அழுகிய தேங்காயில் தேங்காய் எண்ணெய் எப்படி எடுப்பது?

coconut oil
- Advertisement -

வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்கள் அழுகி விட்டாலோ காய்ந்து விட்டாலோ அதை நாம் தூக்கி தூரப் போட்டு விடுவோம். அப்படியான பொருட்களில் ஒன்று தான் இந்த தேங்காய். ஆனால் இந்த அழுகிய தேங்காயை கூட மறுபடியும் பயன்படுத்த முடியும் அது எப்படி என்ன என்பதை எல்லாம் வீட்டுக் குறிப்பு குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அழுகிய தேங்காய் பயன்படுத்தும் முறை

இந்த முறைக்கு முதலில் அழுகிய தேங்காய் எல்லாம் தேங்காய் ஓட்டில் இருந்து எடுத்து ஒரு முறை தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு வெள்ளை நிற துணியில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து தேங்காய் பாலை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் ஏற்கனவே அரைத்த தேங்காயில் தண்ணீர் ஊற்றி அரைத்து மறுபடியும் பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்படியாக தேங்காயில் உள்ள பால் மொத்தமும் வரும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வடிகட்டி எடுத்த தேங்காய் பாலை நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் வரை அப்படியே வைத்து விடுங்கள். இப்போது அதற்கு மேல் வெள்ளை நிறத்தில் கிரீம் போல படிந்து இருக்கும். அடுப்பில் அடி கனமான கடாய் வைத்து மேலே படிந்திருக்கும் அந்த கிரீம் போன்ற பகுதியை எடுத்து கடையில் போட்டு சூடு படுத்துங்கள்.

- Advertisement -

அது நல்ல வெண்ணை போல உருகி அதிலிருந்து எண்ணெய் தனியாக பிரிந்து வரும். அப்படியே சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்தால் அந்த கிரீம் போன்ற பகுதிகளில் இருந்து முழுவதுமாக எண்ணெய் வடிந்து கருப்பு நிறத்தில் திப்பி போல தனியாக தங்கி விடும்.

இதையும் படிக்கலாமே: செம்பு, பித்தளை பொருட்களை சுத்தம் செய்ய எளிமையான முறை

இப்போது அடுப்பை அணைத்து விட்டு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டிலே நல்ல வாசம் வரக்கூடிய சுத்தமான தேங்காய் எண்ணெயை தயார். அழுகி வீணாக கீழே தூக்கிப் போடும் தேங்காயில் கூட இத்தனை வாசமாக தேங்காய் எண்ணெய் எடுக்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

- Advertisement -