காபி தூள் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை நீக்குமா எப்படி? கருவளையம் எளிதாக நீங்க இப்படி செய்யுங்கள்!

karuvalayam-coffee
- Advertisement -

கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் நம் ஒட்டுமொத்த முக அழகை கெடுக்கக் கூடியது ஆகும். நம்மை அதீத சோர்வுடன் தோற்றமளிக்க கூடிய இந்த கருவளையத்தை ரொம்ப எளிதாக விரட்டுவதற்கு நாம் குடிக்கும் காபியும் உதவி செய்கிறது. அது எப்படி? கண் கருவளையம் நீங்க காபியை பயன்படுத்தும் முறை என்ன ? என்பதைத் தான் இந்த பயனுள்ள அழகு குறிப்பு சார்ந்த பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

போதுமான ஓய்வு இல்லாததாலும், கண்களுக்கு ஓய்வு கிடைக்காததாலும் கருவளையம் உண்டாகிறது. மேலும் இதர பல காரணங்களும் உண்டு. கண்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்க முதலில் ஆறிலிருந்து எட்டு மணி நேரம் சரியான ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். போதிய ஓய்வு தான் கருவளையத்தை விரைவாக விரட்டி அடிக்கும்.

- Advertisement -

சமச்சீரான உணவு மற்றும் நல்ல காய்கறி, பழங்கள், கொழுப்பு போன்றவற்றை உணவில் அன்றாடம் சேர்க்க வேண்டும் போதிய அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சத்து குறைவதாலும் கருவளையம் அதிகரிக்கும் எனவே தண்ணீரை அதிகமாக பருகுங்கள். உப்பின் அளவை கணிசமாக குறையுங்கள். உப்பு அதிகமானால் நீர் தேக்கம் உண்டாகும் இதனால் கருவளையம் மறைவதில் இடையூறுகள் ஏற்படும். உப்பு அளவை குறைப்பது கருவளையத்தை போக்க உதவும்.

காபி தூளில் காஃபின் காணப்படுகிறது. இது கருவளையத்தை எளிதாக விரட்டி அடிக்கிறது. சிறிதளவு காபி தூள் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவுக்கு தேங்காய் எண்ணெயை சொட்டுகளாக விட்டுக் கொள்ளுங்கள். நன்கு பேஸ்ட் போல கலந்து கண்களை சுற்றி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அதிகம் அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக ஒரு பத்து நிமிடம் மசாஜ் செய்து விடுங்கள். அதன் பிறகு அதை அப்படியே உலரவிட்டு விட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவுங்கள். இது கருவளையத்தை விரைவாக போக்குவதற்கு உந்துகோளாக இருக்கும்.

- Advertisement -

அதேபோல சிறிதளவு காபி தூளுடன், தேவையான அளவிற்கு தேன் சேர்த்து நன்கு இதே போல பேஸ்ட் மாதிரி கலந்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் கண்களை சுற்றிலும் மென்மையாக மசாஜ் செய்து கொடுக்க வேண்டும். பத்து நிமிடம் ஆள்காட்டி விரலைக் கொண்டு வட்ட வடிவில் சிறு சிறு வட்டங்களாக கண்களை சுற்றிலும் மசாஜ் செய்து கொள்ளுங்கள். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை அலம்புங்கள். இதுவும் கண் கருவளையத்தை எளிதாக விரட்டி அடித்து சோர்வினை நீக்கும்.

இதையும் படிக்கலாமே:
குச்சி குச்சியாக இருக்கும் உங்க முடியை கட்டை போல மாற்ற இந்த ஒரு சீரம் இருந்தா போதும். நரையே வராம முடியை நல்லா கருகருன்னு நீண்டு அடர்த்தியாக வளர வைக்க இது ஒண்ணு போதும்.

வெள்ளரிக்காயை பொதுவாக கண் கருவளையத்திற்கு, கண் சோர்விற்கு பயன்படுத்துவது உண்டு. வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களுக்கு மேலே ஒரு மணி நேரம் வைத்திருந்து எடுத்தால் கண்களுக்கு நல்ல ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். இதனால் கருவளையம் எளிதாக நீங்குவதற்கு ஏதுவாக இருக்கும். காபி தூளுடன் வெள்ளரிக்காய் சாற்றை சேர்த்து இதே போல மசாஜ் செய்து கொள்ளுங்கள். முகம் முழுவதும் கூட நீங்கள் இது போல வட்ட வடிவில் மசாஜ் செய்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிவினால் ஈவன்டோன் கிடைக்கும். ஒரே மாதிரியான நிறம் முகத்திற்கு கிடைக்க இது போல செய்யலாம். கண்களை சுற்றியுள்ள கருவளையம் நீக்குவதில் காபி முதலிடம் வகிக்கிறது எனவே நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, உங்க கருவளையத்தையும் விரைவாக விரட்டுங்கள்.

- Advertisement -