தேங்காய் பால் எடுத்து விட்டு மீதி இருக்கும் திப்பியை தூக்கி எறிவீர்களா? இது தெரிஞ்சா இனி தூக்கி போட மாட்டீங்க!

coconut-milk-waste-rose
- Advertisement -

நாம் அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தும் தேங்காயின் உள்ளே நிறையவே சக்திகள் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை தினமும் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டு வந்தால் பல்வேறு நோய்கள் தீர்ந்துவிடும். தேங்காய் பாலில் இருக்கும் சத்துக்கள் எண்ணற்றவை. இது மனிதனுக்கு மட்டுமல்லாமல் செடி, கொடிகளுக்கும் பெருமளவில் செழிப்பாக வளர உதவி புரிகின்றன. எனவே நாம் தூக்கி எறியும் இந்தத் தேங்காய் திப்பியை என்ன செய்யலாம்? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து பயணிப்போம்.

தேங்காயில் இருக்கும் பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், அயர்ன் போன்ற முக்கிய சத்துக்கள் மனித உடலுக்கு மட்டுமல்லாமல் செடி, கொடிகளுக்கு சிறப்பான வளர்ச்சியைக் கொடுக்கும் ஆற்றல் படைத்தது. இதில் இருக்கும் முழுமையான சத்துக்களை செடிகளுக்கு நாம் எப்படி முறையாக கொடுப்பது? என்பதை பார்க்க வேண்டும். தேங்காயை சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது அதில் இருக்கும் தேங்காய்ப் பால் எடுத்து விட்டு மீதி இருக்கும் திப்பியை தூக்கி எறிபவர்கள் இனி அதனை தூக்கி எறிய வேண்டாம். தேங்காய் திப்பியை அப்படியே நீங்கள் கொண்டு போய் உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு போட்டால் உடனே எறும்பு மொய்க்க துவங்கிவிடும்.

- Advertisement -

தேங்காயில் இருக்கும் இனிப்பை சாப்பிட எறும்புகள் வரும் எனவே அதனை முறையாக பதப்படுத்தி நாம் உரமாக கொடுக்கும் பொழுது நமக்கு இயற்கையாகவே செடிகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். நம் செடிகளுக்கு தேவையான உரத்தை நாம் காசு கொடுத்து கடைகளில் தான் வாங்க வேண்டும் என்று ஒன்றும் இல்லை! நாம் சமையலுக்கு பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பல பொருட்களை உரமாக்கி இயற்கையாக கொடுத்தால் எந்த வித ரசாயன தாக்குதல் இன்றி நம்முடைய செடி, கொடிகள் செழிப்பாக வளரும். இந்த தேங்காய்த் திப்பி உங்கள் வீட்டு செடிகளுக்கு நல்ல ஊட்ட சத்துள்ள இயற்கை உரமாக இருக்கப் போகிறது.

coconut-milk-waste

தேங்காய் பால் எடுத்து விட்டு மீதி இருக்கும் திப்பியை நன்கு வெயிலில் உலர்த்தி கொள்ள வேண்டும். நீங்கள் உலர்த்தும் பொழுது அதனுடன் நான்கு, ஐந்து சொட்டுகள் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொண்டால் எறும்புகள் வராமல் இருக்கும். அல்லது எலுமிச்சை பழத்தினுடைய தோல் இருந்தால் கூட அதனை துண்டு துண்டாக கத்தரித்து அதனுடன் சேர்த்து உலர வைத்தால் எறும்புகள் அண்டாது.

- Advertisement -

தேங்காய் நன்கு உலர்ந்த பின் அதனுடன் வேப்பம் புண்ணாக்கு சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எந்த அளவிற்கு தேங்காய்த் திப்பியை சேர்த்து இருக்கிறீர்களோ! அதே அளவில் பாதி அளவிற்கு வேப்பம் புண்ணாக்கு சேர்த்துக் கொள்ளுங்கள். வேப்பம் புண்ணாக்கு நர்சரிகளில் மற்றும் உரக் கடைகளில் கிடைக்கும். இவற்றை ஒன்றோடு ஒன்று நன்கு கலந்து சிறு சிறு உருண்டைகளாக சப்பாத்திக்கு உருட்டுவது போல உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

uram4

இந்த உருண்டைகளை உங்கள் வீட்டு ரோஜா செடி போன்ற அழகிய பூச்செடிகளுக்கும், காய்கறி செடிகளுக்கும் உரமாக வாரம் ஒருமுறை போட்டால் கூடப் போதும், செடிகள் அவ்வளவு செழிப்பாக பச்சை பசேலென செம்மையாக வளரும். மேலும் அதிகமான பூக்களையும், காய்களையும் அள்ளித் தரும். உங்கள் வீட்டு செடிகளின் வேர்களுக்கு இடையூறு இல்லாமல் ஒரு ஓரமாக மண்ணைத் தோண்டி புதைத்து பின் மண்ணை மூடி லேசாக தண்ணீர் தெளித்து விட வேண்டும், அவ்வளவு தான் அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் யாவும் வேர்களில் இறங்கி செடிகளுக்கு செழிப்பை கொடுக்கும்.

- Advertisement -