எப்போது பார்த்தாலும் உங்களுடைய முகம் பாலில் கழுவி எடுத்த, முகம் போல வெள்ளையாக ஜொலிக்க வேண்டுமா? இதற்கு உங்க வீட்டில் இருக்கும் இந்த 3 பொருளை போதும்.

face11

சில பேருடைய முகம் எப்போது பார்த்தாலும் எண்ணெய் வழிந்து கொண்டு, பார்ப்பதற்கு கலையாகவே இருக்காது. சிலபேரு முகம் இயற்கையாகவே பாலில் கழுவி எடுத்தது போல பளபளப்பாக வெள்ளையா இருக்கும். உங்களுடைய முகம் ஜொலிக்க என்ன செய்ய வேண்டும்? மிக மிக சுலபமான முறையில் ஒரு ஃபேஸ் பேக் எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். செயற்கையாக இதில் எந்த பொருளையும் நாம் பயன்படுத்த போவது கிடையாது. இயற்கையான முறையில் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களே போதும்.

face1

நாம் எல்லோரும் அறிந்த, நாம் எல்லோருக்கும் தெரிந்த பொருட்களை வைத்து தான் இந்த ஃபேஸ் பேக்கை நாம் தயார் செய்ய போகின்றோம். உங்களுடைய வீட்டில் ஏதேனும் விசேஷம் வரப்போகின்றது, ஒரு மாதம் கழித்து அந்த விசேஷத்திற்கு நீங்கள் தயாராக வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்த ஃபேஸ் மாஸ்க் போட தொடங்கி விடுங்கள். பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டாம். பேஷியல் செய்து கொள்ள வேண்டாம். அட! மேக்கப் கூட போட வேண்டாங்க. உங்கள் முகம் தானாகவே ஜொலிக்க ஆரம்பித்து விடும்.

முதலில் ஒரு சிறிய பௌலிலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், 1 ஸ்பூன் கடலை மாவு, போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கட்டாயம் கலக்கக்கூடாது. தேங்காய்ப்பால் ஊற்றி தான் இதை கலக்கிக் கொள்ளவேண்டும். தேங்காய் பாலில் நிறைய தண்ணீர் ஊற்றி, பாலை தண்ணீராகவும் எடுக்கக்கூடாது. 2 டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு தேங்காயை நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து பிழிந்து தேங்காய் பாலை எடுக்க வேண்டும் அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம்.

kasthuri-manjal

இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்படியே அப்ளை செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு 20 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். முகம் நன்றாக காய்ந்து விடும். உங்களுடைய கையை குளிர்ந்த தண்ணீரில் தொட்டு முகத்தை நனைத்து கொண்டு, இரண்டு கைகளையும் முகத்தில் வைத்து வட்ட வடிவமாக லேசாக ஸ்கரப் செய்து மசாஜ் செய்து, சுத்தமான குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட வேண்டும் அவ்வளவுதான்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கை போட்டு விட்டு உடனே சோப்பு போட்டு கழுவி விடாதீர்கள் இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து சோப்பு போட்டு கழுவ லாம். நிறைய பேருக்கு முகம் மிகவும் வறட்சியான முகமாக இருக்கும். உங்களுடைய ஸ்கின் ரொம்ப டிரை ஸ்கின் இருந்தால், கடலை மாவுக்கு பதிலாக பயத்த மாவையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

kadalai-maavu

தேங்காய் பால் எடுப்பது சிரமமாக இருந்தால் இதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கூட கிரீம் போல செய்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். இருப்பினும் பெஸ்ட் ரிசல்ட் என்பது தேங்காய் பாலில் தான் கிடைக்கும். வாரம் ஐந்து நாட்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும். வாரம் ஏழு நாட்களும் செய்தால் இன்னும் நல்லது. முடியாதவர்கள் ஐந்து நாட்களாவது கட்டாயம் செய்து விடுங்கள்.

coconut-milk1

இந்த பேக்கில் மீதம் இருந்தால், மூன்று நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். ஆனால் முகத்தில் அப்ளை செய்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக, ஃப்ரிட்ஜிலிருந்து வெளியே எடுத்து வைத்து விட்டு, குளிர்ச்சித் தன்மை குறைந்ததும் முகத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.

face9

தொடர்ந்து இரண்டிலிருந்து மூன்று மாதத்திற்குள் உங்களுடைய முகத்தில் இருக்கும் வித்தியாசம் உங்களுக்கே தெரியும். அதோடு மட்டுமல்லாமல் உங்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் முகம் வித்தியாசத்தைப் பற்றி கேட்கும் அளவிற்கு நல்லா கலரா அழகா மாறிடுவீங்க. ட்ரை பண்ணி பாருங்க!