சட்டையில் காபி, டீ கறை பட்டுவிட்டதா? கறை இருந்த இடம் தெரியாமல் உடனே போக செய்வது எப்படி? வாஷிங் மெஷினில் காலரில் இருக்கும் அழுக்கு போகவில்லையா? அப்படின்னா இத பண்ணுங்க!

cloth-stains
- Advertisement -

சட்டையில் அல்லது துணிகளில் ஒட்டிக் கொள்ளும் காபி அல்லது டீ கறைகள் அவ்வளவு விரைவில் எளிதாக நீங்குவது இல்லை. அது மட்டும் அல்லாமல் அதை அப்படியே காய விட்டு விட்டால் கறைப்படிந்து அசிங்கமாக தெரியும். குறிப்பாக வெள்ளைத் துணிகளில் இது போன்ற கறைகளை நீக்குவது ரொம்பவே கடினமாக இருக்கும். ஆனால் இந்த ஒரு விஷயத்தை செய்யும் பொழுது ரொம்பவே ஈசியாக துணிகளில் இருக்கும் நிறம் மாறாமல் கறைகளை மட்டும் கரைத்து அகற்றி விடும். அப்படியான ஒரு விஷயம் என்ன?

என்னதான் வாஷிங்மெஷினில் துணிகளை போட்டு துவைத்தாலும் விடாப்பிடியான காலர் அழுக்குகள் அவ்வளவு சுலபமாக நீங்குவதும் கிடையாது. இதற்காக மறுபடியும் சோப் போட்டு ஹேண்ட் வாஷ் செய்ய வேண்டி இருக்கும். அப்படி செய்யாமல் வாஷிங் மெஷினிலேயே காலர் அழுக்குகளையும் சேர்த்து எளிதாக நீக்குவது எப்படி? இந்த வீட்டு குறிப்பு பதிவில் தெரிஞ்சுக்க போறோம் வாங்க.

- Advertisement -

துணிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் காபி அல்லது டீ போன்ற கறைகள் பட்டு விட்டால் உடனடியாக அதனை தண்ணீரில் நனைத்து விட வேண்டும். அப்பொழுது தான் விடாப்பிடியாக கறை படியாது. நீண்ட நேரம் காற்றில் காய விட்டு விட்டால் அது அடர்த்தியாக ஒட்டிக் கொண்டு விடும். குறிப்பாக காட்டன் துணிகளில் ஒட்டிக் கொண்டால் நூல் இழைகளுக்குள் சென்று விடும், அவ்வளவுதான் துணிமணிகள் பாழாக போய்விடும்.

இப்படி கறைபட்ட துணிகளை தனியாக எடுத்து ஒரு பக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள். கறை படிந்த இடத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வினிகரை விட்டு நன்கு தேய்த்து கொடுங்கள். பிறகு சட்டை மூழ்கும் அளவிற்கு பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு சோப் போட்டு தேய்க்காமல், கொஞ்சம் ஷாம்பு போட்டு அந்த இடத்தில் லேசாக கசக்கி விட்டால் போதும், கறை இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்து போயிருக்கும். வெள்ளை துணிகளில் கூட இதை செய்து பாருங்கள், பளிச்சென இருக்கும்.

- Advertisement -

வாஷிங் மெஷினில் துணி துவைப்பவர்கள் விடாப்பிடியான காலர் அழுக்குகளை கவனிக்க மறந்து விடுவார்கள். அது நாட்பட நாட்பட இன்னும் மோசமாகி துணி சீக்கிரமே கிழிந்து விடவும் வாய்ப்புகள் உண்டு. காலர் அழுக்குகளை நீக்குவதற்கு பிரத்தியேகமாக சிறு சிறு பந்து போன்ற பொருட்கள் விற்கப்படுகின்றன. இதற்கு பதிலாக நாம் வீட்டிலேயே சில பொருட்களை வைத்து இந்த பந்து தயாரிக்கலாம்.

அலுமினியம் ஃபாயில் பேப்பர் மலிவான விலைகளில் கிடைக்கும். அல்லது நீங்கள் கடைகளில் உணவு வாங்கும் பொழுது இந்த அலுமினிய காகிதங்கள் இலவசமாகவே கிடைக்கும். இதை சேகரித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை சிறு சிறு உருண்டைகளாக பந்து போல மடித்து உருட்டிக் கொள்ளுங்கள். ஒரு மெல்லிய நூல் கொண்டு இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த அலுமினியம் ஃபாயில் பேப்பர் பால்களை வாஷிங் மெஷினில் போட்டு துணி துவைக்கும் பொழுது துணியுடன் சேர்ந்து உரசி விடாப்பிடியான அழுக்குகளை எளிதாக நீக்குகிறது. காலரில் இருக்கும் அழுக்குகள் கூட சுத்தமாக நீங்கி விட்டிருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -