தேங்காய் எண்ணெய் பயன்கள்

cocnut-oil

சமையற்காலையில் சில வகை உணவுகளை பொரிப்பதற்கும், வறுப்பதற்கும் சமையல் எண்ணெய் மிகவும் அவசியமாகிறது. பல வகையான உணவு பொருட்களில் இருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகின்றன. இந்த எண்ணெய் வகைகளில் ஒன்றான “தேங்காய் எண்ணெய்” மிக நெடுங்காலமாகவே நமது சமையல் மற்றும் சித்த,ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தேங்காய் எண்ணெய் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

தேங்காய் எண்ணெய் பயன்கள்

இதயம்
ஒவ்வொரு மனிதனின் இதயமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். இதய ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணையில் சமைக்கப்பட்ட உணவுகள் பேருதவி புரிகிறது. இதில் இருக்கும் லாரிக் அமிலம் இதய ரத்த குழாய்கள் மற்றும் உடலில் எல் .டி. எல் எனப்படும் கொலஸ்ட்ரால் கொழுப்பை அதிகம் சேராமல் தடுத்து உடல் நலனை பாதுகாக்கிறது.

சருமம்

சருமத்தின் நலனை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய் முன்னனி வகிக்கிறது. தேங்காய் எண்ணையில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கின்றன. மேலும் கோடைகாலங்களில் தேங்காய் எண்ணையை மேற்புற தோலில் பூசி கொள்வதால் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தோலை பாதுகாக்கலாம்.

- Advertisement -

புண்கள், காயங்கள்

காயம் ஏற்பட்டு ஆறிக்கொண்டிருக்கும் புண்கள், புதிதாக ஏற்பட்ட ரத்த காயங்களில் அடிக்கடி நீர் படுவதை தவிர்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு நிவாரணமாக அக்காயங்களில் தேங்காய் எண்ணெயை நன்கு தடவுவதன் மூலம் நீர் புகாமல் பாதுகாப்பு ஏற்படுவதோடு. அப்புண்கள் மற்றும் காயங்களை வேகமாக ஆற்றவும் உதவுகிறது.

தலைமுடி

தலைமுடி கொட்டுதல், பித்த நரை அல்லது இளநரை, பொடுகு, வழுக்கை ஏற்படுவது போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன. மேற்சொன்ன பிரச்சனைகள் இருப்பவர்கள் தினந்தோறும் தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை தேய்த்து வருவதன் மூலம் தலை முடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் சுலபமாக தீரும்.

நோய் எதிர்ப்பு சக்தி

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருந்தால் தான் எதிர்வரப்போகும் பல வகையான நோய்களில் இருந்து உடலை காக்க முடியும். தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பலமடைந்து, எதிர்காலத்தில் நோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, ஏற்கனவே பாதித்திருக்கும் நோய்களை உடனடியாக நீக்கும்.

ஜீரண உறுப்புக்கள்

நமது உடலில் சாப்பிடும் உணவுகளை ஜீரணம் செய்யும் உறுப்புகளாக வயிறு குடல் போன்றவை இருக்கின்றன. வயிறு மற்றும் குடல்களில் ஏற்பட்டும் அல்சர், குடல்களில் தங்கியிருக்கும் நுண்ணுயிரிகள், நச்சுக்கள், மலச்சிக்கல், அஜீரணம் போன்றவை விரைவில் நீங்க தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடு வருவதன் மூலம் சிறந்த நிவாரணம் பெற முடியும்.

வாய், பற்கள் மற்றும் ஈறுகள்

தினமும் காலையில் எழுந்த உடன் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றிக்கொண்டு ஒரு 20 நிமிடங்கள் வாயை நன்கு கொப்பளித்து பிறகு, அந்த எண்ணையை துப்பி விட வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் ஆயில் புல்லிங் என்று கூறுவார்கள். இதை தினந்தோறும் செய்து வருபவர்களுக்கு பற்களில் சொத்தை ஏற்படுதல், ஈறுகள் வலுவிழப்பது, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரகங்களில் கால்சியம் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரக கற்கள் உருவாகிறது. இதை தடுக்க அளவுக்கு மீறிய கால்சிய சத்துக்கள் நமது உடலில் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.

டென்ஷன், மன அழுத்தம்

மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக தேங்காய் எண்ணெய் இருக்கிறது. அடிக்கடி டென்ஷன், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் தேங்காய் எண்ணையை எடுத்து தலையில் தடவி, ஒரு 20 நிமிடங்கள் இரண்டு கைகளாலும் தலையின் அனைத்து பகுதிகளிலும் நன்கு அழுத்தி, மாலிஷ் செய்து வந்தால் எப்படி பட்ட மனம் சார்ந்த பிரச்சனைகளும் நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.

உடல் குளிர்ச்சி

தேங்காய் எண்ணெய் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை அதிகம் கொண்டதாகும். தேங்காய் எண்ணையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் நீங்கி உடல் சீக்கிரத்தில் குளிர்ச்சி அடையும். தேங்காய் எண்ணையை உடல் மற்றும் தலைக்கு நன்கு தேய்த்த பின்பு குளிப்பதால் உடலில் இருக்கின்ற உஷ்ண நோய்கள் நீங்கும். கண்களும் குளிர்ச்சி பெறும்.

இதையும் படிக்கலாமே:
எள் பயன்கள்

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Coconut oil uses in Tamil or Coconut oil Benefits in Tamil. It is also called as Coconut oil nanmaigal in Tamil or Coconut oil maruthuva payangal in Tamil or Coconut oil maruthuvam in Tamil