காபி தூள் கட்டியாகாமல் இருக்க, கட்டியான காபி தூளை திரும்பவும் பயன்படுத்த சூப்பரான ஒரு டிப்ஸ் இதோ.

காபி தூள்
- Advertisement -

காபி என்பது இன்று பலரும் அருந்தக்கூடிய ஒரு உற்சாக பானமாக இருக்கிறது. வீட்டில் வேலை செய்யும் பெண்களும் சரி, அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் சரி, ஒருநாளைக்கு குறைந்தது 2 முறை காபி அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் காப்பித்தூளானது கெட்டியாக மாறி இறுகி இருப்பதை நாம் கண்டிருப்போம். அது போன்ற சமயங்களில் பலர் காபி தூள் உள்ள பாட்டிலில் கரண்டி அல்லது கத்தி கொண்டு காபி தூளை சுரண்டி எடுத்திருப்போம். அப்படியான ஒரு நிலையை தவிர்த்து, காபி தூள் கட்டிபடாமல் இருக்கவும், ஒருவேளை கட்டிப்பட்டால் என்ன செய்வது என்பது குறித்தும் இந்த பதிவில் நாம் காண்போம் வாருங்கள்.

காபி தூள்

காபி தூள் கட்டிபடாமல் இருக்க என்ன செய்யலாம்?
காபி தூள் கட்டியாக மாறுவதற்கு காரணம் அதில் காற்று புகுவது தான். பாக்கெட்டில் நாம் காபி தூள் வாங்கினால், அதை பயன்படுத்திய பிறகு மீதம் உள்ள காபி தூளில் காற்று புகாத அளவிற்கு அந்த பாக்கெட்டை நன்றாக மடித்து ரப்பர் பேண்ட் போட்டு பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். அதே பாட்டிலாக இருந்தால், காபி தூளை பயன்படுத்திய பிறகு அந்த பாட்டிலை இறுக்கமாக மூடினால் போதுமானது.

- Advertisement -

கட்டுப்பட்ட காபி தூளை எப்படி பயன்படுத்துவது?
ஒருவேளை பாக்கட்டில் வாங்கிய காபி தூள் கட்டிப்பட்டால், காபி தூள் கட்டியை வெளியில் எடுத்து ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நன்கு சூடான நீரை அரை ஸ்பூன் அளவிற்கு அதில் கலந்துவிட்டு ஒரு மூடி கொண்டு அந்த கிண்ணத்தை மூடி வைத்தால் ஒரு சில நிமிடங்களில் அந்த காபி தூள் கரைந்து விடும். பிறகு எப்போதும் வேண்டுமானாலும் கரைந்த அந்த காபித்தூளை கிணத்தில் இருந்து சிறிதளவு எடுத்து பயன்படுத்தலாம்.

காபி தூள்

ஒருவேளை காபி தூள், பாட்டிலில் கட்டிப்பட்டிருந்தால், ஒன்று முதல் இரண்டு ஸ்பூன் சுடுதண்ணீரை பாட்டிலில் ஊற்றி அதை கரைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். மேல குறிப்பிட்டுள்ள முறைகளில் எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் கிண்ணத்தையோ அல்லது பாட்டிலையோ பயன்படுத்த கூடாது. ஏனென்றால் சுடு தண்ணீர் பாலிஸ்டிக் மீது பட்டதும் பிளாஸ்டிக் உருகி காபி துளோடு கலந்து விடும். ஆகையால் எவர் சில்வர் கிண்ணம் அல்லது கண்ணாடி பாட்டிலை பயன்படுத்துவது தான் உகந்தது.

- Advertisement -