வெண்ணை பந்து போல இட்லி மாவு 10 நிமிடத்தில் அரைக்க இப்படி ஒரு வழி இருக்கிறதா? இவ்வளவு நாளா இதை தெரிஞ்சுக்காம விட்டுட்டோமேன்னு வருத்தப்பட போறீங்க!

idly-maavu-vadai

இட்லி மாவு பதமாக அரைப்பதற்கு உளுந்து அரைக்கும் விதம் என்பது மிகவும் முக்கியம். உளுந்தை மட்டும் வெண்ணை போல பதமாக அரைத்து விட்டால் இட்லி, குஷ்பூ இட்லி போல சூப்பராக வரும். உளுந்தை அரைக்கும் விதத்தில் தான் பலரும் தவறு செய்து விடுகின்றனர். உளுந்தில் தண்ணீர் அதிகம் ஆனாலும், குறைவாக இருந்தாலும் இட்லி மெத்தென்று வருவதில் சிக்கல் உண்டாகிவிடும். இட்லி மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல, வடைக்கு உளுந்து அரைத்தாலும் இதே முறையில் தான் நாம் உளுந்தை அரைத்தாக வேண்டும். பத்து நிமிடத்தில் உளுந்தை வெண்ணை என பந்து போல் திரண்டு வர செய்ய என்ன செய்யலாம்? அதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

idly-maavu

இட்லி பஞ்சு போல் மெத்தென்று வருவதற்கும், எண்ணெய் குடிக்காத வடை சுடுவதற்கும் உளுந்து அரைக்க இந்த டிப் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். பொதுவாக இட்லிக்கு உளுந்து அரைக்க சுமார் அரை மணிநேரமாவது எடுக்கும். ஆனால் இந்த முறையை நீங்கள் பின்பற்றி அரைத்தால் சரியாக பத்து நிமிடத்தில் பந்து போல் உளுந்து திரண்டு வரும். இவ்வளவு நாளா இது தெரிஞ்சுக்காம விட்டுட்டோமே என்று நீங்களே வருத்தப்பட போகிறீர்கள் பாருங்கள்.

வடைக்கு உளுந்து அரைத்தாலும், உளுந்து தண்ணீர் சேர்க்கப்படாமல் கெட்டியாக அரைக்க வேண்டியது அவசியமாகும். மிக்ஸியில் உளுந்தை போட்டு அரைக்கும் பொழுது தண்ணீர் சரியாக விட தெரியாதவர்கள் மாவை நீர்க்க செய்து விடுவார்கள். இதனால் வடை அதிகம் எண்ணெய் உறிஞ்சி விடும். இப்போது நாம் அரைக்க இருக்கும் இந்தப் பதத்தில் உளுந்தை நீங்கள் அரைத்தால், வடை புஸ்சென்று ஹோட்டல் வடையையே தோற்கும் அளவிற்கு சூப்பராக வெந்து வரும். பத்து வடை கூட நிமிடத்தில் உள்ளே தள்ளி விடலாம்.

rice-flour-vadai1

கிரைண்டரில் இட்லிக்கு மாவு அரைக்கும் பொழுது அரிசி எடுக்கும் நேரத்தை விட, உளுந்து எடுக்கும் நேரம் அதிகமாகும். இடையிடையே நீர் தெளித்து விட்டு வெண்ணைப் போல ஆட்டுவதற்கு சற்று சிரமமாக இருக்கும். இந்த சிரமத்தை எளிதான முறையில் நாம் சரி செய்ய முடியும். முதலில் உளுந்தை ஊற வைக்கவே நமக்கு அதிக நேரம் தேவை இல்லை. சிலர் 3, 4 மணி நேரம் வரை ஊற வைப்பார்கள். அவ்வளவு நேரம் தேவை இல்லை. சரியாக ஒன்றரை மணி நேரம் உளுந்தை ஊற வைத்தால் போதும். உபரி அதிகம் தரும் பிராண்டட் உளுந்தாக இருந்தால் நான்கு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு உளுந்து சேர்த்தால் போதும்.

- Advertisement -

ஊற வைத்த உளுந்தை முதலில் மிக்சர் கிரைண்டரில் அரைத்து எடுக்க வேண்டும் என்பது தான் இதில் இருக்கும் சூட்சமம் ஆகும். மிக்ஸி ஜாரில் உளுந்தை பாதி பாதியாக சேர்த்து இரண்டிலிருந்து மூன்று முறை சுற்றி எடுக்க உளுந்தை நன்கு அரைபட்டு விடும். இதற்கு இரண்டு நிமிடம் கூட ஆகாது. அதன் பிறகு வழக்கம் போல் கிரைண்டரில் போட்டு அரைத்தால் சரியாக பத்து நிமிடத்தில் உளுந்து திரண்டு வெண்ணை போல வந்து விடும். நீங்கள் நேரத்தை கூட குறித்து வைத்துக் கொள்ளலாம்.

idly-maavu

மிக்ஸியில் அரைக்கும் பொழுதே ஊற வைத்த தண்ணீர் உளுந்து அரைப்பட போதுமானது. கிரைண்டரில் அரைக்கும் பொழுது தண்ணீர் தேவைப்பட்டால் ஸ்பூன் அளவிற்கு விட்டாலே போதும். அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம். கையில் எடுக்கும் பொழுது பந்து போல ஒட்டாமல் சூப்பராக வரும். உளுந்தை பாத்திரத்தில் போடும் பொழுது பொத்தென்று விழும். இது தான் சரியான பதமாக இருக்கும். இந்தப் பதத்தில் உளுந்தை நீங்கள் பத்தே நிமிடத்தில் அரைத்து எடுத்தால் குஷ்பூ இட்லியும், எண்ணெய் குடிக்காத புஸ்சென்று வரும் வடையும் வீட்டிலேயே செய்து அசத்தி விடலாம்.

இதையும் படிக்கலாமே
கொண்டைக்கடலையை வைத்து இந்த கட்லெட் செய்ய 10 நிமிடம் போதும். 2 ஸ்பூன் எண்ணெயில், மொறு மொறுப்பான, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் தயார்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.