ஒருமுறை இப்படி தேங்காய் சர்க்கரை பூரி செய்து பாருங்கள். அடடா! எவ்வளவு சுவையாக இருக்கிறது என்று வீட்டில் உள்ள அனைவரும் உங்களை பாராட்டுவார்கள்

poori
- Advertisement -

இனிப்பு என்றாலே பிடிக்காதவர்கள் என்று எவரும் இருக்க மாட்டார்கள். அதிலும் மொறுமொறுவென, கிரிஸ்பியான சுவையில் ஒரு இனிப்பு பலகாரம் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். பொதுவாகவே பூரி என்றாலும் பிடிக்காதவர்கள் என்று எவரும் இருக்க மாட்டார்கள். இநத புரியல இனிப்பு சுவையுடன் செய்து கொடுத்தால் இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள். தேங்காய் துருவலில் சர்க்கரை சேர்த்து, அதனை கோதுமை மாவில் வைத்து பூரியாக செய்து கொடுக்கும் பொழுது அதன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும். வாருங்கள் இந்த அசத்தலான தேங்காய் சர்க்கரை பூரியை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், சர்க்கரை – அரை கப், ரவை – அரை கப், தேங்காய் – அரை மூடி எண்ணெய் – கால் லிட்டர், உப்பு – கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரை மூடி தேங்காயை பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் சேர்க்இ ரைவையை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரை கப் ரவை, அரை கப் சர்க்கரை மற்றும் துருவிய தேங்காய் இவை மூன்றையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கப் கோதுமை மாவு கிண்ணத்தில் சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் பிசைந்த கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட வேண்டும்.

- Advertisement -

அதன்பிறகு போட்டு வைத்துள்ள ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, அதன் நடுவே சிறிதாக குழி போன்று செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனுள் செய்து வைத்துள்ள தேங்காய் சர்க்கரை கலவையை இரண்டு ஸ்பூன் அளவு வைத்து மறுபடியும் அதனை உருண்டையாக உருட்டி கொள்ள வேண்டும். பின்னர் அந்த உருண்டைடையை பூரி திரட்டும் கட்டையின் மீது வைத்து நன்றாக திரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பின் மீது கடாயை வைத்து, கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் திரட்டி வைத்துள்ள பூரியை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு உருண்டையிலும் தேங்காய் கலவை வைத்து இப்படி பூரி போல் திரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் சர்க்கரை பூரி தயாராகிவிடும். இதனை சுட சுட பரிமாறிக் கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவருமே விருப்பமாக சாப்பிடுவார்கள். வீட்டிற்கு ஏதேனும் விசேஷம் என்றாலும் இனிப்புப் பலகாரமாக இதனை செய்து கொடுத்தால் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளும் உங்களை பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.

- Advertisement -