உங்கள் வீட்டு சமையலறையில், அரிசியை எக்காரணத்தைக் கொண்டும் இப்படி எடுக்கவே கூடாது. உண்ணும் உணவிற்கே கஷ்டம் வந்துவிடும்.

ஒரு வீட்டிற்கு வாஸ்து என்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு நம் வீட்டில் குறிப்பிட்ட சில பொருட்களை அந்தந்த இடத்தில் முறையாக வைப்பதும் அவசியம். முக்கியமான சில பொருட்களை சரியான இடத்தில் வைத்து விட்டாலே பிரச்சனையில் பாதி முடிந்து விடும். அந்த வரிசையில் சமையலறையில் அரிசியை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதைப் பற்றியும், அந்த அரிசியை தினம்தோறும் சமைப்பதற்காக எப்படி எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

rice

சில பேர் வீட்டில் அரிசியை மூட்டையாக வாங்கி வைப்பார்கள். சில பேர் வீட்டில் மூட்டையில் இருக்கும் அரிசியை ட்ரம்மில் கொட்டியும் வைத்து உபயோகப்படுத்துவார்கள். சிலபேர் அரிசி மூட்டையை சமையலறையில் வைக்காமல், பொருட்களை சேகரித்து வைக்கும் ஸ்டோர் ரூமில் வைத்திருப்பார்கள். சில பேர் அரிசியை அலமாரிகளில் வைத்திருப்பார்கள். இதில் உங்கள் வீட்டில் எந்த இடத்தில் அரிசியை வைத்திருந்தாலும், தரைப்பகுதியில் தான் அந்த அரிசியை வைக்க வேண்டும். உயரமான இடத்தில் வைக்கக்கூடாது. கையை தூக்கி, உயரத்தில் இருந்து அரிசியை எப்போதுமே எடுக்கக்கூடாது.

குறிப்பிட்டு சொல்லப்போனால் தினம்தோறும் சமையலுக்குப் பயன்படுத்தும் அரிசியை சின்ன டப்பாவில் போட்டு, சமையல் அடுப்பு திண்ணைக்கு கீழே வைத்துக் கொள்வது நல்ல பலனை தரும். அதாவது அண்ண லட்சுமியை, நாம் ஒவ்வொரு முறை எடுக்கும்போதும் தலைவணங்கி, தலைகுனிந்து நமஸ்காரம் செய்து எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், நம் முன்னோர்கள் அரிசி மூட்டையை அடுப்புக்கு கீழ் உள்ள இடத்தில் வைத்து வந்தார்கள். ஒவ்வொரு முறையும் குனிந்து அரிசியை எடுப்பது நமஸ்காரம் செய்வதற்கு சமம்.

kuthir

ஸ்மார்ட் கிச்சன், ஷெல்ஃப், ரேக் என்று நம்முடைய நாகரீகம் வளர வளர சிலபேர் இந்த அரிசி வைக்கும் இடத்தையும் மாற்றிவிட்டார்கள். எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் தலைக்கு மேல் உள்ள அலமாரியில் அரிசியை வைக்கவே கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த காலத்தில் எல்லாம் ‘குதிர்’ என்று அரிசி சேமிக்கும் பானையில் அரிசியை கொட்டி வைத்திருப்பார்கள். உயரமான அந்தப் குதிரிலும், கீழ் பக்கத்தில்தான் கதவு இருக்கும். குனிந்து அந்தக் கதவைத் திறந்தால், அதனுள்ளே கையை விட்டு அரிசியை எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அரிசியை வைப்பதற்கு என்றும், எடுப்பதற்கு என்றும் இருக்கும் முறையை முடிந்தவரை கடைபிடிக்க பாருங்கள்! வீட்டில் தன தானியத்திற்கு எந்த ஒரு பஞ்சமும் ஏற்படாது என்ற தைரியத்தோடு நாம் வாழ்க்கையை நடத்தலாம்.

arisi-alavai

அடுத்ததாக சிலரது வீட்டில் அரிசியை அளப்பதற்கு டம்ளர் வைத்திருப்பார்கள். முடிந்தவரை ஆழாக்கு என்று சொல்லப்படும் ஒரு பொருளை, அரிசி அளக்க பயன்படுத்துவது மிகவும் நல்லது. அந்த ஆழாக்கில் எப்போதுமே 4 அரிசி இருக்க வேண்டும். காலியாக வைக்க கூடாது. அந்த ஆழாக்கு எப்போதுமே அரிசி மூட்டையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆழாக்காக இருந்தாலும் சரி. மரைக்கா என்று சொல்லப்படும் படியாக, இருந்தாலும் சரி. ஏதாவது ஒன்று அரிசியை அளப்பதற்கு மூட்டையிலோ அல்லது ட்ரமிலோ கட்டாயம் இருக்க வேண்டும் என்பதையும் மறக்க வேண்டாம். அரிசியை அளக்காமல் எடுத்து, உலை பானையில் போடவே கூடாது.

samayal

யார் சொல்லி யார்தான் கேட்பது? கணவன் சொல்ல, மனைவி கேட்பதில்லை. மனைவி சொல்வதை கணவன் கேட்பதில்லை. மாமியார் சொல்லி மருமகள் கேட்பதில்லை. மருமகள் சொல்வதை மாமியார் கேட்பதில்லை. இப்படி, ஒருவர் சொல்லை, ஒருவர் ஏன் கேட்க வேண்டும்? எதற்கு கேட்க வேண்டும்? என்று விதண்டாவாதம் பேசிப்பேசியே, எதையுமே நம் காதுகளில் கேட்காமல் விட்டு விட்டோமோ எண்ணமோ? இன்று நம்முடைய நிலைமை மாறி, சூழ்நிலை மாறி, சந்தோஷம் மாறி, கஷ்டத்தில் தள்ளப்பட்டு இருக்கின்றோம். இனிமேலாவது  முன்னோர்கள் சொல்லும் பழக்கத்தை கேட்டு நடந்து தான் பார்ப்போமே!

இதையும் படிக்கலாமே
முருக பெருமான் தனக்கு நிகராக, குரு பகவானை திருச்செந்தூரில் வழிபட சொன்னதன் காரணம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sapadu seivathu eppadi Tamil. Rice Tamil. Arisi alakkum padi. Arisi alakum padi. Sappadu seivathu eppadi. Satham seivathu eppadi.