத்தையும் சேர்த்து விட்டு நன்றாக கலந்து விட்டு விட வேண்டும். நன்றாக தண்ணீர் தெளித்து இந்த கலவையானது தயாராகி விட்ட பின்பு, உங்களது செடிகளை அதில் வைத்துக்கொள்ளலாம்.

coconut-fiber2

இந்த கலவையில் தண்ணீரானது தேங்கி நிற்கக்கூடாது. கலவையில் தண்ணீர் பதம் இருக்கவேண்டும் அவ்வளவுதான். இதில் செடியை நட்டு வேரூன்றி துளிர்விட ஆரம்பித்த பின்பு, இந்தச் செடிகளுக்கு கட்டாயமாக உங்கள் வீட்டில் இயற்கையான காய்கறி கழிவுகளை 10 நாட்களுக்கு ஒருமுறை போட்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது வீணான காய்கறி, வெங்காய கழிவு, தக்காளி கழிவு அப்படிப்பட்ட கழிவுகளை சேர்ப்பது மிகவும் நல்லது.

குறிப்பாக மாடித் தோட்டம் வைத்திருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றலாம். ஏனென்றால் மண்ணில் அதிகப்படியான தண்ணீர் ஊறி, வீடுகளுக்குள் தண்ணீர் கசிவு ஏற்படும் பிரச்சனை இந்தமுறையும் கட்டாயம் உண்டாகாது. தொட்டியிலும் இந்த முறையினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மண்ணில் இருப்பதைவிட அதிகப்படியான சத்துக்கள் இந்த தேங்காய் நாரில் அதிக அளவு அடங்கியுள்ளது.

coconut-plant

ஆகவே பயப்படாமல் இந்த முறையை பயன்படுத்தி செடி வளர்ப்பது தவறொன்றும் இல்லை. உங்களுக்கு சந்தேகமாக இருந்தால், ஒரு சிறிய அளவு தொட்டியில் இந்த முறையில் ஒரே ஒரு செடிக்கு மட்டும் பரிசோதித்துப் பார்த்து விட்டு, அதன் பின்பு உங்களுக்கும் விருப்பமிருந்தால், மனத்திற்குப் பிடித்திருந்தால் எல்லா செடிகளுக்கும் இந்த முறையை பின்பற்றி வரலாம். கட்டாயம் மண்ணில் வைக்கப்பட்ட செடியில், பூக்கும் பூக்களை விட, காய்க்கும் காய்களை விட, இந்த கலவையில் வைக்கும் செடியானது அதிகப்படியாக பூப்பூக்கும். அதிகப்படியான காயை தரும். என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே
மாதா, பிதா, குரு இவர்கள் மூவருக்கும் இந்த எண்ணம் மட்டும் வரவே கூடாது! மீறி வந்தால் உங்கள் தகுதியை, நீங்கள் இழந்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to use coconut fiber for planting. Coconut fiber for plants. Coconut coir for gardening. Thengai naar uram. Thengai naar uses.