அந்த காலத்தில் தேங்காய் எண்ணெய் கூட இந்த எண்ணெய் சேர்த்து தான் பயன்படுத்துவாங்களாம்! இப்படி பண்ணினா 1 முடி கூட கொட்டவே கொட்டாது தெரியுமா?

hair-coconut-oil
- Advertisement -

தேங்காய் எண்ணெயில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்,உங்களுடைய தலைமுடிக்கு நல்ல ஒரு மாய்ஸ்ரைஸ் செய்கிறது. பலரும் தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது? என்று தெரியாமலேயே தலைமுடியை உதிர செய்து விடுகின்றனர். சாதாரணமான தேங்காய் எண்ணெய் மட்டுமே நம்முடைய கூந்தலுக்கு போதுமா? அதை எப்படி பயன்படுத்தினால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்? என்பது போன்ற பயனுள்ள அழகு குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தினமும் ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி ஆவது தேங்காய் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது. சுத்தமான செக்கிலாட்டிய தேங்காய் எண்ணெயை உபயோகிப்பது நன்மை தரும். பல்வேறு கலப்படங்கள் நிறைந்துள்ள தேங்காய் எண்ணெயை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ளுங்கள். இது ஒரு விதத்திலும் பயன் தராது. மர செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் என்று பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். கேரளாவில் தேங்காய் எண்ணெயை தவிர வேறு எந்த எண்ணையும் தலைக்கு பயன்படுத்துவது கிடையாது. ஆனால் தமிழ்நாட்டு பெண்களோ இருக்கின்ற முடியையும் இழப்பதற்கு எல்லா எண்ணெய்களையும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

அந்த காலத்தில் எல்லாம் தேங்காய் எண்ணெயுடன், இந்த எண்ணெயையும் சேர்த்து பயன்படுத்தி வந்தனர். இதனால் ஒரு முடி கூட கொட்டாமல் நன்கு அவர்களுடைய முடி கருகருன்னு அடர்த்தியாக இருந்து வந்தது. அது வேறு எந்த எண்ணெயும் இல்லை, விளக்கெண்ணெய் தான். சுத்தமான விளக்கெண்ணெய் முடி வளர்ச்சியை தூண்டக் கூடியது. இது பொதுவாக புருவங்கள் அடர்த்தியாக பயன்படுத்தப்படுவது உண்டு.

அதிகம் குளிர்ச்சி என்பதால் இதை நேரடியாக தலைக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் கூந்தல் உதிர்வதற்கு மிக முக்கிய காரணம் உடல் உஷ்ணமும், வறண்ட தன்மையும் தான். தலைமுடியின் வறண்ட தன்மை அதை வேரிலிருந்து உதிர செய்கிறது எனவே முதலில் தலையையும், உடலையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதற்கு இந்த தேங்காய் எண்ணெயை எடுத்து மிதமான சூட்டில் சுட வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அரை நிமிடம் வைத்து எடுத்தால் போதும், அதிகம் சுட தேவையில்லை. கை பொறுக்கும் பதத்தில் இருந்தால் போதும். இப்படி நாலு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுக்கிறீர்கள் என்றால், அரை ஸ்பூன் மட்டும் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இந்த எண்ணெயை தடவி நீங்கள் தலைமுடியின் வேர்கால்களுக்கு நல்ல ஒரு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி மசாஜ் செய்வதால் உங்களுடைய தலைமுடி வேரிலிருந்து வலுப்பெற ஆரம்பிக்கும். இதனால் முடி உதிர்வது குறையும், மேலும் வறண்ட தன்மையை போக்கி ஈரப்பதத்துடன் எப்பொழுதும் வைத்துக் கொள்ளும்.

- Advertisement -

எப்பொழுதும் தேங்காய் எண்ணெய் தடவிய பின்பு நீங்கள் அதிகம் வெளியில் சென்று அலைய வேண்டியிருக்கிறது என்றால், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலையை அலசி விடுவது நல்லது. இதனால் அழுக்குகள் அதிகம் சேராமல் இருக்கும். எண்ணெய் அதிகம் தடவுகிறேன் என்று மொழுக்க மொழுக்க தடவ வேண்டிய அவசியம் இல்லை. வேர்கால்களுக்கு மசாஜ் செய்த பின்பு தலைமுடியில் லேசாக தடவினால் போதும். தினமும் நீங்கள் தலைக்கு குளிக்கும் வரை இதே போல தடவுவது நல்லது.

இதையும் படிக்கலாமே:
ஒரே நாளில் முகம் பளிச் சென்று மாறி பட்டு போல இருக்க, வெள்ளரிக்காயை இந்த பொருளுடன் சேர்த்து பேக் போடுங்கள். அப்புறம் பாருங்க உங்க முகத்தை நீங்களே ரசிக்க அரம்பீச்சிடுவீங்க.

தலைக்கு குளித்த மறுநாள் நீங்கள் எண்ணெய் இதே போல அப்ளை செய்து கொள்ளலாம். அன்றைய தினம் தவிர்த்து விடுங்கள். இந்த முறையில் நீங்கள் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவி வந்தாலே போதும், வேறு எந்த எண்ணெயையும் தேடாமல் உங்களுடைய முடியை கருகருன்னு அடர்த்தியாக வளர செய்யலாம்.

- Advertisement -