காப்பர் பாட்டம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் அடிபிடித்த கறை, உப்பு கறை நொடியில் நீங்க இந்த 2 சமையலறை பொருளை பயன்படுத்துங்க!

copper-vessel-lemon
- Advertisement -

மண் பாண்டங்கள், அலுமினிய பாத்திரங்கள், ஈய பாத்திரங்கள் என்கிற வரிசையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், காப்பர் பாட்டம் என்று ஒவ்வொன்றாக மாறி வருகிறது. இந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் காப்பர் பாட்டம் உபயோகிப்பது அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் புத்தம் புதியதாக இருந்தாலும் அது பழக பழக அடிபிடித்த கரை, உப்பு கரை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதை ரொம்பவும் கஷ்டப்படாமல் சுலபமாக எப்படி போக்குவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில் நீங்கள் தண்ணீர் காய வைத்தாலோ அல்லது முட்டை வேக வைப்பது, உருளைக்கிழங்கு வேக வைப்பது போன்றவற்றை பைப் தண்ணீரில் செய்யும் பொழுது அதில் இருக்கும் உப்பு கரை படிந்து வெள்ளை வெள்ளையாக திட்டு திட்டுக்களாக படிய ஆரம்பித்து விடும். இதை என்னதான் சோப்பு போட்டு தேய்த்தாலும் பாத்திரங்களில் கீறல் விழுகுமே தவிர அவ்வளவு எளிதாக நீக்கி விட முடியாது.

- Advertisement -

இது போன்ற ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உப்பு கறைகளை ரொம்பவே சுலபமாக நீக்குவதற்கு அரை மூடி எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் போல் உப்பு தூவி கரை உள்ள இடங்களில் அழுத்தி தேயுங்கள். உப்புடன் எலுமிச்சை சாறு வினை புரிந்து ஸ்டெயின்லெஸ் உப்பு கறைகளை எளிதாக நீக்கும். ஒரு ஐந்து நிமிடம் இது போல் தேய்த்து விட்டு அப்படியே ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு சாதாரண ஸ்க்ரப்பர் பயன்படுத்தி சோப்பு போட்டு கழுவினால் ரொம்பவும் சுலபமாக இந்த கரைகள் நீங்கிவிடும்.

இது நாள்பட்ட உப்பு கரை என்றால் வேலைக்கு ஆகாது. எனவே உப்பு தண்ணீரில் பாத்திரங்களை பயன்படுத்துபவர்கள் அதை உடனுக்குடன் இது போல கழுவி வைத்துக் கொள்வது நல்லது. இதே முறையில் தான் காப்பர் பாட்டம் பாத்திரங்கள் உபயோகிப்பவர்கள் அதன் அடியில் இருக்கும் கரி பிடித்த கரையை நீக்க வேண்டும். உள்ளே ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் வெளியே அடிப்பகுதியில் மட்டும் காப்பர் பாட்டம் கோட்டிங் கொடுத்து இருப்பார்கள். இந்த கோட்டிங்கில் நாளடைவில் கரி பிடித்து கருப்பாக வெளுத்து போய் காணப்படும்.

- Advertisement -

கரி பிடித்த இந்த அடிப்பகுதியை சுத்தம் செய்வது ரொம்ப சிரமமாக இருக்கும். இதற்கும் இதே போல தூள் உப்பை கரி பிடித்த இடங்களில் தூவி விடுங்கள். ஒரு ரெண்டு நிமிடம் கழித்து அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு அந்த மூடியிலேயே நன்கு தேயுங்கள். உப்பும், எலுமிச்சையும் வினை புரிந்து கரி பிடித்த இடங்களில் இருக்கும் கரியை கருப்பு கருப்பாக, கொஞ்சம் கொஞ்சமாக நீக்கும். இது காப்பர் பாட்டம் இருக்கும் எல்லா பகுதியிலும் படும்படி நன்கு தேய்த்து விடுங்கள்.

அதன் பிறகு சோப்பு எதுவும் போடாமல் சாதாரண தண்ணீரால் கழுவி பாருங்கள். புதிது போல காப்பர் பாட்டம் மின்ன ஆரம்பிக்கும். அதன் பிறகு சாதாரண சோப்பு பயன்படுத்தி கழுவி கொள்ளுங்கள். இதையும் நாள்பட்ட கரியின் மீது உபயோகிக்க கூடாது. ரொம்ப கரி பிடித்திருந்தால் புளி தண்ணீரை பேஸ்ட் போல கரைத்து அப்ளை செய்து பின்னர் இது போல் உப்பு, எலுமிச்சையும் சேர்த்து தேய்த்து விடலாம். புளி தண்ணீரை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உப்பு கரை உள்ள பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க நாள்பட்ட உப்பு கரையும் எளிதில் நீங்கும்.

- Advertisement -