இனி கூலிங்கே ஆகாதுன்னு முடிவு பண்ண உங்க பழைய பிரிட்ஜை கூட, ரொம்ப சுலபமா செலவே இல்லாம சூப்பரா ஓட வெச்சிடலாம். என்னங்க ஆச்சரியமா இருக்கா! வாங்க அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பிரிட்ஜ் இல்லாமல் இருக்கவே முடியாது என்கிற அளவிற்கு பிரிட்ஜ் நம் வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது. இப்படியான சூழ்நிலையில் ஒரு சில நேரம் நன்றாக ஓடிக் கொண்டிருந்த பிரிட்ஜ் திடீரென நின்று விடும். சில சமயங்களில் லைட் எரியும் ஆனால் கூலிங் மட்டும் ஆகாது. இப்படி ஆனால் உடனே கம்ப்ரஸர் மாற்றி அதிக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இனி அப்படி செய்யாமல் முதலில் இந்த ஒரு சின்ன வேலை மட்டும் நீங்கள் செய்து விடுங்கள். பிரிட்ஜ் நன்றாக கூலிங் ஆகும். வாங்க அது என்னன்னு நாம இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பிரிட்ஜ் கூலிங் ஆகாமல் நின்று விட்டால் முதலில் நாம் செய்ய வேண்டியது ஃப்ரிட்ஜில் இணைத்திருக்கும் மின் இணைப்புகள் அனைத்தையும் நிறுத்தி விட வேண்டும். அதன் பிறகு ஃப்ரிட்ஜில் உள்ள பொருட்களை எல்லாம் வெளியில் எடுத்து வைத்த பிறகு பிரிட்ஜை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக ஃப்ரிட்ஜ்ஜின் பின்பகுதியை நீங்கள் இருக்கும் பக்கமாக திருப்பி வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் நீங்கள் பரிசோதிக்க வசதியாக இருக்கும்.

- Advertisement -

ஃப்ரிட்ஜின் பின் பகுதியில் தான் கம்ப்ரஸர் இருக்கும். அதன் பக்கத்தில் கருப்பு நிறத்தில் ஒரு கவர் இருக்கும் அதை லேசாக பிடித்து வெளியே எடுத்தால் அது தனியாக வந்து விடும். அடுத்தாக கவர் எடுத்த பிறகு அந்த இடத்தில் ஒரு சின்ன சாதனம் இருக்கும் அதன் பெயர் ரிலே.

அதை முதலில் ஃப்ரிட்ஜில் இருந்து தனியாக எடுக்க வேண்டும். அதற்கு அதன் மேலே நீங்கள் லேசாக அழுத்தி பிடித்து வெளியில் எடுத்தால் அது தனியாக வந்து விடும். அந்த ரிலேவில் இரண்டு ஒயர் இணைப்புகள் இருக்கும். அதையும் நீங்கள் தனியாக எடுக்க வேண்டும்.

- Advertisement -

ஒயர் எடுக்கும் பொழுது எந்த ஒயர் எதில் இருந்தது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் நீங்கள் மறுபடியும் பொருத்தும் போது அதை சரியாக செய்ய முடியும். ரிலேவில் இருந்து ஒயரை எடுத்த பிறகு அதை அப்படியே வைத்து விடுங்கள்.

இப்பொழுது நல்ல நிலையில் இருக்கும் டெஸ்டரை எடுத்துக் கொள்ளுங்கள். டெஸ்டரின் பின்புறம் நாம் துணிக்கு பயன்படுத்தும் பின்னை வைத்து பின் விலகி விடாமல் இருப்பதற்காக டேப்பை எடுத்துக் சுற்றி கொள்ளுங்கள். இப்போது டெஸ்டரை பிளக் பாயிண்ட்யில் வைத்து வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது நாம் பிரிட்ஜில் இருந்து தனியாக கழட்டி வைத்த ரிலேவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று துளைகள் இருக்கும். அதை தான் இப்போது நாம் பரிசோதிக்க போகிறோம். அதற்கு டெஸ்டரை பிளக் பாயிண்ட் சொருகிய பிறகு டெஸ்டரின் மேல் நாம் ஏற்கனவே டேப் வைத்து சுற்றிய பின் இருக்கும். அந்த பின்னில் ரிலேவில் இருக்கும் ஓட்டையை சொருக வேண்டும். அதன் பக்கத்தில் சின்ன கம்பி போன்ற அமைப்பு இருக்கும் அதை நாம் கை வைக்கும் லேசாக அழுத்த வேண்டும்.

அப்போது டெஸ்டரில் லைட் எரிந்தால் ரிலே நன்றாக உள்ளது என்று அர்த்தம். அடுத்து ரிலேவில் உள்ள மூன்று துளைகளையும் டெஸ்டரில் வைத்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் ஒன்று எரியவில்லை என்றாலும், அது வேலை செய்யவில்லை என்று அர்த்தம். நீங்கள் அருகில் உள்ள எலக்ட்ரானிக் சாதனங்கள் விற்கும் கடையில் இந்த ரிலேவை வாங்கி வந்து மாற்றி விட்டால் போதும். உங்கள் பிரிட்ஜ் பழையபடி கூலிங் ஆகும்.

ஒரு சில நேரங்களில் ரிலேவின் மேலே ஓ. எல். பி என்கிற சின்ன ஒரு பொருள் இருக்கும். அது உங்களுக்கு பழுது அடைந்து விட்டாலும், பிரிட்ஜ் ஓடாது. அதையும் இதே முறையில், அதில் இருக்கும் துளையை டெஸ்டரில் இருக்கும் பின்னில் வைத்து இதன் பக்கத்தில் ஒரு சின்ன கம்பி போன்ற அமைப்பை உங்கள் கை வைத்து அழுத்த வேண்டும். டெஸ்டரில் லைட் எரிந்தால் இந்த பொருளும் பழுதாகவில்லை என்று அர்த்தம். ஒரு வேளை எரியவில்லை என்றால் இதையும் மாற்றி வேறு பொருத்தி விடுங்கள்.

இவை அனைத்துமே சரியாக இருந்தும் பிரிட்ஜ் ஓடவில்லை என்றால் மட்டுமே கம்ப்ரஸர் பழுதாகி விட்டது என்று பொருள். அப்பொழுது நீங்கள் கம்ப்ரஸரை மாற்றி கொள்ளலாம். எப்பொழுதுமே பிரிட்ஜ் ஓடவில்லை என்றவுடன் உடனடியாக கம்ப்ரஸரை மாற்ற வேண்டும் என்று சொன்னால், நீங்கள் ஒரு முறை இந்த ஒரு சின்ன பரிசோதனை மட்டும் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் அதிக பணத்தை மிச்சப்படுத்தி விடலாம்.

இதையும் படிக்கலாமே: குக்கரில் தண்ணீர் குறைவாக வைத்து அடிக்கடி தீய விடும் பழக்கம் உங்களுக்கு இருக்குதா? இனிமே குக்கர் அடி பிடித்து, கருகிப் போனாலும் கூட உள்ளே இருக்கும் பொருளில், கருகிய வாடை வீசவே வீசாது. இந்த டிப்ஸ் உங்களுக்கு தெரிஞ்சா.

இந்தப் பதிவில் உள்ள குறிப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இனி வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் பொருட்களின் சின்ன சின்ன பழுதுகளை நாமே சரி பார்த்து விடலாம். இதனால் பணமும் மிச்சமாகும் நமக்கும் நிறைய தகவல்களை தெரிந்து கொண்ட அனுபவம் கிடைக்கும்.

- Advertisement -