ஒருவருக்கு தன்னுடைய வாழ்க்கையில் சுப காரியங்களில் தடைகள் ஏற்படும் அதே போல் தான் செய்யும் வேலையிலும் தொழிலிலும் தடைகள் ஏற்படும். இப்படி எந்த காரியத்திற்கு தடைகள் ஏற்படுகிறதோ அந்த காரியங்கள் விரைவில் நடைபெற வேண்டும் என்றாலும் அதுவும் குறுகிய காலத்தில் காரிய வெற்றி ஏற்பட வேண்டிய காரியமாக இருக்கும் பட்சத்தில் அந்த காரியம் வெற்றி அடைவதற்கு தேங்காயை வைத்து மிகவும் எளிமையான முறையில் நாம் பரிகாரம் செய்யலாம். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
காரிய தடை நீங்க தேங்காய் பரிகாரம்
ஒருவருக்கு திருமணத்தில் தடைகள் ஏற்படுகிறது, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள், இப்படி பல சுபகாரியங்கள் ஒருவருடைய வாழ்க்கையில் நடைபெறும். அந்த சுப காரியங்களில் இருக்கக்கூடிய தடைகள் நீங்க வேண்டும் என்றாலும், வேலை கிடைக்காமல் தடை ஏற்படுகிறது, வேலையில் முன்னேற்றம் ஏற்படாமல் தடை ஏற்படுகிறது, தொழிலில் லாபம் கிடைக்காமல் நஷ்டமே உண்டாகிறது, தொழில் ரீதியாக புதிதாக எந்த ஒரு முயற்சியை செய்தாலும் அதில் தடைகள் வந்து கொண்டே இருக்கிறது என்றாலும் அதனால் நம்முடைய வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. அந்த வாழ்க்கையை சீராக்குவதற்கும், சிறப்பாக மாற்றுவதற்கும் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேங்காயும் நூலும் தேவைப்படும். ஒரு நல்ல தேங்காயாக பார்த்து ஒரு தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளை நிற நூலை எடுத்துக் கொள்ளுங்கள். சுப காரியங்களில் தடைகள் ஏற்பட்டு இருக்கிறது என்னும் பட்சத்தில் அந்த வெள்ளை நூலில் மஞ்சளை தடவி மஞ்சள் நூலாக மாற்றிக் கொள்ளுங்கள். வேலை அல்லது தொழிலில் ஏதாவது தடைகள் ஏற்பட்டிருக்கிறது என்னும் பட்சத்தில் அந்த வெள்ளை நூலில் குங்குமத்தை தடவி சிவப்பு நூலாக மாற்றிக் கொள்ளுங்கள். விருப்பம் இருப்பவர்கள் மஞ்சள் நூலாகவோ அல்லது சிவப்பு நூலாகவோ கூட வாங்கிக் கொள்ளலாம்.
ஒருவர் ஒரு காரியத்திற்காக மட்டும்தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். முதலில் தேங்காயை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடைய குடுப்பியை சுத்தமாக எடுத்து விட்டு அதற்குள் இருக்கக்கூடிய மூன்று கண்களிலும் சந்தனத்தை வைக்க வேண்டும். பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் நூலை எடுத்து உங்களுக்கு எந்த காரியம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த காரியம் நடைபெற வேண்டும் என்று மனதார நினைத்துக் கொண்டு அந்த நூலை எடுத்து தேங்காயில் சுற்ற வேண்டும்.
சுற்றும் பொழுது நம்முடைய கை முன்னோக்கி செல்லுமாறு தான் இருக்க வேண்டுமே தவிர பின்னோக்கி வரும்படி இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு அந்த தேங்காயை கையில் வைத்துக் கொண்டு உங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த தேங்காயை பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படத்துக்கு முன்பாக வைத்து விட வேண்டும்.
உங்களுடைய காரியம் எப்பொழுது நிறைவடைகிறதோ அப்பொழுது அந்த தேங்காயில் சுற்றி இருக்கும் கயிறு கழட்டி வீட்டில் இருக்கக்கூடிய செடிகளில் போட்டு விட வேண்டும். தேங்காயை அருகில் இருக்கும் ஆலயத்தில் உடைத்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:நகை கடனை அடைக்க பரிகாரம்
ஒரே மாதத்திற்குள் ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்னும் பட்சத்தில் அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் நீங்குவதற்கு இந்த பரிகாரத்தை செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.